மேலும் அறிய
Advertisement
'நதியே நஞ்சாக மாறும் அவலம்'-பாலாற்றில் கழிவுநீரை கலக்கும் ஆலைகள் மீது நடவடிக்கை- சீமான் கோரிக்கை
பாலாற்றில் தொழிற்சாலை கழிவுகளை கலக்கும் சுத்திகரிப்பு ஆலைகளின் பேரழிவு போக்கினை தமிழக அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தோல் பதனிடுதல், சாயத் தொழில், சர்க்கரைத் தொழில்கள் போன்ற நீர் சார்ந்த தொழில்கள் மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர்கள் சுற்றுசூழலை பாதிக்காத வண்ணம், தமிழ் நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ராணிப்பேட்டை நகரில் தோல் தொழிற்சாலை கழிவுகளைச் சுத்திகரிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் இரண்டு சுத்திகரிப்பு மையங்களை அமைக்க அனுமதி அளித்திருந்தபோதிலும், தொடர்ந்து பல தொழிற்சாலைகள் விதிமுறைகளை மீறி, தொடர்ந்து கழிவுநீர்களைச் சுத்திகரிக்காமல் நீர்நிலைகளில் திறந்து விட்டு வருகின்றனர் .
பாலாற்றில் தொழிற்சாலைக்கழிவுகளைக் கலக்கும் சுத்திகரிப்பு ஆலைகளின் பேரழிவுப்போக்கினை தமிழக அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்!https://t.co/xbYADwbR7u@CMOTamilnadu @mkstalin pic.twitter.com/xXFPwb5egX
— சீமான் (@SeemanOfficial) August 26, 2021 ">இதனைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார் அதில் அவர் " ராணிப்பேட்டை மாவட்டம், மேல்விசாரம் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் தனியார் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகள் தொழிற்சாலைக்கழிவுகளைச் சுத்திகரிக்காது பாலாற்றில் கலந்துவிடும் செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன். தோல் பதனிடுதல், சாயத் தொழில், சர்க்கரைத் தொழில்கள் போன்ற நீர் சார்ந்த தொழில்கள் மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகள் பாலாறு ஆற்றின் கரையில் அமைந்துள்ளன. இவற்றில் உருவாகும் இரசாயன கழிவுகள் சுத்திகரிப்பு நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, தொழிற்சாலையின் மறுபயன்பாட்டிற்கு உகந்த வகையில் சுத்திகரிக்கப்பட வேண்டும். ஆனால் தொழிற்சாலைகளிலிருந்து சுத்திகரிக்கப்படாத அல்லது ஓரளவு மட்டும் சுத்திகரிக்கப்பட்ட கழிவுகளை அதிக அளவில் ஆற்றிலே விடப்படுகிறது.
வேலூர், ராணிப்பேட்டை பகுதிகளில் இயங்கி வரும் தோல் தொழிற்சாலைகள் வெளியிடும் கழிவுகள் குறித்துப் பலமுறை நீதிமன்றங்களும், மாசுக்கட்டுப்பாடு வாரியமும் கண்டித்ததோடு நடவடிக்கைகளும் எடுத்துள்ளன. இருப்பினும் தொடர்ந்து கழிவுகள் பாலாற்றில் கலக்கப்படுவது குறைந்தபாடில்லை. பாலாற்றில் கலக்கப்படும் இரசாயனக்கழிவுகளால் அப்பகுதியின் நிலத்தடி நீர் முற்றிலுமாக மாசடைந்து மக்களின் குடிநீருக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளதோடு, பாலாற்று நீரை அருந்தும் கால்நடைகளும் உயிரிழக்கும் துயரங்கள் நேர்வது பெரும் வேதனையைத் தருகிறது. அளவுக்கதிகமான கழிவுநீர் கலப்பால் வேளாண்மை செய்யமுடியாத அளவிற்கு நிலம் மாசுபட்டு, மலட்டுத்தன்மை அடைந்துள்ளதால், அப்பகுதி விவசாயிகள் வேளாண்மையினை முழுவதுமாகக் கைவிட்டு, மாற்று வேலைக்குச் செல்ல வேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் மிதமிஞ்சிய தொழிற்சாலைக் கழிவுகளால் நிலம், நீர், காற்று என யாவும் பெருமளவு கெட்டு, சுற்றுச்சூழல் முற்றாகச் சீர்குலைவதோடு, பல்வேறு கொடிய நோய்களுக்கும் அப்பகுதியினர் ஆளாகி மக்களின் சுகாதார வாழ்வும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு ஏற்படும் இத்தகைய பாதிப்புகள் குறித்தும், நள்ளிரவு நேரங்களில் தொழிற்சாலைகளிடமிருந்து பெறப்படும் கழிவுநீரைப் பாலாற்றில் கலந்துவிடும் சட்டவிரோதச் செயல்பாடுகள் குறித்தும் பொதுமக்கள் சார்பாகவும், நாம் தமிழர் கட்சி சார்பாகவும் பலமுறை புகாரளிக்கப்பட்டும் மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காது சுத்திகரிப்பு ஆலை நிர்வாகத்திற்குத் துணைபோவது வன்மையான கண்டனத்திற்குரியது. ஏற்கனவே, ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே 30க்கும் மேற்பட்ட தடுப்பணைகளைக் கட்டி தமிழகத்திற்கு வரவேண்டிய நீர்வளத்தை மறிப்பதாலும், கட்டுப்பாடற்ற தொடர் மணற்கொள்ளையாலும் பாலாறு வறண்டு, ஓடை போலக் குறுகிச் சுருங்கிவிட்டது.
தற்போது நள்ளிரவு நேரங்களில் தொழிற்சாலைகளிடமிருந்து பெறப்படும் கழிவுநீரைச் சுத்திகரித்து மீண்டும் தொழிற்சாலைகளுக்குத் தராமல் நேரடியாக ஆற்றிற்குச் செல்லும் ஓடையில் கழிவு நீராகவே கலப்பதால் பாலாறு தன்னியல்பையும், உயிரோட்டத்தையும் இழந்து, நதியே நஞ்சாக மாறி நிற்கும் நிலை பெருங்கவியைத் தருகிறது. தொழிற்சாலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து சட்டவிரோதமாகத் திறந்துவிடப்படும் ரசாயன கழிவுநீர் பாலாற்றில் கலக்கும் காட்சிகள் ஊடகங்களின் வாயிலாக ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளாதது ஆட்சியாளர்களின் அலட்சியத்தையும் அக்கறையின்மையையும் தான் காட்டுகிறது. ஆகவே, இச்சிக்கலில் தமிழக அரசு உரியக் கவனம் செலுத்தி, தொழிற்சாலைக்கழிவுகளைப் பாலாற்றில் கலக்கும் தனியார் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நிரந்தரமாகத் தடைவிதிக்க வேண்டுமெனவும், ராணிப்பேட்டை பகுதி மண்ணுக்கும், மக்களுக்கும் கேடு விளைவிக்கக்கூடிய நாசகாரத்தொழிற்சாலைகளைக் கண்டறிந்து அவற்றை உடனடியாக மூட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். என்று அவரது அறிக்கையில் தெரிவித்துள்ளார் .
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion