Seeman | கிறிஸ்துவர், இஸ்லாமியர்களே தாய் மதத்திற்கு திரும்புங்கள் - சீமான்
சரித்திரப்படி நாங்கள் இந்து இல்லை. வெள்ளைக்காரன் போட்ட சட்டப்படி நாங்கள் இந்து. அதை நான் ஏற்கவில்லை, எதிர்க்கிறேன்.
![Seeman | கிறிஸ்துவர், இஸ்லாமியர்களே தாய் மதத்திற்கு திரும்புங்கள் - சீமான் naam tamilar party leader seeman speech on christians and muslims Seeman | கிறிஸ்துவர், இஸ்லாமியர்களே தாய் மதத்திற்கு திரும்புங்கள் - சீமான்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/01/58ad7e15c9c1951a56bf161478bb94ed_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் தாய் மதத்திற்கு திரும்பி வர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அழைப்பு விடுத்துள்ளார்.
பனைச்சந்தைத் திருவிழாவில் கலந்துகொண்ட சீமான் பேசுகையில், “என்னுடைய மகனை முருகன் கோயிலுக்கு அழைத்து சென்றபோது குருக்கள் என்ன கோத்திரம் என்று கேட்டார்கள். அதற்கு நான் சிவகோத்திரன் என்று கூறினேன். ஏனென்றால், நான் சிவசமயம். என் அப்பா உடைய சொத்து பத்திரத்தில் சிவ கோத்திரம் என்றுள்ளது. இன்றைக்கு இந்து என்று எழுதுகிறார்கள். அன்றைக்கு சிவசமயம் என்று எழுதப்பட்டு இருக்கிறது. எங்கள் சமயம் சிவனை வழிபடுகிற சிவசமயம், முருகனை வழிபடுகிற சைவம், மாயோனை வழிபடுகிற வைணவம். வைணவத்தை நாங்கள் மாலியம் என்கிறோம். இவ்வளவு சமயங்கள் இருந்திருக்கிறது. வெள்ளைக்காரர் வில்லியம் ஹோன்ஸ் போட்ட கையெழுத்தால், பெளத்தம், சீக்கியம், சைவன், பார்சீ ஆகியவைகளை இந்துவா நாங்கள் கருதுகிறோம். சரித்திரப்படி நாங்கள் இந்து இல்லை. வெள்ளைக்காரன் போட்ட சட்டப்படி நாங்கள் இந்து. அதை நான் ஏற்கவில்லை, எதிர்க்கிறேன்.
வரும் அக்டோபர் 16, 17ம் தேதிகளில், நாம் தமிழர் - சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுக்கவிருக்கும் பனைச்சந்தைத் திருவிழாவில், உறவுகள் அனைவரும் குடும்பத்துடன் பெருந்திரளாகப் பங்கேற்று, பனையால் நாமும் நம்மால் பனையும் வாழ வழிசெய்யும் தலைசிறந்த தொடக்கத்தை அமைப்போம்!https://t.co/FKIQMvJ6aN pic.twitter.com/pe1TM5byos
— சீமான் (@SeemanOfficial) October 14, 2021
தமிழன் இந்துவே கிடையாது. கிறிஸ்துவமும், இஸ்லாமியமும் தமிழன் சமயமே இல்லையே.ஒன்று ஐரோப்பிய மதம், இன்னொன்று அரேபிய மதம். என்னுடைய சமயம் சைவம். என்னுடைய சமயம் மாலியம். என்னுடைய சமயம் சிவ சமயம். அதை தெரியாமல் நீங்கள் வந்து மீளனும் என்று கூறுகிறீர்கள். மரச்செக்கு எண்ணெய்க்கு வரமாதிரி, திரும்பி வாருங்கள். சர்க்கரை சீனியைவிட்டு கருப்பட்டிக்கு வரமாதிரி வாருங்கள். அந்தமாதிரி நான் அழைக்கிறேன்” என்று கூறினார்.
சீமான் பேச்சை மேலும் கேட்க கீழே உள்ள வீடியோவை காணுங்கள்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)