விஜய் பாஜகவுடன் கூட்டணி வைப்பாரா? - எம்பி சசிகாந்த் செந்தில் சொல்வது என்ன?
திமுகவுடனான கூட்டணி சரியில்லை என்பதற்காக கூட்டணியை விட்டு வெளியே வரவில்லை - எம்பி சசி காந்த் செந்தில்

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் மாற்றத்திற்கான தேர்தல் எனவும், பாஜக ஒருபோதும் தமிழகத்தில் கால் ஊன்ற காங்கிரஸ் அனுமதிக்காது என திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் தெரிவித்தார்.
திருவள்ளூர் உழவர் சந்தை அருகே உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பு குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் திருவள்ளூர் வடக்கு மாவட்ட தலைவர் சசிகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்.
தவெக பாஜகவுடன் கூட்டணி வைக்காது
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திருவள்ளூர் ரயில் நிலையத்தில் மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை மூன்று மாதங்களுக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்க முயற்சிகளை எடுக்கப்போவதாகவும், தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் என்பது ஒரு திருப்புமுனையான தேர்தல் என்றும் இது மாற்றத்திற்காகத்தான் மக்கள் வாக்களித்து இருப்பதாகவும், தவெக பாஜகவுடன் கூட்டணி வைக்க கூடாது என்றும், அது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல என்றும், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, இடதுசாரி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைந்திருப்பதாகவும், தவெக பாஜகவோடு கூட்டணி வைக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் ஆதரவு தெரிவித்து இருப்பதாகவும், கண்டிப்பாக தவெக பாஜகவுடன் கூட்டணி வைக்காது என நம்புவதாகவும், தமிழகத்தை மதசார்பற்ற மாநிலமாக வைத்து கொள்ளத்தான் காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு அளித்திருப்பதாகவும், அப்படி ஆதரவு கொடுக்காமல் இருந்திருந்தால் அது பெரிய தவறாக முடிந்திருக்கும் என்றும் தெரிவித்தார்.
எந்த ஒரு தவறும் நடக்காமல் காங்கிரஸ் பார்த்து கொள்ளும்
மேலும், திமுகவுடனான கூட்டணி சரியில்லை என்பதற்காக கூட்டணியை விட்டு வெளியே வரவில்லை காலத்தின் காட்டாயம் என்றும் தமிழ்நாட்டின் நலனுக்காகவும், தமிழக மக்களின் நலனுக்காகவும் தான் காங்கிரஸ் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும், மதவாத சக்திகளை எதிர்ப்பதில் முதல் எதிர்ப்பு குரலாக காங்கிரஸ் கட்சியினர் இருப்பார்கள் என்றும், தமிழகத்தில் பாஜக ஒருபோதும் கால் ஊன்ற காங்கிரஸ் அனுமதிக்காது என்றும், தமிழகத்தில் மதசார்பற்ற ஆட்சி அமைய வேண்டும் என்பதே காங்கிரஸின் கொள்கை என்றும் தமிழக மக்களுக்கு எந்த ஒரு தவறும் நடக்காமல் காங்கிரஸ் பார்த்து கொள்ளும் என அவர் தெரிவித்தார்.
Before You Go
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















