மேலும் அறிய

TN Cabinet: தவெக அமைச்சரவையில் காங்கிரஸ்.. திமுகவை சீண்டிய மாணிக்கம் தாகூர்.. என்ன சொன்னார் தெரியுமா?

தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சியில் பங்கு பெற காங்கிரஸ் சுமார் 59 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த பல காலங்களிலும் காங்கிரஸ் தனது கூட்டணி கட்சிகளுக்கு பலமுறை துணை நின்றது என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

59 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் தமிழ்நாடு அரசின் அமைச்சரவையில் இடம்பெறுவது ஒரு வரலாற்று தருணம் என மாணிக்கம் தாகூர் எம்.பி., நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக  மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள பதிவில், “1967 தான் தமிழ்நாட்டில் காங்கிரஸ் அமைச்சர்கள் பதவி வகித்த கடைசி காலம்.அந்த காலத்தின் கடைசி காங்கிரஸ் அமைச்சர்கள் ஜோதி வெங்கடாசலம் – சுகாதாரம், ஆர். வெங்கட்ராமன் – தொழில் & மின்சாரம், பி. கக்கன் – உள்துறை,  வி. ராமையா – பொதுப்பணித்துறை, என். நல்லசேனபதி சர்க்கரை மன்றாடியார் – கூட்டுறவு, எஸ். எம். அப்துல் மஜீத் – உள்ளாட்சி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

அதன் பிறகு, தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சியில் பங்கு பெற காங்கிரஸ் சுமார் 59 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த பல காலங்களிலும் காங்கிரஸ் தனது கூட்டணி கட்சிகளுக்கு பலமுறை துணை நின்றது. திமுகவும் அதிமுகவும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க காங்கிரஸ் முக்கிய பங்கு வகித்தது. குறிப்பாக 2006க்கு பிறகு திமுக (96 இடங்கள்) அரசு காங்கிரஸ் (38 இடங்கள்) ஆதரவில்தான் செயல்பட்டது. 2009ல் இடதுசாரிகளும் பாமகவும் கூட்டணியை விட்டு வெளியேறிய பிறகும், காங்கிரஸ் உறுதியாக நின்று அரசை நிலைநிறுத்தியது.

ஆனால் இத்தனை ஆதரவுக்கும் பிறகும், காங்கிரஸுக்கு ஆட்சியில் உண்மையான பங்கு வழங்கப்படவில்லை. இந்தியாவின் நம்பிக்கை ராகுல் காந்தி எப்போதும் அரசியல் என்பது பரஸ்பர மரியாதை, நட்பு, இணைப்பு மற்றும் கூட்டணி கட்சிகளின் கண்ணியத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்று நம்பினார்.

2025 டிசம்பரில், அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர் கிறிஸ் சோடங்கர் அந்த சிந்தனையை முன்னெடுத்து, கூட்டணி ஆட்சி, அதிகாரப் பகிர்வு மற்றும் கூட்டணி மரியாதை என்ற புதிய அரசியல் திசையை வழங்கினார். ஆனால் திமுக தலைமையே அந்த யோசனையை நிராகரித்து, “தமிழ்நாடு கூட்டணி அரசியலை ஏற்காது” என்று வாதிட்டது.

தமிழ்நாட்டு மக்கள் அதற்கு வேறொரு பதிலை வழங்கினர். தவெக தலைவர் விஜய் மட்டும் தான் அன்று வெளிப்படையாக கூட்டணி ஆட்சி மற்றும் கூட்டணி மரியாதை குறித்து பேசினார்.மக்கள் பழைய ஒற்றைக் கட்சி ஆதிக்க அரசியலை நிராகரித்து, அவரது தலைமையிலான கூட்டணி அரசுக்கு ஆதரவு அளித்தனர். இந்த தருணத்தை இன்னும் உணர்ச்சிபூர்வமாக மாற்ற 59 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு அமைச்சரவையில் காங்கிரஸ் அமைச்சர்கள் மீண்டும் பதவியேற்கும் இந்த நாள், எனது அன்புத் தலைவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளாக இருப்பதுதான்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திதான் தமிழ்நாட்டில் “காமராஜர் ஆட்சி” திரும்ப வேண்டும் என்ற அரசியல் முழக்கத்தை கொடுத்தவர். ஆனால் 1989க்கு பிறகு, காங்கிரஸ் அந்த பாதையை தீவிரமாக முன்னெடுக்கவில்லை. தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சிக்காக தன்னை மறுசீரமைக்கவும் முயற்சிக்கவில்லை.

59 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கதர் ஆடை அணிந்த காங்கிரஸ் அமைச்சர்கள் தமிழ்நாடு அமைச்சரவையில் அமர்கிறார்கள். அது வெறும் அரசியல் நிகழ்வு அல்ல. ஒரு உணர்வு. ஒரு வரலாற்று தருணம். காமராஜர் காலத்தின் அரசியல் மரபு, எளிமை, தேசிய சிந்தனை, தியாக அரசியல் மற்றும் கூட்டணி மரியாதை மீண்டும் தமிழ்நாட்டு ஆட்சியில் இடம் பெறும் தருணம் இது.

கதர் ஆடை மீண்டும் அமைச்சரவை மேசையில் அமருவது அது வெறும் ஆடை அல்ல, ஒரு அரசியல் பாரம்பரியம். ஒரு சிந்தனை. ஒரு தியாகத்தின் அடையாளம்.தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி தலைவர் ராஜேஷ் குமார் MLA மற்றும் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் பி. விஸ்வநாதன் MLA ஆகியோர் விஜய் தலைமையிலான அரசில் அமைச்சர்களாக பொறுப்பேற்கிறார்கள் என்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி.

தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும் அவர்கள் நிறைவேற்றுவார்கள் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இந்தியாவின் நம்பிக்கை ராகுல் காந்தி முன்வைக்கும் மக்கள் நலன், சமூக நீதி, இணைப்பு, பரஸ்பர மரியாதை மற்றும் ஏழை எளிய மக்களை மையமாகக் கொண்ட ஆட்சிக் கண்ணோட்டத்தை செயல்படுத்தும் அரசாக இது அமையும் என்று நம்புகிறோம்.

நாளை (இன்று) காலை, ஸ்ரீபெரும்புதூரில் எங்கள் அன்புத் தலைவர் ராஜீவ் காந்திக்கு மரியாதை செலுத்திவிட்டு, அதன் பிறகு இந்த வரலாற்று சிறப்புமிக்க பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறோம். இன்று, பல ஆண்டுகளாக எண்ணற்ற காங்கிரஸ் தொண்டர்கள் அனுபவித்த தியாகம், விசுவாசம், அவமதிப்பு மற்றும் பொறுமைக்கு ஒரு பதில் கிடைத்திருக்கிறது.

ஒரு காங்கிரஸ் தொண்டனாக, இது என் அரசியல் வாழ்க்கையின் மிக முக்கியமான நாட்களில் ஒன்று. இது தமிழ்நாடு காங்கிரஸின் ஒரு அரசியல் தருணம் மட்டும் அல்ல. இந்திய காங்கிரஸின் புதிய அரசியல் மாதிரி. ஒரு புதிய தொடக்கம். புதிய தொடக்கம். புதிய நம்பிக்கை. கூட்டணிக்கு மரியாதை கொடுத்த முதலமைச்சர் விஜய்க்கு  பாராட்டுக்கள் என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

புதிதாக வீடு அல்லது நிலம் வாங்குறீங்களா ? பட்டா விஷயத்துல இந்தத் தப்பை மட்டும் பண்ணிடாதீங்க
புதிதாக வீடு அல்லது நிலம் வாங்குறீங்களா ? பட்டா விஷயத்துல இந்தத் தப்பை மட்டும் பண்ணிடாதீங்க
"வீடு பார்க்கலாம் என பைக்கில் அழைத்துச் சென்ற கணவன் " இறுதியில் நடந்த பேரதிர்ச்சி சம்பவம்
நவ.18 முதல் மீண்டும் திறக்கப்படும் வண்டலூர் பூங்கா! - பறவைகள் பகுதியில் பார்வையாளர்களுக்கு அனுமதி!
நவ.18 முதல் மீண்டும் திறக்கப்படும் வண்டலூர் பூங்கா! - பறவைகள் பகுதியில் பார்வையாளர்களுக்கு அனுமதி!
" பார் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை " தவெக நிர்வாகிகள் 2 பேர் கைது

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஓராண்டுக்கு CHAT GPT PLUS சேவை இலவசம்! - யார் யாருக்கு சலுகை? ஓபன் ஏஐ வெளியிட்ட அசத்தல் ஆபர் என்ன?
ஓராண்டுக்கு CHAT GPT PLUS சேவை இலவசம்! - யார் யாருக்கு சலுகை? ஓபன் ஏஐ வெளியிட்ட அசத்தல் ஆபர் என்ன?
Chennai Power Cut: எந்த வேலை இருந்தாலும் 10 மணிக்குள்ளே முடிச்சுடுங்க.. சென்னையில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை?
Chennai Power Cut: எந்த வேலை இருந்தாலும் 10 மணிக்குள்ளே முடிச்சுடுங்க.. சென்னையில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை?
Nellai Mubarak: எஸ்டிபிஐ கட்சியிலிருந்து நெல்லை முபாரக் விலகல்.. என்ன காரணம்? அடுத்து இணையப்போகும் கட்சி எது?
Nellai Mubarak: எஸ்டிபிஐ கட்சியிலிருந்து நெல்லை முபாரக் விலகல்.. என்ன காரணம்? அடுத்து இணையப்போகும் கட்சி எது?
நவ.18 முதல் மீண்டும் திறக்கப்படும் வண்டலூர் பூங்கா! - பறவைகள் பகுதியில் பார்வையாளர்களுக்கு அனுமதி!
நவ.18 முதல் மீண்டும் திறக்கப்படும் வண்டலூர் பூங்கா! - பறவைகள் பகுதியில் பார்வையாளர்களுக்கு அனுமதி!
Annan Seer Thittam: பெண்களுக்கு சூப்பர் அறிவிப்பு! அண்ணன் சீர் திட்டம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? இதோ முழு விவரம்
Annan Seer Thittam: பெண்களுக்கு சூப்பர் அறிவிப்பு! அண்ணன் சீர் திட்டம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? இதோ முழு விவரம்
TVK: இனி யாராவது ஓவராக ஆட்டம் போட்டால் பதவி காலி.. அதுமட்டுமல்ல.. தவெக பொதுச்செயலாளர் எச்சரிக்கை
TVK: இனி யாராவது ஓவராக ஆட்டம் போட்டால் பதவி காலி.. அதுமட்டுமல்ல.. தவெக பொதுச்செயலாளர் எச்சரிக்கை
MS Dhoni Retirement: ரசிகர்களுக்கு இடியை இறக்கிய சிஎஸ்கே!.....ஐபிஎல்லில் இருந்து ஓய்வுபெற்றார் தோனி!
MS Dhoni Retirement: ரசிகர்களுக்கு இடியை இறக்கிய சிஎஸ்கே!.....ஐபிஎல்லில் இருந்து ஓய்வுபெற்றார் தோனி!
ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறும் தோனி - திமுக தலைவர் ஸ்டாலின் உருக்கம்!
ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறும் தோனி - திமுக தலைவர் ஸ்டாலின் உருக்கம்!
Embed widget