MK Stalin on BJP: அயோத்தி மண்டபம் பிரச்னை.. பாஜகவுக்கு ஸ்டேட்மெண்ட் சொன்ன முதலமைச்சர் ஸ்டாலின்
இந்த பிரச்சனையில் அரசியலை புகுத்தி அதன்மூலமாக கட்சியை பலப்படுத்த வேண்டும் என நினைத்தல் அது நடக்காது.
தேவையில்லாத அரசியலை புகுத்தி பாஜகவை பலப்படுத்த நினைத்தால் அது நடக்கவே நடக்காது என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்
சென்னை மேற்கு மாம்பலத்தில் அயோத்தியா மண்டபத்தை இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தது குறித்து பேரவையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
இந்த தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், அயோத்தி மண்டபம் விவகாரத்தை பயன்படுத்தி அரசியல் லாபம் அடைய முயற்சிக்க வேண்டாம் என்று பாஜக உறுப்பினர்களிடம் கூறினார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர், "நீங்கள் (பாஜக எம்எல்ஏக்கள்) நமது மாநில மக்களுக்கு பயன்படும் வகையில் செயல்படவேண்டும். இதை ஒரு அரசியல் பிரச்சனையாக மாற்றுவதை பாஜக தவிர்க்க வேண்டும். இந்த பிரச்சனையில் அரசியலை புகுத்தி அதன்மூலமாக கட்சியை பலப்படுத்த வேண்டும் என நினைத்தல் அது நடக்காது” என்று கூறினார்.
தேவையில்லாத அரசியலை புகுத்தி பாஜகவை பலப்படுத்த நினைத்தால் அது நடக்கவே நடக்காது - முதல்வர் மு.க.ஸ்டாலின் https://t.co/wupaoCQKa2 | #MKStalin #DMK #BJP #TNAssembly pic.twitter.com/Z45L2tzYBu
— ABP Nadu (@abpnadu) April 12, 2022
மேலும், "பெட்ரோல், டீசல், எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும், நிலுவையில் உள்ள நிலுவைத் தொகையை வழங்கவும் மத்திய அரசை நீங்கள் வலியுறுத்த வேண்டும்” என்றும் தெரிவித்தார்.
முன்னதாக, மேற்கு மாம்பலத்தில் ஸ்ரீ ராம் சமாஜம் நடத்தி வந்த அயோத்தி மண்டபம், 2013 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் மூலம் இந்து சமய மற்றும் அறநிலையத் துறை துறையால் கையகப்படுத்தப்பட்டது. இதற்கு எதிரான மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து, இந்த விவகாரம் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்தது.
அயோத்தி மண்டபத்தை கையகப்படுத்துவதற்கு எதிராக பாஜக உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர். பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் மற்றும் பாஜகவினர் மண்டபம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ‘பாரத் மாதா கி ஜெய்’ போன்ற முழக்கங்களையும் எழுப்பினர்.
இது கோயில் அல்ல என்பதால் மண்டபத்தை கையகப்படுத்த முடியாது என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட கரு.நாகராஜன், உமாஆனந்தன், இளங்கோவன் உள்ளிட்ட தலைவர்களை போலீஸார் கைது செய்தனர். அரச ஊழியர்களை கடமையைச் செய்யவிடாமல் தடுத்த குற்றச்சாட்டின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்