மேலும் அறிய

கட்சி பாகுபாடு பார்த்து டெண்டர் விடவில்லை, ஒளிவுமறைவில்லை - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!

டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் இன்று நடத்திய போராட்டம் தொடர்பாக மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார்.

டாஸ்மாக் பார் டெண்டர் விடுவதில் முறைகேடு என கூறி பார் உரிமையாளர்கள் எம்.ஆர்.சி நகரில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி  இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் உரிமையாளர்கள் கைகளில் உள்ள பதாகைகளில், பொற்கால ஆட்சியில் பொல்லாத அமைச்சர்; முதலமைச்சரின் நம்பி வாக்களித்தோம்; எங்கள் வயிற்றில் அடிப்பது நியாயமா....? என்றும், உங்களை நம்பி 3 லட்ச தொழிலார்களின் குடும்பங்கள் உள்ளது என குறிப்பிட்டனர். 

தமிழ்நாடு முழுவதும் உள்ள பார்களை ஏலம் விடும் பொறுப்பை முக்கியப் புள்ளிகள் மூன்று பேர் எடுத்துள்ளதாகவும், இந்த ஏலத்தின் மூலம் தமிழ்நாடு அரசுக்கு 200 கோடி வரை லாபம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த ஏலம் வெறும் கண் துடைப்பு நாடகமாக நடத்தப்படுகிறது எனவும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில்பாலாஜி தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும் டெண்டர்களை முறைகேடாக ஒதுக்கியதாக  டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்

 பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கத்தினர்:

"தற்போது 41 டாஸ்மாக் மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் பார்களுக்கான ஏலம் நடைபெற்று வருகிறது இதில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள டாஸ்மாக் நிர்வாகத்தின் வழிகாட்டு நெறிமுறையோ உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ள நெறிமுறையோ பின்பற்றாமல் அவர்களுக்கு தேவையான நபர்களுக்கு மட்டும் டெண்டர் வழங்கப்பட்டுள்ளது.

டெண்டர் சமயத்தில்  வழங்கிய விண்ணபங்களை கூட பார்க்காமல் முகம் தெரியாத நபர்களுக்கு டெண்டர் வழங்கப்பட்டு உள்ளது, ஏற்கனவே பார் வைத்துள்ள நபர்கள் இடத்தின் உரிமையாளர்களிடம் NOC பெற்று வைத்துள்ள பார் உரிமையாளர்களுக்கு முன்னுரிமை வழங்கபடாமல் டெண்டர் நடைபெற்றுள்ளது.

வெளியாட்கள் டெண்டர் போட வந்தால் அலுவலகத்திற்குச் செல்லவே போலீசார் அனுமதிப்பதில்லை என கூறிய அவர்கள் அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த நபர்களின் தலையீடு அதிகமாக உள்ளது அரசு இதனை கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நேர்மையான முறையில் மீண்டும் டெண்டர் நடத்தப்பட வேண்டும்" என கூறினர்.

டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் இன்று நடத்திய போராட்டம் தொடர்பாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கொரோனா பரவல் காரணமாக கூடுதலாக 2 விதிகள் விதிக்கப்பட்டு 68 விதிகள் அடிப்படையில் பார் டெண்டர் வெளியிடப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் பார் வசதியுள்ள 1,550 கடைகளுக்கு டெண்டர் விடப்பட்டது.

டாஸ்மாக் பார் டெண்டர் ஒளிவுமறைவின்றி வெளிப்படைத்தன்மையுடனும், இந்த கட்சி, அந்த கட்சி என்று யாருக்கும் பாகுபாடு பார்க்கவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், போராட்டம் நடத்தியவர்கள் விதிமீறல் தொடர்பாக எந்தவொரு மனுவும் கொடுக்கவில்லை என்றார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

" வயது வித்தியாசம் பிடிக்கல " திருமணத்தை நிறுத்த சொன்ன 21 வயது பெண் !! இறுதியில் நடந்த கொடூரம்
விழுப்புரத்தை உலுக்கும் போதை கும்பலுக்கு செக்!
விழுப்புரத்தை உலுக்கும் போதை கும்பலுக்கு செக்! "Drug Free TN" செயலியுடன் அதிரடி வேட்டைக்கு தயாராகும் மாவட்ட நிர்வாகம்!
வேகத்தடைகளில் புதிய மாற்றம்... ஆக்கிரமிப்புகள் அதிரடி அகற்றம்! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ் சொன்ன விழுப்புரம் கலெக்டர்!
வேகத்தடைகளில் புதிய மாற்றம்... ஆக்கிரமிப்புகள் அதிரடி அகற்றம்! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ் சொன்ன விழுப்புரம் கலெக்டர்!
IAS Transfer: ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய தவெக அரசு.. ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாஹுவும் ட்ரான்ஸ்பர் - முழு லிஸ்ட் இதோ
IAS Transfer: ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய தவெக அரசு.. ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாஹுவும் ட்ரான்ஸ்பர் - முழு லிஸ்ட் இதோ

வீடியோ

G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IAS Transfer: ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய தவெக அரசு.. ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாஹுவும் ட்ரான்ஸ்பர் - முழு லிஸ்ட் இதோ
IAS Transfer: ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய தவெக அரசு.. ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாஹுவும் ட்ரான்ஸ்பர் - முழு லிஸ்ட் இதோ
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
US Russia Sanctions Bill: 500 இல்ல, வெறும் 100 தான்.! ரஷ்ய எண்ணெய் கொள்முதல் கட்டணங்களை மாற்றும் அமெரிக்கா; இந்தியாவுக்கு நிம்மதி
500 இல்ல, வெறும் 100 தான்.! ரஷ்ய எண்ணெய் கொள்முதல் கட்டணங்களை மாற்றும் அமெரிக்கா; இந்தியாவுக்கு நிம்மதி
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
ஒரே சார்ஜில் 427 கிலோமீட்டர் மைலேஜ்.. வரப்போது Volkswagen ID Cross மின்சார கார் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 427 கிலோமீட்டர் மைலேஜ்.. வரப்போது Volkswagen ID Cross மின்சார கார் - விலை எவ்ளோ?
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
Maruti Suzuki Dzire on EMI: நடுத்தர வர்க்கத்தின் நம்பகமான கார்.! மாருதி சுசூகி டிசையரின் ஆன்-ரோடு விலை, முன்பணம், EMI எவ்வளவு.?
நடுத்தர வர்க்கத்தின் நம்பகமான கார்.! மாருதி சுசூகி டிசையரின் ஆன்-ரோடு விலை, முன்பணம், EMI எவ்வளவு.?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
Embed widget