மேலும் அறிய

Minister Senthil Balaji: அமைச்சர் செந்தில் பாலாஜி கைது.. 17 மணி நேர சோதனைக்குப் பின் அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் சோதனை நடத்தினர்.

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனைக்குப் பின் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

முந்தைய அதிமுக ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி அந்த துறையில் வேலைவாங்கித் தருவதாக கூறி பலரும் வழக்கு தொடர்ந்தனர். சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் நேற்று காலை முதல் அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு, தலைமைச்செயலகத்தில் உள்ள அவரது அறை உள்ளிட்ட தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடந்தனர். இதேபோல் செந்தில்பாலாஜியின் கரூர் வீடு உள்ளிட்ட 8 இடங்களிலும் சோதனையானது நடந்தது. 

சுமார் 17 மணி நேரம் இந்த சோதனை நீடித்தது. தலைமைச்செயலகத்தில் நடந்த சோதனையின் போது 3 பைகளில் ஆவணங்கள் எடுத்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து அதிகாலை 2 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். செந்தில் பாலாஜி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டாரா அல்லது கைது செய்யப்பட்டாரா என்ற குழப்பம் நிலவிய நிலையில், அவர் கைது செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது. 

இதற்கிடையில் அதிகாரிகள் அழைத்து செல்லும்போது செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் ஓமந்துராரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அங்கு துணை ராணுவத்தினரும், போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். செந்தில்பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அறிந்த அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், ரகுபதி,எ.வ.வேலு,  திமுக எம்.பி. என்.ஆர்.இளங்கோ உள்ளிட்டோர் நேரடியாக மருத்துவமனைக்கு வருகை தந்தனர். 

இதற்கிடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்ட வல்லுநர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியானது. முன்னதாக அமலாக்கத்துறை சோதனைக்கு மாநில மற்றும் தேசிய அரசியல் கட்சியின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். செந்தில்பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலறிந்து திமுக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

கந்த சஷ்டி விரதம் இன்று முடிக்கிறீர்களா? விரதத்தை நிறைவு செய்யும் சரியான முறை இதுதான்!
கந்த சஷ்டி விரதம் இன்று முடிக்கிறீர்களா? விரதத்தை நிறைவு செய்யும் சரியான முறை இதுதான்!
ECR டிராபிக் இனி கவலையில்லை? சென்னை - புதுச்சேரி இடையே படகு போக்குவரத்துத் திட்டம்!
ECR டிராபிக் இனி கவலையில்லை? சென்னை - புதுச்சேரி இடையே படகு போக்குவரத்துத் திட்டம்!
CHN-BLR Highway: 10KM-க்கு 90 நிமிடங்களா..! தவிக்கும் வாகன ஓட்டிகள், ஸ்ரீபெரும்புதூர் - சுங்குவார்சத்திரத்திற்கு தீர்வு எப்போது?
10KM-க்கு 90 நிமிடங்களா..! தவிக்கும் வாகன ஓட்டிகள், ஸ்ரீபெரும்புதூர் - சுங்குவார்சத்திரத்திற்கு தீர்வு எப்போது?
இன்று முருகப்பெருமான் – தெய்வானை திருக்கல்யாணம்! திருமணத் தடை நீங்க என்ன வழிபாடு செய்ய வேண்டும்?
இன்று முருகப்பெருமான் தெய்வானை திருக்கல்யாணம்! திருமணத் தடை நீங்க என்ன வழிபாடு செய்ய வேண்டும்?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: அக்வான் புயல், இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை, காஞ்சிக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
அக்வான் புயல், இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை, காஞ்சிக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
ICC Worldcup: மீண்டும் இந்தியாவில் ODI உலகக் கோப்பை..! பட்டியலை வெளியிட்ட ஐசிசி - சாம்பியன்ஸ் ட்ராபி எப்போது?
மீண்டும் இந்தியாவில் ODI உலகக் கோப்பை..! பட்டியலை வெளியிட்ட ஐசிசி - சாம்பியன்ஸ் ட்ராபி எப்போது?
IND vs NZ: வாவ்... இப்படி ஒரு பவுலிங்கை பார்த்து எவ்ளோ நாளாச்சு? நெருக்கடியில் வென்று கொடுத்த இந்திய பந்துவீச்சாளர்கள்!
IND vs NZ: வாவ்... இப்படி ஒரு பவுலிங்கை பார்த்து எவ்ளோ நாளாச்சு? நெருக்கடியில் வென்று கொடுத்த இந்திய பந்துவீச்சாளர்கள்!
Weekly Rasipalan: மேஷம் முதல் கடகம் வரை.. எந்த கிழமையில் என்ன வழிபாடு செய்தால் பணவரவு அதிகரிக்கும்?
Weekly Rasipalan: மேஷம் முதல் கடகம் வரை.. எந்த கிழமையில் என்ன வழிபாடு செய்தால் பணவரவு அதிகரிக்கும்?
Car Accident: ஜீப் மீது மோதி அந்தரத்தில் பறந்த கார்..! தப்பித்து ஓட முயன்ற பெண் படுகாயம் - வைரல் வீடியோ
ஜீப் மீது மோதி அந்தரத்தில் பறந்த கார்..! தப்பித்து ஓட முயன்ற பெண் படுகாயம் - வைரல் வீடியோ
Virat Kohli: கோலியை அவமதித்தாரா ஸ்ரேயாஸ் ஐயர்? கடைசி ஒருநாள் போட்டியில் நடந்தது என்ன? நீங்களே பாருங்க
Virat Kohli: கோலியை அவமதித்தாரா ஸ்ரேயாஸ் ஐயர்? கடைசி ஒருநாள் போட்டியில் நடந்தது என்ன? நீங்களே பாருங்க
திருட்டு கேஸ் மீனாட்சிக்கு ஒரே நாளில் எகிறும் மவுசு..! தமிழ்நாட்டுக்கே ரீல்ஸ் பைத்தியமா?
திருட்டு கேஸ் மீனாட்சிக்கு ஒரே நாளில் எகிறும் மவுசு..! தமிழ்நாட்டுக்கே ரீல்ஸ் பைத்தியமா?
Bigg Boss: மக்கள் செல்வன் என்றும் பாராமல்..! விஜய் சேதுபதியை நக்கல் செய்த ஜேசன்! பிக்பாஸில் பரபரப்பு
Bigg Boss: மக்கள் செல்வன் என்றும் பாராமல்..! விஜய் சேதுபதியை நக்கல் செய்த ஜேசன்! பிக்பாஸில் பரபரப்பு
Embed widget