மேலும் அறிய

10 நிமிடத்தில் பதற்றமான திண்டிவனம்.... அமைச்சர் மஸ்தானுக்கு திண்டிவனத்தில் கருப்பு கொடி...எதற்கு தெரியுமா ?

அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு திண்டிவனத்தில் பாமகவினர் கருப்பு கொடி...100க்கும் மேற்பட்ட பாமகவினர் கைது

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார் குப்பம் கிராமத்தில் கடந்த 13ஆம் தேதி விஷ சாராயம் குடித்து 70க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் 14 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதில் 50 க்கும் மேற்பட்டோர் விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர்களில் 45 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதனை தொடர்ந்து கடந்த 13-ம் தேதி முதல் 21-ம் தேதி வரையில் 416 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 107 பெண்கள் உட்பட 416 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திண்டிவனத்தை சேர்ந்த பிரபல கள்ளச்சாராய வியாபாரி மரூர் ராஜா குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும், அமைச்சர் செஞ்சி மஸ்தானின் தீவிர ஆதரவாளர் எனக் கூறப்படும் மரூர் ராஜ தனது மனைவியை திமுகவில் கவுன்சிலராக வெற்றி பெற வைத்தார். பின்னர் அமைச்சர் செஞ்சி மஸ்தான் திண்டிவனம் வரும் போதேல்லாம் அவருடன் புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்து வந்தார். அதுமட்டும் இல்லாமல் சாராயம் விற்கும் போது போலீசார் கைது செய்ய முற்பட்டால் நான் அமைச்சர் ஆதரவாளர் என கூறி மிரட்டி வந்தார். திண்டிவனத்தில் வெளிப்டையாக சாராயம் விற்பனையை தொடங்கி விற்பனை செய்தார். மேலும் இதனை கண்டித்து முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பலமுறை இதுபோன்று நடைபெறுவதாக கூறியிருந்தார், போலீசார் கண்டும் காணாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மரக்காணம் எக்கியர் குப்பம் மீனவர் கிராமத்தில் விஷ சாராயம் அருந்தி 14 பேருர் உயிரிழந்த நிலையில் போலீசார் பல்வேறு இடங்களில் அதிரடியாக சாராயம் வியாபாரிகளை கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில்,  திண்டிவனம் பிரபல சாராய வியாபாரி மரூர் ராஜவை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட மரூர் ராஜா அமைச்சர் மஸ்தானுக்கு நெருக்கமானவர், திமுகவின் தொண்டராகவும் உள்ளார் என்று பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார். அதுகுறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மஸ்தான், அவர் பாட்டாளி மக்கள் கட்சி,  அண்ணா திமுக ஆகிய கட்சிகளில் இருந்தவர். டாக்டர் ராமதாஸ், சி.வி. சண்முகத்திற்கும் உறவினர் தான். அவர் எல்லாம் கட்சி மாறுவதோ, புகைப்படம் எடுத்துக்கொள்வதை வைத்து எதையும் சொல்லக்கூடாது. மரூர் ராஜாமீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவரின் தவறை நாம் ஆதரிக்கவில்லை என்று கூறியிருந்தார்.

கள்ளச்சாராய வியாபாரி மரூர்ராஜா பாமகவைச் சேர்ந்தவர், டாக்டர் ராமதாசுக்கு உறவினர் என்று அமைச்சர் மஸ்தான் கூறியதைக் கண்டித்து இன்று மாலை திண்டிவனம் தீர்த்தகுளம் அருகே நடைபெற இருந்த விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க வருகை தர இருந்த அமைச்சர் மஸ்தானுக்கு கருப்பு கொடி காட்டுவதற்காக  பாமகவினர் திட்டமிட்டு இருந்தனர். அதற்காக பாமக மாவட்ட செயலாளர் ஜெயராஜ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திண்டிவனம் நேரு வீதியில் கருப்பு கொடி உடன் ஊர்வலம் சென்றனர், அப்போது பாமகவினருக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில் பாமகவினர் 150‌பேர் கைது செய்தனர்.

தலைப்பு செய்திகள்

Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
மேகதாது விவகாரத்தில் திமுக அரசு 3 முறை தோற்றது ஏன்.? ஆதவ் கேள்விக்கு பதிலடி கொடுத்த கே.என் நேரு
மேகதாது விவகாரத்தில் திமுக அரசு 3 முறை தோற்றது ஏன்.? ஆதவ் கேள்விக்கு பதிலடி கொடுத்த கே.என் நேரு
அனைத்தும் தனியார்மயமா? - தவெக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
அனைத்தும் தனியார்மயமா? - தவெக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
மேகதாது விவகாரத்தில் திமுக அரசு 3 முறை தோற்றது ஏன்.? ஆதவ் கேள்விக்கு பதிலடி கொடுத்த கே.என் நேரு
மேகதாது விவகாரத்தில் திமுக அரசு 3 முறை தோற்றது ஏன்.? ஆதவ் கேள்விக்கு பதிலடி கொடுத்த கே.என் நேரு
KT Rajendra Balaji: திமுகவுக்கு போகச்சொல்லி நெருக்கடி.. மனம் மாறுவாரா ராஜேந்திர பாலாஜி.. பரபரக்கும் அரசியல்!
KT Rajendra Balaji: திமுகவுக்கு போகச்சொல்லி நெருக்கடி.. மனம் மாறுவாரா ராஜேந்திர பாலாஜி.. பரபரக்கும் அரசியல்!
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
Embed widget