மேலும் அறிய

மேட்டூர் அணையின் நீர்வரத்து 1,71,000 கன அடியாக அதிகரிப்பு... இன்றைய நீர் நிலவரம் இதுதான்.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 1,70,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதன் காரணமாக அன்புள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி, காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கர்நாடகா மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 1,25,500 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 1,70,500 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 1,71,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்வரத்து 1,71,000 கன அடியாக அதிகரிப்பு... இன்றைய நீர் நிலவரம் இதுதான்.

நீர்மட்டம்:

அணையின் நீர் மட்டம் 120.150 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 93.71 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 91 வது ஆண்டாக ஜூலை 28 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக பாசன வசதி பெறும். மேட்டூர் அணையின் நீர் திறப்பினால் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் குருவை, சம்பா சாகுபடி செய்துள்ள டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 21,500 கன அடியாக உள்ளது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் 16 கண் மதகுகள் மூலமாக 1,48,500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 1,70,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையின் நீர்வரத்து 1,71,000 கன அடியாக அதிகரிப்பு... இன்றைய நீர் நிலவரம் இதுதான்.

கர்நாடக அணைகள்:

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 124.8 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 49.45 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 1.5 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 65 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 19.51 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 20,000 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 19,250 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்கக் கடலில் கலக்கிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

எதிர்க்கட்சி தலைவரான பிறகு முதல்முறையாக அமெரிக்கா சென்ற ராகுல் காந்தி.. பயங்கர பிளானா இருக்கே!
எதிர்க்கட்சி தலைவரான பிறகு முதல்முறையாக அமெரிக்கா சென்ற ராகுல் காந்தி.. பயங்கர பிளானா இருக்கே!
Mpox - India: இந்தியாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை அறிகுறியா.? - மத்திய அரசு தெரிவித்தது என்ன.?
Mpox - India: இந்தியாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை அறிகுறியா.? - மத்திய அரசு தெரிவித்தது என்ன.?
"மல்யுத்த வீரர்கள் பத்தி பேசக்கூடாது" பிரிஜ் பூஷனுக்கு பறந்த உத்தரவு.. ரூட்டை மாத்தும் பாஜக!
The Goat : விஜய் குழம்பிட்டார் அதான் கதையை மாற்றினேன்... உண்மையான தி கோட் இதுதான்
The Goat : விஜய் குழம்பிட்டார் அதான் கதையை மாற்றினேன்... உண்மையான தி கோட் இதுதான்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Cadres vs Police | ”Permission இருக்கா?”ரவுண்டு கட்டிய போலீஸ் தவெகவினர் வாக்குவாதம்Mahavishnu | ”சித்தர்கள் தான் சொன்னாங்க” மகாவிஷ்ணு பகீர் வாக்குமூலம்Shock ஆன போலீஸ்TN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் குழப்பம்..ஸ்டாலின் முடிவு என்ன? குமுறலில் கவுன்சிலர்கள்Vijay TVK Manaadu | TVK-க்கு பச்சைக்கொடிதடைகளைத் தகர்த்த விஜய்நண்பா, நண்பீஸ் ரெடியா..!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எதிர்க்கட்சி தலைவரான பிறகு முதல்முறையாக அமெரிக்கா சென்ற ராகுல் காந்தி.. பயங்கர பிளானா இருக்கே!
எதிர்க்கட்சி தலைவரான பிறகு முதல்முறையாக அமெரிக்கா சென்ற ராகுல் காந்தி.. பயங்கர பிளானா இருக்கே!
Mpox - India: இந்தியாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை அறிகுறியா.? - மத்திய அரசு தெரிவித்தது என்ன.?
Mpox - India: இந்தியாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை அறிகுறியா.? - மத்திய அரசு தெரிவித்தது என்ன.?
"மல்யுத்த வீரர்கள் பத்தி பேசக்கூடாது" பிரிஜ் பூஷனுக்கு பறந்த உத்தரவு.. ரூட்டை மாத்தும் பாஜக!
The Goat : விஜய் குழம்பிட்டார் அதான் கதையை மாற்றினேன்... உண்மையான தி கோட் இதுதான்
The Goat : விஜய் குழம்பிட்டார் அதான் கதையை மாற்றினேன்... உண்மையான தி கோட் இதுதான்
Vinayakan : ஜெயிலர்  வில்லன் நடிகர் விநாயகன் கைது... போதையில் காவலர்களுடன் வாக்குவாதம்
Vinayakan : ஜெயிலர் வில்லன் நடிகர் விநாயகன் கைது... போதையில் காவலர்களுடன் வாக்குவாதம்
Breaking News LIVE: திமுக ஒருங்கிணைப்புக் குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை
Breaking News LIVE: திமுக ஒருங்கிணைப்புக் குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை
Watch Video:
Watch Video: "குமரிப்பெண்ணின் உள்ளத்திலே" எம்.ஜி.ஆர். பாடலைப் பாடி அசத்திய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!
Deepika Ranveer Baby:வா.. வா.. என் தேவதையே.. மகளை வரவேற்றனர் தீபிகா, ரன்வீர் ஜோடி!
Deepika Ranveer Baby:வா.. வா.. என் தேவதையே.. மகளை வரவேற்றனர் தீபிகா, ரன்வீர் ஜோடி!
Embed widget