Weather Update : தமிழகத்தில் அடுத்த 2 நாட்கள் வெயில் எப்படி இருக்கும் தெரியுமா? இதை படிங்க முதல்ல..
வெயில் இயல்பு நிலையில் இருந்து 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழகத்தில் மழை கொட்டித்தீர்த்தது. சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டது. பெரிய அளவு வெள்ள பாதிப்பு ஏற்பட்டதன் விளைவாக பொதுமக்களிடம் மிகப்பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் கோடை காலம் துவங்கி வெயில் கடுமையாக மாறியுள்ளது. தற்போது தமிழகத்தில் ஓரிரு இடங்களில் 2 நாட்களுக்கு வெயில் இயல்பு நிலையில் இருந்து 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போதே வெயிலை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் திண்டாடி வரும் நிலையில் இன்னும் வெயில் கடுமையாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது சூட்டை அதிகப்படுத்தியுள்ளது.
#Abpnadu | Chennai Meteorological Department said temperature will 2 to 3 degree celsius high for next two days in Tamil Nadu. | Further reports to follow - @abpnadu | - @guna_2403 | @reportervignesh @smart_jai023 | @saranram | @SRajaJourno | @am_kathir | @kathirreporter |.... pic.twitter.com/G3ijaBeDek
— Arunchinna (@iamarunchinna) April 1, 2022
தமிழ்நாட்டில் வெயில் கடுமையாக இருந்து வருவதால் வெப்ப சலனம் ஏற்பட்டுள்ளது. அதன் விளைவாக மன்னார் வளைகுடா, உள் தமிழக பகுதியில் மேல் நிலவும் வளிமண்டல காற்று சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக மேற்கு தொடர்சி மலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள் கன்னியாகுமரி நெல்லை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. உச்சபச்சமாக கொடநாடு பகுதியில் 50மி.மீ மழை பதிவாகியுள்ளது. தாளவாடி, சோலையாறு 20மி.மீ, போடி நாயக்கனூர் 10 மி.மீ மழை பெய்துள்ளது.
Realised Maximum Temperature (°C) in the past 24 Hrs and its departure from normal (°C) over Tamilnadu pic.twitter.com/dSVaG39Bnq
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) April 1, 2022
இதற்கிடையே அதிகப்படியான இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக கரூரில் 104 டிகிரி வெயில் வாட்டியது. அதே போல் ஈரோடு, திருச்சி, மதுரையில் 100 டிகிரியும், சென்னை தர்மபுரி, சேலம், திருத்தணி 99 டிகிரி வெயில் நிலவியது. இதனை தொடர்ந்து பசிபிக் கடல்மட்டத்தில் அதிரிகரித்து வரும் வெப்பம் காரணமாக கடல் காற்றில் வெப்பம் அதிகரித்து வருகிறது.
அதன் காரணமாக தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் இயல்பைவிட கூடுதலாக 2 செல்சியஸ் முதல் 3 செல்சியஸ் வரை வெயில் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்பட்டாலும் வெப்பம் 37 டிகிரி செல்சியஸ் 99 டிகிரியாக இருக்கும் என தெரியவருகிறது. தமிழ்நாட்டில் பல இடங்களில் வெயில் கடுமையாக இருப்பதால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் நோயாளிகள் உள்ளிட்டோர் பாதுகாப்ப இருக்க வேண்டும் எனவும். கோடைகாலத்திற்கு ஏற்ற உணவுகளை மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்வது நல்லது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - 10.5% வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து சமூகநீதிக்கு கிடைத்த வெற்றி - முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ்