மேலும் அறிய
தன் மீதான வழக்கு விசாரணைக்கு தடை கேட்டு மாரிதாஸ் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு
அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் எத்தகைய கருத்தையும் பதிவு செய்யவில்லை. இந்த சூழலில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் எனும் நோக்கிலேயே டிவிட்டர் பதிவை செய்தேன் என மனு
![தன் மீதான வழக்கு விசாரணைக்கு தடை கேட்டு மாரிதாஸ் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு Maridas petitions Madurai High Court seeking stay of trial தன் மீதான வழக்கு விசாரணைக்கு தடை கேட்டு மாரிதாஸ் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/10/b48a6a0a25844e8194525a9beba9e396_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மாரிதாஸ்
யூடிப்பரான மாரிதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் மாநிலத்தின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், மாநில அரசுக்கு எதிராகவும், முப்படைகளின் தலைமைத் தளபதி ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த விவகாரத்தில் டிவிட்டர் பதிவை வெளியிட்டார். இதுகுறித்து திமுகவை சேர்ந்த பாலகிருஷ்ணன் மதுரை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் மாரிதாஸ் மீது (124A, 153-A , 504 505 (1)b 505 ( 2)) ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, மாரிதாஸை கைது மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
![தன் மீதான வழக்கு விசாரணைக்கு தடை கேட்டு மாரிதாஸ் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/17/455712fc8d20a7ee0c32174a499f7565_original.jpg)
இந்நிலையில் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் எத்தகைய கருத்தையும் பதிவு செய்யவில்லை. இந்த சூழலில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் எனும் நோக்கிலேயே ட்விட்டர் பதிவை செய்தேன். ஆகவே, இந்த வழக்கில் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கக்கூடாது எனவும், வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்" எனவும் மனுவில் கூறியுள்ளார். இந்த மனு திங்கள்கிழமை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வரவுள்ளது.
கருணை அடிப்படையில் வேலை பெற்றவர் துறை ரீதியான தேர்வு எழுதவில்லை என்பதால் பணி நீக்கம் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சின்னதுரை, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு. அதில், "என் தந்தை சர்வேயராக பணியாற்றினார். அவர், இறந்ததால் கருணை அடிப்படையில் எனக்கு சர்வேயர் பணி வழங்கப்பட்டது. துறை ரீதியான தேர்வு மற்றும் பயிற்சியை முடிக்க வேண்டுமென நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.கடந்த 2014ல் எனது பணி வரன்முறை செய்யப்பட்டது. இதனிடையே, நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு துறை ரீதியான தேர்வை முடிக்காததால் விளக்கம் கேட்டு விருதுநகர் மாவட்ட நில அளவை உதவி இயக்குநர் நோட்டீஸ் அனுப்பினார். பின்னர், இதையே காரணமாக கூறி என்னை பணி நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை ரத்து செய்து, எனக்கு மீண்டும் பணி வழங்குமாறு உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எஸ்.சுந்த, துறைரீதியான தேர்வை முடிக்கவில்லை எனக்கூறி பணி நீக்கம் செய்ய முடியாது. எனவே, பணி நீக்கம் செய்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரரை 6 வாரத்திற்குள் அலுவலக உதவியாளர் அல்லது குரூப் 4 பணி நிலையில் நியமிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
வணிகம்
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion