மேலும் அறிய

EB Num Link Aadhar: மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க தடையில்லை - சென்னை உயர்நீதிமன்றம்

மின்சார இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

மின்சார இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், மின்சார இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.  

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு:

சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசிய மக்கள் கட்சியின் தலைவர் ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். மனுதாரர் தனது தரப்பில் கூறியிருந்ததாவது, ஆதார் இணைப்பு என்பது ஒரு வீட்டிற்கு ஒன்று என்று இணைக்க முடியும். வாடகை தாரரை இணைத்தால் வீடு காலி செய்யும்போது, வாடகை தாரர் பாதிக்கப்படுவார்கள். உரிமையாளர்கள் முறையான கணக்கு காட்ட முடியாத நிலை ஏற்படும்.

ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாமை நடத்தும் அரசு, மேற்கண்டவற்றிற்கு மாற்றாக என்ன ஆவணங்களை வழங்கலாம் என அறிவிக்கவில்லை என்றும், மானியம் பெறுவதற்கு ஆதார் எண்ணை இணைப்பது மாநில தொகுப்பின் கீழ்தான் வழங்க வேண்டும் என்றும் தனது மனுவில் கூறியிருந்தார்.

மனு தள்ளுபடி:

இந்த மனுவின் மீதான விசாரணை நீதிபதிகள் ராஜா, பரதசக்கரவர்த்தி அமர்வின் முன்பு நடைபெற்று வந்தது. அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முறையான ஆய்வுகள் நடத்தப்பட்ட பின்னரே மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அறிவிப்புகள் வெளியானது என்றும், இதில் எந்தவித விதிமீறல்களும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், வாடகைதாரர் 100 யூனிட் இலவச மின்சாரம் பெற வேண்டுமா..? வேண்டாமா? என்பதை உரிமையாளருக்கும், வாடகைதாரருக்கும் உள்ள பிரச்சினை என்றும், இதற்காக ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்கும் திட்டத்தை ரத்து செய்ய முடியாது என்றும், இதன் காரணமாக இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேல்முறையீடா?

இந்த வழக்கின் மீதான விசாரணை கடந்த வாரம் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இன்று இந்த வழக்கின் மீதான தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, தீர்ப்பில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது. இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யப்படுமா? என்று மனுதாரர் தரப்பினர் ஆலோசித்து முடிவெடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க: அதிமுக வரவு - செலவு கணக்குகள் இணைய தளத்தில் ஏற்றம்! எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரித்ததா தேர்தல் ஆணையம்?

மேலும் படிக்க: OPS General Secretary Meeting: “நாற்காலியை திருப்பி ஒப்படைத்த உத்தமர் ஓபிஎஸ்; ஆனால் ஈபிஎஸ்..” - மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மருது அழகுராஜ் சரவெடிப் பேச்சு..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone: ரெட் அலர்ட்டில் சென்னை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம், தவிக்கும் மக்கள் - ஸ்தம்பித்த தலைநகர்

Fengal Cyclone: வெள்ளக் காடாய் மாறிய சாலைகள்! புயலில் சாய்ந்த மரங்கள் - சென்னையை திணறடித்த ஃபெஞ்சல்

TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வர்களே... உங்களுக்குத்தான் இந்த முக்கிய அறிவிப்பு- என்ன தெரியுமா?

Rule Changes From Dec 1: நாளை முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள் - ஐடிஆர், ஆதார், கிரெடிட் கார்ட், ட்ராய் கட்டுப்பாடு

ABP Premium

வீடியோ

ஒரே குடும்பம், 3 கொலைகள்! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! வெளியான திடுக் தகவல்Kallakurichi School Issue : பாத்திரம் கழுவிய மாணவிகள்! அரசுப் பள்ளியில் அவலம்! பகீர் வீடியோBus Accident : எமன் ஆன U TURN..! நேருக்கு நேர் மோதிய வாகனங்கள் பதறவைக்கும் CCTV காட்சிகள்Keerthi Suresh Marriage : ’’இன்னும் ஒரு மாசம் தான்..கோவா-ல கல்யாணம் !’’வெட்கப்பட்ட கீர்த்தி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone: ரெட் அலர்ட்டில் சென்னை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம், தவிக்கும் மக்கள் - ஸ்தம்பித்த தலைநகர்
Fengal Cyclone: ரெட் அலர்ட்டில் சென்னை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம், தவிக்கும் மக்கள் - ஸ்தம்பித்த தலைநகர்
Fengal Cyclone: வெள்ளக் காடாய் மாறிய சாலைகள்! புயலில் சாய்ந்த மரங்கள் - சென்னையை திணறடித்த ஃபெஞ்சல்
Fengal Cyclone: வெள்ளக் காடாய் மாறிய சாலைகள்! புயலில் சாய்ந்த மரங்கள் - சென்னையை திணறடித்த ஃபெஞ்சல்
TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வர்களே... உங்களுக்குத்தான் இந்த முக்கிய அறிவிப்பு- என்ன தெரியுமா?
TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வர்களே... உங்களுக்குத்தான் இந்த முக்கிய அறிவிப்பு- என்ன தெரியுமா?
Rule Changes From Dec 1: நாளை முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள் - ஐடிஆர், ஆதார், கிரெடிட் கார்ட், ட்ராய் கட்டுப்பாடு
Rule Changes From Dec 1: நாளை முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள் - ஐடிஆர், ஆதார், கிரெடிட் கார்ட், ட்ராய் கட்டுப்பாடு
Fengal Cyclone LIVE: ஃபெஞ்சல் புயல் நாளை கரையை கடக்கும் - வெதர்மேன் பிரதீப் ஜான்

Fengal cyclone: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கொந்தளிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?

Half Yearly Exam: மாணவர்களே... வந்தாச்சு அரையாண்டுத் தேர்வு அட்டவணை; விடுமுறை இத்தனை நாட்களா?

PAN 2.0: பான் 2.0 திட்டம் - அப்டேட் செய்யப்பட்ட கார்டை இ-மெயில் வாயிலாக பெறுவது எப்படி? விவரம் இதோ..!

Embed widget