
TN Govt White Paper Live Updates: மாற்றத்திற்கு தேவையான எதையும் செய்யத் தயாராக உள்ளோம் -பிடிஆர்
TN Govt White Paper Live Updates: கடந்த 10 ஆண்டுகால நிதிநிலை குறித்து தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார்
LIVE

Background
திமுக ஆட்சியில் சீரழிந்த நிதி நிலை- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
திமுக ஆட்சியில் நிதிநிலை எவ்வாறு சீரழிந்தது என்பதை தெரிவிக்க வேண்டும். அது பற்றி விவாதிக்கலாம். மத்திய அரசுடன் கைகோர்த்திருந்த திமுக, அப்போதைய ஆட்சியில் என்ன செய்தது?
மத்திய-மாநில அரசுகளுக்குள் மோதல் இல்லை -பிடிஆர்
நியாயமான இலக்கை நோக்கிய செல்கிறோம். இதனால் மத்திய-மாநில அரசுகளுக்கு மோதல் என நினைக்கக்கூடாது. தமிழ்நாடு மாதிரியான வளர்ந்த, ஏற்றத்தாழ்வு குறைவாக உள்ளது. நிறைய சொத்து வைத்துள்ள மாநிலம்.
ஏதாவது ஒரு நாள் திருத்த வேண்டிய தவறு -பிடிஆர்
ஏதாவது ஒரு நாள் திருத்தியே ஆக வேண்டிய தவறுகள். எனவே திருத்தி தான் ஆக வேண்டும்.
அரசாங்கம் கண் மூடி இருந்திருக்கிறது - பிடிஆர்
எல்லாருக்கும் எல்லாம் என்பது எந்த அடிப்படையில்? எல்லாருக்கும் எல்லாம் இலவசம் என வழங்கமுடியாது. யாரெல்லாம் எதையெல்லாம் கைப்பற்ற முடியுமோ அதை கைப்பற்றியிருக்கிறார்கள். அரசாங்கம் கண் மூடி இருந்திருக்கிறது.
வெள்ளை அறிக்கை முன்பே வெளியிட இது தான் காரணம்... -பிடிஆர்
சட்டப்படி தான் இந்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படுகிறது. நிதிநிலைக்கு முன்னாள் இது மக்களுக்கு தெரிந்து அது விவாதமாக நடைபெற வேண்டும் என்பதற்காக தான் இதை முன்பே வெளியிடுகிறோம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

