Karur: மாற்றுத்திறனாளி மகளுக்காக ஆட்சியர் காலில் விழுந்த பாசத்தாய் - வேலைவாய்ப்பு கோரி கண்ணீர்
கரூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின் போது மாற்றுத்திறனாளி மகளுக்காக ஆட்சியர் காலில் விழுந்து வேலைவாய்ப்பு கோரி கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த தாய்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கள்கிழமை நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கிருஷ்ணராயபுரம் அடுத்த மணவாசி பகுதியை சேர்ந்த ஈஸ்வரி என்ற பெண்மணி தனது மாற்றுத்திறனாளி மகள் சூர்யாவுடன் வந்திருந்தார். இளம் பெண் சூர்யா எம்பிஏ பட்டதாரி ஆவார்.
ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேகமாக போடப்பட்டுள்ள இருக்கைகளில் அமர்ந்திருந்தவர்களின் இடத்திற்கே வந்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் மனுக்களை பெற்றுக் கொண்டார். அந்தப் பெண்மணி தனது மகளுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க கோரி திடீரென்று மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்து கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார். அவரது அழுகையை நிறுத்த கோரி, சமாதானப்படுத்திய மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், கோரிக்கை குறித்து உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இந்த சம்பவத்தை பார்த்த அங்கிருந்தவர்களுக்கு சில நிமிடங்கள் சோகத்தை ஏற்படுத்தியது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்