கரூர்: நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்
குடிநீர் தேவைக்காக அமராவதி ஆற்றில் வினாடிக்கு 25 கன அடி திறக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 52.63 அடியாக இருந்தது.
ஆத்துப்பாளையம் அணைக்கு மீண்டும் தண்ணீர் வரத்து.
கரூர் மாவட்டம்,க.பரமத்தி அருகே ஆத்துப்பாளையம் அணைக்கு வினாடிக்கு 17 கன அடி தண்ணீர் வந்தது. பிறகு, தண்ணீர் வரத்து நின்ற நிலையில், காலை 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 3 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 13.94 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
மாயனூர் கதவணை:
காவிரி ஆற்றில், மாயனூர் கதவணைக்கு, வினாடிக்கு, 876 கன அடி தண்ணீர் வந்தது. காலை 6.00 மணி நிலவரப்படி வினாடிக்கு 879 கன அடி தண்ணீர் வரத்து அதிகரித்தது. அந்த தண்ணீர் முழுவதும், காவிரி ஆற்றில், திறக்கப்பட்டது. நான்கு பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
அமராவதி அணை:
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 214 கண்ணாடி தண்ணீர் வந்தது ஆனால் குடிநீர் தேவைக்காக அமராவதி ஆற்றில் வினாடிக்கு 25 கன அடி திறக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 52.63 அடியாக இருந்தது.
நங்காஞ்சி அணை:
திண்டுக்கல் மாவட்டம், வடகாடு மலைப்பகுதிகளில் மழை இல்லாததால், நங்காஞ்சி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட, நங்காஞ்சி அணையின் நீர்மட்டம் தற்போது ,38.81 அடியாக உள்ளது.நங்காஞ்சி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
மழை நிலவரம்:
கரூர் மாவட்டத்தில் காலை 8.00 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மழை இல்லை.
பாசன வாய்க்காலை தூர்வாரக் கோரிக்கை.
கரூர் திருமாநிலையூர் அருகே செல்லும் பாசனவாய்க்காலை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். திருமாநிலையூர் பகுதியில் இருந்து அமராவதி ஆற்றங்கரையோரம் ஒட்டிய பகுதியில் வாசன வாய்க்கால் செல்கிறது. குடியிருப்புகள் வழியாக செல்லும் இந்த பாசன வாய்க்காலில் அதிக அளவு பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி, சுகாதார செய்து ஏற்பட்டு வருகிறது. மேலும் கழிவு நீரும் கலந்து தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இப்பகுதிமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றன. தினமும் கொசு தொல்லையால் இரவில், தூங்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். மேலும், காலை கழிவுநீர் கலப்பதால், விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே திருமாநிலையூர் வழியாக செல்லும் பாசன வாய் காலை தூர் வாரி சுத்தம் செய்ய வேண்டும் என, விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.