மேலும் அறிய

சாதி ரீதியாக பாகுபாடு....பணி செய்யவிடாமல் தடுக்கப்பட்ட பட்டியலின சமூக ஊராட்சி தலைவர்

கரூரில் பட்டியலின சமூக ஊராட்சி தலைவரை சாதிய பாகுபாடு காட்டி பணி செய்யவிடாமல் தடுத்த புகார். நான்கு நபர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு.

கரூர் மாவட்டம், கரூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நன்னியூர் ஊராட்சியில் தலைவர், துணைத் தலைவர் உட்பட 10 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் திமுகவைச் சேர்ந்த 5 உறுப்பினர்கள் மற்றும் அதிமுகவை சேர்ந்த 5 உறுப்பினர்கள் என சம நிலையில் உள்ளனர். ஊராட்சி தலைவராக உள்ள சுதா ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவர்.

சாதி ரீதியாக பாகுபாடு....பணி செய்யவிடாமல் தடுக்கப்பட்ட பட்டியலின சமூக ஊராட்சி தலைவர்

இந்த நிலையில் வாங்கல் காவல் நிலையத்தில் கடந்த 22ம் தேதி புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் ஊராட்சி மன்ற தலைவராக உள்ள தனது கடமையை செய்யவிடாமல் குறுக்கீடு செய்து, மன உளைச்சலை ஏற்படுத்தியும், சாதி ரீதியாக பாகுபாடு செய்து வரும் 9-வது வார்டு உறுப்பினர் நல்லுசாமி, ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அடிக்கடி வந்து அலுவலகப் பணியை செய்வதில் இடையூறு ஏற்படுத்தி வரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குமாரசாமி, அலுவலகப் பணியில் ஒத்துழைப்பு கொடுக்காத ஊராட்சி செயலர் நளினி மற்றும் அவருடைய கணவர் மூர்த்தி என்பவர் தேவையில்லாமல் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குள் வந்து, கம்ப்யூட்டர் ஆபரேட்டர் என்று கூறிக்கொண்டு ஊதியம் கேட்டு வருவதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் நபர்களின் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் மனு கொடுத்திருந்தார்.

சாதி ரீதியாக பாகுபாடு....பணி செய்யவிடாமல் தடுக்கப்பட்ட பட்டியலின சமூக ஊராட்சி தலைவர்

இந்த புகார் மனு மீது கடந்த இரண்டு தினங்களாக அதிகாரிகள் நேரில் விசாரணை மேற்கொண்டனர். புகார் மனு மீது விசாரணை மேற்கொண்டதில் ஊராட்சி செயலாளர் நளினியை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

சாதி ரீதியாக பாகுபாடு....பணி செய்யவிடாமல் தடுக்கப்பட்ட பட்டியலின சமூக ஊராட்சி தலைவர்

மேலும், சம்பந்தப்பட்ட நான்கு நபர்கள் மீதும் வாங்கல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், வழக்கு பதிவு செய்யப்பட்ட நான்கு நபர்களும் தற்போது தலைமாறை வாங்கி உள்ளனர். மேலும், வாங்கல் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!

திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!

உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?

சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!

80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?

பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?

Embed widget