ஆளுநர் அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்படுகிறார் - எம்.பி ஜோதிமணி
இந்திய அளவில் தேசிய கீதம் எப்படி உள்ளது. அதே போன்று தமிழ்நாட்டில் தமிழ் தாய் வாழ்த்து உள்ளது. ஆளுநர் நிகழ்ச்சியில் திராவிடம் என்ற வார்த்தை எடுக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய அதிர்ச்சி அளிக்கிறது.
ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது, திராவிட என்ற வார்த்தையை பயன்படுத்தாதது அதிர்ச்சி அளிக்கிறது. ஆளுநர் அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்படுகிறார் என கரூரில் எம்.பி ஜோதிமணி பேட்டியளித்தார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு கூட்டம் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தலைமையில் நடைபெற்றது. இதில் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு, மாவட்ட ஆட்சியர் தங்கவேல், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசுத்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எம்.பி ஜோதிமணி, அரசியல் சாசனத்தின்படி முறையாக ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளார். திராவிடம் என்பது சொல் கிடையாது. தமிழ்நாடு மற்றும் அண்டை மாநில மக்களை குறிக்கிறது. தமிழ் தாய் வாழ்த்து என்பது தமிழ்நாட்டின் பெருமை. தமிழ் மக்களினுடைய அடையாளம். இந்திய அளவில் தேசிய கீதம் எப்படி உள்ளது. அதே போன்று தமிழ்நாட்டில் தமிழ் தாய் வாழ்த்து உள்ளது. ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் திராவிடம் என்ற வார்த்தை எடுக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய அதிர்ச்சி அளிக்கிறது. கடுமையான கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன். அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டிய ஆளுநர் மொத்தமாக அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்படுகிறார்.
பாஜகவினுடைய மாநில தலைவர் போல் ஆளுநர் செயல்படுகிறார். தொடர்ச்சியாக தமிழ் மக்களின் உணர்வுகளையும், தமிழ் மக்களுடைய, பண்பாடுகளையும், தமிழ் இனத்தையும் அவமதிப்பது போன்ற பிரச்சனைகளை தொடர்ச்சியாக ஆளுநர் செய்து கொண்டு வருகிறார். ஆளுநர் பதவிக்கு இது நல்ல விஷயம் கிடையாது. ஆளுநர் பெட்டி பாலிடிக்ஸ் செய்து வருவதாக பேசினார்.
அவரைத் தொடர்ந்து பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு செய்தியாளர்களை சந்தித்தார்
வருங்காலத்தில் எனக்கு கூட வாய்ப்பு கிடைக்காமல் போகலாம் என சமீபத்தில் அமைச்சர் பொன்முடி பேசியிருந்தார். அது குறித்த கேள்விக்கு, பதில் அளித்து கொடுத்த பேட்டியில், திமுகவில் ஆண்டாண்டு காலமாய் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுதான் வருகிறது. பொன்முடி பேசியது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது.
திமுகவில் இளைஞர்கள் ஆதிக்கம் என்பதை தாண்டி, இளைஞர்களுக்கான வாய்ப்பாகதான் இதை பார்க்க வேண்டும். 2026 தேர்தலில் உதயநிதி ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக நிறுத்துவது குறித்து திமுக தலைமை தான் முடிவெடுக்கும். அது குறித்து பேச நான் அருகதை இல்லாதவன் என்றார்.