வழியில் ரோப்கார் பழுதானால் என்ன செய்வது? - ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் நடந்த ஒத்திகை
தேசிய பேரிடர் மீட்பு பணியைச் சேர்ந்த 32 பேர் உதவி கமாண்டர் ஸ்ரீதர் தலைமையில் அரக்கோணத்தில் இருந்து அய்யர்மலை வந்தனர்.
குளித்தலை அருகே அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் ரோப் கார் சேவையின்போது ரோப் கார் பழுதானால் காரில் சென்றவர்களை கயிறு மூலம் காப்பாற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஒத்திகை நிகழ்ச்சி பொதுமக்கள் மாணவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் ரோப் கார் சேவை நடைபெற்று வருகிறது. தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் ரோப்காரில் சென்று தரிசனம் செய்து வருகின்றனர். தேசிய பேரிடர் மீட்பு பணியைச் சேர்ந்த 32 பேர் உதவி கமாண்டர் ஸ்ரீதர் தலைமையில் அரக்கோணத்தில் இருந்து இரண்டு நாள் பயணமாக அய்யர்மலை வந்தனர்.
அதைத்தொடர்ந்து இன்று ரோப் காரில் பக்தர்கள் செல்லும்போது திடீரென ரோப்கார் பழுதானால் தேசிய பேரிடர் மீட்பு படையினர் எவ்வாறு பாதுகாப்பாக அவர்களை மீட்கின்றனர், என்பது குறித்த ஒத்திகை நடைபெற்றது. ஒத்திகையின் போது வீரர்கள் கயிறு மூலம் அந்தரத்தில் தொங்கும் ரோப் காருக்கு சென்று அங்கு பயணித்த பக்தர்களை பத்திரமாக மீட்பது போன்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை காண பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.