மேலும் அறிய

கரூர் மாவட்டத்தில் ஆண்டின் சராசரியை விட அதிக அளவு மழைப்பொழிவு

2011 ஆம் ஆண்டில் இருந்து 2022 ஆம் ஆண்டு வரை 12 ஆண்டுகளில் 2011, 2015 ,2016, 2017, 2020, 2021 ஆண்டுகளில் மட்டுமே ஆண்டின் சராசரி மலையை விட அதிக அளவு மழையை கரூர் மாவட்டம் பெற்றிருந்தது.

தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக கரூர் மாவட்டத்தில் ஆண்டின் சராசரி மழையை விட அதிக அளவு மழை பெய்து உள்ளதால் மக்களும், விவசாயிகளு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். .

கரூர் மாவட்டத்தில் ஆண்டின் சராசரியை விட அதிக அளவு மழைப்பொழிவு

கரூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 652.20 ஆக உள்ளது. இந்த மழையை ஜனவரி, பிப்ரவரி ஆகிய குளிர்காலங்களில் 16. 80 மில்லி மீட்டரும் மார்ச், ஏப்ரல், மே ஆகிய கோடை காலத்தில் 109.5 மில்லி மீட்டர் தென்மேற்கு பருவ காலமாக ஜூன், ஜூலை, ஆகஸ்ட் செப்டம்பர் ஆகிய நான்கு மாதங்களில் 238.4 மில்லி மீட்டர் வடகிழக்கு பருவமழை காலமாக அக்டோபர் ,நவம்பர், டிசம்பர் மாதம் ஆகிய மூன்று மாதங்களில் 287.5 மில்லி மீட்டரும் என மொத்தமாக 652.20மில்லி மீட்டர் மழையை மாவட்டம் பெற்று வருகிறது. 2022 ஆம் ஆண்டில் குளிர்காலத்தில் பதிவாக வேண்டிய 16. 80 மில்லி மீட்டர் பதிலாக 13.8 மில்லி மீட்டர் மழையே பெய்தது. கோடை காலத்தில் 109.80 மில்லி மீட்டருக்கு பதிலாக கூடுதலாகவே 125.40 மில்லி மீட்டர் மழை பெய்தது தென்மேற்கு சீசனில் 238.4 மில்லி மீட்டரை காட்டிலும் கூடுதலாக 273.66 மழை பெய்தது. உச்சபட்சமாக வடகிழக்கு பருவமழை காலத்தில் 287.5 விட அதிகபட்சமாக 336.53 மில்லி மீட்டர் மழை பெய்திருந்தது.

2011 ஆம் ஆண்டில் இருந்து 2022 ஆம் ஆண்டு வரை 12 ஆண்டுகளில் 2011, 2015 ,2016, 2017, 2020, 2021 ஆண்டுகளில் மட்டுமே ஆண்டின் சராசரி மலையை விட அதிக அளவு மழையை கரூர் மாவட்டம் பெற்றிருந்தது. 12 ஆண்டுகளில் 6 ஆண்டுகள் சராசரியை விட குறைவான அளவில் தான் மழை பெய்திருந்தது.

கரூர் மாவட்டத்தில் ஆண்டின் சராசரியை விட அதிக அளவு மழைப்பொழிவு

அந்த ஆண்டுகளில் கரூர் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு, வறட்சி, விவசாய பாதிப்பு போன்றவை ஏற்பட்டு மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர் ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் சராசரியை விட மழை கூடுதலாக பெய்து வருவதால் மக்கள் தற்போது சந்தோஷ மனநிலையில் உள்ளனர் அதன்படி, 2020 ஆம் ஆண்டு 757.03 மில்லி மீட்டர் 2021 ஆம் ஆண்டு 934.56 மில்லி மீட்டர் கடந்த 2022 ஆம் ஆண்டு 748.37 மில்லி மீட்டர் என்ற அடிப்படையில் மழைப் பதிவாகியுள்ளது. கடந்த 12 ஆண்டுகளில் 2021 ஆம் ஆண்டு தான் அதிகபட்ச மழையை மாவட்டம் பெற்றுள்ளது. 2016 ஆம் ஆண்டு மிக குறைந்த அளவிலான மழையை மாவட்ட பெற்றுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது. கரூர் மாவட்டத்தின் வழியாக காவிரி மற்றும் அமராவதி என இரண்டு ஆறுகள் பயணிக்கிறது. குறிப்பிட்ட தூரம் வரை இரண்டு ஆறுகள் தனித்தனியாகவும், திறமைக்குழு பகுதியில் இருந்து ஆறுகள் இணைந்து ஒருங்கிணைந்த காவிரி ஆக திருச்சியை நோக்கியும் மாயனூர், குளித்தலையை தாண்டி செல்கிறது. இந்த ஆறுகள் பாயும் கரூர் மாவட்ட பகுதிகளில் ஆற்றுப் பாசனம் மூலமும், மற்ற பகுதிகளில் கிணறு, ஏறி மற்றும் குளம் ஆகியவற்றின் மூலமும், வானம் பார்த்த பூமியின் மூலமாகவும் பாசனம் நடைபெறுகிறது. 

மாவட்டத்தின்  விவசாய தேவைக்கு ஆண்டின் சராசரி மழையும் முக்கியம் என்பதால் மழையை கரூர் மாவட்ட விவசாயிகள் ஆண்டுதோறும் ஆர்வத்துடன் எதிர்நோக்கி அதைச் சார்ந்த விவசாயத்தை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்டத்தை பொருத்தவரை நெல், சம்பா, குருவை, சிறுதானியங்கள், கம்பு, சோளம், கரும்பு பயிர் வகைகள் பருத்தி, மஞ்சள், மற்றும் வாழை போன்றவை ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த விவசாய தேவைக்கு ஆண்டுதோறும் சராசரி மழையை தொடர்ந்து பெய்தால் மட்டுமே விவசாயமும் மாவட்டத்தில் செழிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கரூர் மாவட்டத்தில் ஆண்டின் சராசரியை விட அதிக அளவு மழைப்பொழிவு

அந்த வகையில், 2022  சேர்த்து கடந்த மூன்று ஆண்டுகளாக ஆண்டின் சராசரியையும் தாண்டி மழை பெய்து, மாவட்டத்தின் மாவட்ட மக்களையும் மழை குளிர்வித்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக ஆண்டின் சராசரியை தாண்டியும் மழை பெய்து வரும் நிலையில், 2023 ஆம் ஆண்டு பிறந்துள்ளது. எனவே, இந்த ஆண்டும் அனைத்து சீசன்களிலும் அதிக அளவு மலையை கரூர் மாவட்ட பெற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும், வேண்டுகோளாகவும் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: நாட்டு நிலவரம் தெரியாதா?.. திமுகவை சீண்டிய விஜய்.. பதிலடி கொடுத்த உதய்.. முற்றிய மோதல்!
CM Vijay: நாட்டு நிலவரம் தெரியாதா?.. திமுகவை சீண்டிய விஜய்.. பதிலடி கொடுத்த உதய்.. முற்றிய மோதல்!
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
மேகதாது விவகாரத்தில் திமுக அரசு 3 முறை தோற்றது ஏன்.? ஆதவ் கேள்விக்கு பதிலடி கொடுத்த கே.என் நேரு
மேகதாது விவகாரத்தில் திமுக அரசு 3 முறை தோற்றது ஏன்.? ஆதவ் கேள்விக்கு பதிலடி கொடுத்த கே.என் நேரு

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
AI Powered E3 Trion E-Scooter: நாட்டின் முதல் AI டச் பெற்ற மின்சார ஸ்கூட்டர் - 165KM ரேஞ்ச், 52 லிட்டர் பூட் ஸ்பேஸ் - முழு விவரம்
நாட்டின் முதல் AI டச் பெற்ற மின்சார ஸ்கூட்டர் - 165KM ரேஞ்ச், 52 லிட்டர் பூட் ஸ்பேஸ் - முழு விவரம்
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
மேகதாது விவகாரத்தில் திமுக அரசு 3 முறை தோற்றது ஏன்.? ஆதவ் கேள்விக்கு பதிலடி கொடுத்த கே.என் நேரு
மேகதாது விவகாரத்தில் திமுக அரசு 3 முறை தோற்றது ஏன்.? ஆதவ் கேள்விக்கு பதிலடி கொடுத்த கே.என் நேரு
KT Rajendra Balaji: திமுகவுக்கு போகச்சொல்லி நெருக்கடி.. மனம் மாறுவாரா ராஜேந்திர பாலாஜி.. பரபரக்கும் அரசியல்!
KT Rajendra Balaji: திமுகவுக்கு போகச்சொல்லி நெருக்கடி.. மனம் மாறுவாரா ராஜேந்திர பாலாஜி.. பரபரக்கும் அரசியல்!
Embed widget