கரூர் மாவட்டத்தில் 9.05 லட்சம் வாக்காளர்கள் - ஆண்களை விட பெண்களே அதிகம்
’’கரூர் மாவட்டத்தில் 4 லட்சத்து 35 ஆயிரத்து 204 ஆண் வாக்காளர்களும், 4 லட்சத்து 70 ஆயிரத்து 98 பெண் வாக்காளர்களும், 92 இதர வாக்காளர்களும் என மொத்தம் 9 லட்சத்து 5 ஆயிரத்து 394 வாக்காளர்கள் உள்ளனர்’’
கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி) மற்றும் குளித்தலை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு 2022 ஆம் ஆண்டிற்கான புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் ஆட்சியர் பிரபு சங்கர் நேற்று வெளியிட்டார். அதனை தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பள்ளப்பட்டி மற்றும் புகளூர் நகராட்சிகளுக்கான வாக்குச்சாவடி மையங்களின் பட்டியலையும் ஆட்சியர் வெளியிட்டார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி கரூர் மாவட்டத்தில் நடைபெற்று முடிந்துள்ள வாக்காளர் சுருக்க முறைத்திருத்தங்களின் அடிப்படையில், இறுதி வாக்காளர் பட்டியளை வெளியிடப்பட்டது. அதன்படி அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 2 ஆயிரத்து 810 ஆண்களும், 1 லட்சத்து 12 ஆயிரத்து 656 பெண்களும், மூன்றாம் பாலினம் 7 பேர் என மொத்தம் 2 லட்சத்து 15 ஆயிரத்து 473 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.
கரூர் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 791 ஆண்களும், 1 லட்சத்து 30 ஆயிரத்து 270 பெண்களும், மூன்றாம் பாலினம் 24 பேர் என மொத்தம் 2 லட்சத்து 47 ஆயிரத்து 85 பேர் வாக்காளர்களாக உள்ளனர். கிருஷ்ணராயபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 4 ஆயிரத்து 454 ஆண்களும், 1 லட்சத்து 9 ஆயிரத்து 992 பெண்களும், மூன்றாம் பாலினம் 52 பேர் என மொத்தம் 2 லட்சத்து 14 ஆயிரத்து 498 பேர் வாக்காளர்களாக உள்ளனர். குளித்தலை சட்டமன்ற தொகுதியில் 1லட்சத்து 11 ஆயிரத்து 149 ஆண்களும், 1 லட்சத்து 17 ஆயிரத்து 180 பெண்களும், மூன்றாம் பாலினம் 9 பேர் என மொத்தம் 2 லட்சத்து 28 ஆயிரத்து 338 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 4 லட்சத்து 35 ஆயிரத்து 204 ஆண் வாக்காளர்களும், 4 லட்சத்து 70 ஆயிரத்து 98 பெண் வாக்காளர்களும், 92 இதர வாக்காளர்களும் என மொத்தம் 9 லட்சத்து 5 ஆயிரத்து 394 வாக்காளர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், கரூர் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரள், ஆர்.டி.ஓ.க்கள் பாலசுப்பிரமணியன் (கரூர்), புஷ்பாதேவி (குளித்தலை), தேர்தல் தாசில்தார் பிரபு. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டபலர் கலந்து கொண்டனர்.
கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும்
தற்போது வெளியிடப்பட்டு உள்ள இறுதி வாக்காளர் பட்டியல் கரூர் ஆர்.டி.ஓ. அலுவலகம், குளித்தலை சார் ஆட்சியர் அலுவலகம், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களான அனைத்து தாசில்தார் அலுவலகங்கள், உதவி வாக்குப்பதிவு அலுவலர் அலுவலகங்களான கரூர் மாநகராட்சி மற்றும் குளித்தலை நகராட்சி ஆணையர்கள் அலுவலகங்களிலும், அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் வைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு அதில் அவர்களது பெயர், புகைப்படம். இதர பதிவுகள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம். வாக்காளர்களுக்கு ஏற்படும் அனைத்து சந்தேகங்களுக்கும் தீர்வுளிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் வாக்காளர் உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர்கள் தங்களுக்கு தேவையான அனைத்து தகவல்கள், பின்னூட்டங்கள், ஆலோசனைகள் மற்றும் புகார்கள் ஆகிய வற்றை 1950 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு அழைத்து தெரிவிக்கலாம். மேலும் WWW.nvsp.in என்ற இணையதளம் மூலமாகவும், Voter help line மொபைல் செயலி மூலமாகவும், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து பொது சேவை மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்த்தல், நீக்குதல் மற்றும் முகவரி மாற்றம் தொடர்பான விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.