மேலும் அறிய

Karunanidhi Memorial: இன்று திறக்கப்படுகிறது கருணாநிதி நினைவிடம் - மிரட்டும் தொழில்நுட்ப வசதிகள், மொத்த லிஸ்ட் இதோ..!

Karunanidhi Memorial: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தை, முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்க உள்ளார்.

Karunanidhi Memorial: சென்னை மெரினா கடற்கரையில் புனரமைக்கப்பட்டுள்ள,  முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடம் இன்று திறக்கப்படுகிறது.

கருணாநிதி நினைவிடம் திறப்பு விழா..!

கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி வயது முதிர்வு காரணமாக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி காலமானார். இதையடுத்து திமுக முன்னாள் தலைவரும், 5 முறை தமிழ்நாட்டில் முன்னாள் முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதிக்கு சென்னை மெரினாவில் அண்ணா நினைவிட வளாகத்தில் நினைவிடம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்தார்.  கருணாநிதியின் சிந்தனைகளை மக்களும், வருங்காலத் தலைமுறையும் அறியக்கூடிய வகையில், நவீன விளக்கப்படங்களுடன் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் சுமார் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 39 கோடி மதிப்பீட்டில் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. அதனை பொதுமக்கள் பார்வைக்காக, இன்று மாலை 7.00 மணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

நினைவிடத்தில் உள்ள வசதிகள்:

 

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 

பேர­றி­ஞர் அண்ணா, முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் ஆகி­யோ­ரின் இரண்டு நினை­வி­டங்­க­ளும் 8.57 ஏக்­கர் நிலப்­ப­ரப்­பில் அமைந்­துள்­ளன. சென்­னைக் கடற்­கரை – காம­ரா­சர் சாலை­யில் அமைந்­துள்ள இந்த நினை­வி­டங்­க­ளின் முகப்பு வாயி­லில் பேர­றி­ஞர் அண்ணா நினை­வி­டம் – முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் நினை­வி­டம் எனும் பெயர்­கள் அழ­கு­றப் பொறிக்­கப்­பட்­டுள்­ளன. நுழைவு வாயி­லைக் கடந்து உள்ளே சென்­றால் எதி­ரில் அமர்ந்து படிப்­பது போன்ற தோற்­றத்­தில் பேர­றி­ஞர் அண்ணா அவர்­க­ளின் சிலை; வல­பு­றம் இளங்­கோ­வ­டி­கள், இடப்­பு­றம் கம்­பர் சிலை­கள் அமைந்து நம்மை மகிழ்­விக்­கின்­றன. நினை­வி­டங்­க­ளின் முன்­ப­குதி இரு­பு­றங்­களிலும் பழ­மை­யான புல் வெளி­கள் அமைந்­துள்ளன. இடப்­பு­றத்­தில் 'அண்ணா அருங்­காட்­சி­யம்’ அமைந்­துள்­ளது. பேர­றி­ஞர் அண்ணா சதுக்­கம் அமைந்­துள்ள பகு­தி­யைச் சுற்றி அமைந்த மண்­ட­பங்­கள் வெண்மை நிறத்­தில் பளிச்­சி­டு­கின்­றன. “எதை­யும் தாங்­கும் இத­யம் இங்கே உறங்­கு­கி­றது” எனப் பொறிக்­கப்­பட்­டுள்ள, பேர­றி­ஞர் அண்ணா அவர்­கள் துயில்­கொள்­ளும் சதுக்­கத்­தைக் கடந்து சென்­றால், முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள் அமர்ந்து எழு­தும் வடி­வி­லான சிலை­யைக் காண­லாம். சிலை­யைக் கடந்து சென்­றால் எதிரே அமைந்­துள்ள முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள் நினை­வி­டம், நம் நெஞ்சை ஒருக் கணம் அமைதி கொள்­ளச் செய்­கி­றது.

புத்தக வடிவில் கடிதம்..

நினை­வி­டத்­தில், “ஓய்­வெ­டுத்­துக் கொள்­ளா­மல் உழைத்­த­வர், இங்கே ஓய்வு கொண்­டி­ருக்­கி­றார்” எனும் தொடர் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளின் எண்­ணப்­ப­டியே பொறிக்­கப்­பட்­டுள்­ளது. கலை­ஞர் நினை­வி­டத்­தின் முன்னே இரு­பு­ற­மும், தமிழ் செம்­மொழி என ஒன்­றிய அரசு ஏற்ற முடி­வைத் தெரி­வித்­துப் பாராட்டி, காங்­கி­ரஸ் தலை­வர் சோனியா காந்தி அவர்­கள், முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளுக்கு 8-11-2005 அன்று எழு­திய கடி­தம் ஆங்­கி­லத்­தி­லும், தமி­ழி­லும் புத்­தக வடி­வில் அமைக்கப்பட்­டுள்­ளன.

நினை­வி­டத்­தின் பின்­பு­றம் கலை­ஞர் அவர்­க­ளின் புன்­னகை பூத்த முகம் பொன்­னி­றத்­தில் மிளிர்­வ­து­டன் சுற்­றி­லும் மின்­வி­ளக்­கு­கள் விண்­மீன்­க­ளாக ஒளிர்­கின்­றன. முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளின் நினை­வி­டத்­தின் கீழே நில­வ­றைப் பகு­தி­யில், “கலை­ஞர் உல­கம்” எனும் பெய­ரில் ஓர் அரு­மை­யான அருங்­காட்­சி­ய­கம் அமைக்­கப்­பட்­டுள்­ளது. 'கலை­ஞர் உல­கம்’ பகு­தி­யில் இடப்­பு­றம் சென்­றால், நடை­பா­தை­யின் வலப்­பு­றத்­தில், கலை­ஞர் நிர்­மா­ணித்த திரு­வள்­ளு­வர் சிலை, குடிசை மாற்­று­வா­ரி­யம் முத­லி­யவை படங்­க­ளாக அமைக்­கப்­பட்டு விளக்­கொ­ளி­யு­டன் மிளிர்­கின்­றன.

உள்ளே வலப்­பக்­கம் திரும்­பி­னால், இடப்­பக்­கச் சுவ­ரில் தமிழ்த்­தாய் வாழ்த்து பொறிக்­கப் பட்­டுள்­ளது. அதன் கீழ்ப்­பு­றம், 'தமிழ்த்­தாய் வாழ்த்து அரசு நிகழ்ச்­சி­க­ளில் பாடப்­பட வேண்­டும்’ என முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள் 23-.11.-1970 அன்று பிறப்­பித்த அர­சா­ணை­யும், 'தமிழ்த் தாய் வாழ்த்து மாநி­லப் பாடல்’ என தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் 17-.12.-2021 அன்று பிறப்­பித்த அர­சா­ணை­யும், அவர்­க­ளின் படங்­க­ளு­டன் இடம் பெற்று நம்மை மகிழ்­விக்­கின்­றன.

எழிலோவியங்கள்:

அரு­கில், 'கலை­ஞ­ரின் எழி­லோ­வி­யங்­கள்’ எனும் அறை – அதில், கலை­ஞ­ரின் இள­மைக் காலம் முதல், அவர் வர­லாற்­றில் இடம் பெற்ற நிகழ்­வு­கள், கலை­ஞ­ரின் படைப்­பு­கள், அவர் சந்­தித்த போராட்­டங்­கள், நிறை­வேற்­றிய பல்­வேறு திட்­டங்­கள் தொடர்­பான புகைப் படங்­கள் அமைந்து நமக்கு மலைப்­பைத் தரு­கின்­றன. அடுத்து “உரி­மைப் போராளி கலை­ஞர்” எனும் தலைப்­பைக் கொண்ட அறை­யில் நுழைந்­தால் – தேசி­யக் கொடியை மாநில முதல்மைச்சர்கள் ஏற்­றிட உரிமை பெற்­றுத் தந்த கலை­ஞ­ரின் வெற்­றி­யைக் குறிக்­கும் வகை­யில், 'சென்­னைக் கோட்­டை­யில் முதன் முதல் தேசி­யக் கொடியை ஏற்றி வைத்து கலை­ஞர் உரை­யாற்­றும் காட்சி’ அமைப்­பு­டன் பின்­பு­றம், தலை­மைச் செய­ல­கத்­தின் முகப்­புத் தோற்­றம் அமைந்து நம்மை வர­வேற்­கி­றது.

புகைப்பட வசதி..!

அடுத்து, கோபா­ல­பு­ரம் இல்­லத்­தில் கலை­ஞர் அமர்ந்­தி­ருக்­கும் தோற்­றம் அரு­கில் நின்று புகைப்­ப­டம் எடுக்­க­லாம். சில நிமி­டங்­க­ளில் புகைப்­ப­டம் நமக்­கும் கிடைக்­கும் வசதி அமைக்­கப்­பட்­டுள்­ளது. வலப்­பு­றத்­தில் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள் மெழு­குச் சிலை­யாக நின்று நம்மை மகிழ வைக்­கி­றார். கலை­ஞர் படைப்­பு­கள் – நெஞ்­சுக்கு நீதி, குற­ளோ­வி­யம் தென்­பாண்­டிச் சிங்­கம் முத­லான 8 நூல்­க­ளின் பெயர்­கள் காணப்­ப­டும். அவை ஒவ்­வொன்­றின் மீதும் நாம் கை வைத்­தால், அந்த நூல் பற்­றிய விளக்­கம் வீடி­யோ­வா­கத் தோன்றி நமக்கு அவற்றை எடுத்து உரைக்­கும். அடுத்து, “அர­சி­யல் கலை அறி­ஞர் கலை­ஞர்” எனும் அறைக்­குள் செல்­ல­லாம். எதிரே கலை­ஞ­ரின் பெரிய நிழற்­ப­டம். வலப்­பக்­கம் இருக்­கை­கள் அமைக்­கப்­பட்டு, அவற்­றின் எதி­ரில் வெள்­ளித்­திரை: அதில், ஏறத்­தாழ 20 நிமி­டங்­கள் கலை­ஞர் அவர்­க­ளின் பிறப்பு முதல் இறுதி நாள் வரை­யான முக்­கிய வர­லாற்று நிகழ்­வு­கள்; அரு­மை­யான படக் காட்­சி­க­ளாக, 'கலை­யும் அர­சி­ய­லும்’ எனும் தலைப்­பில் நம்­முன் தோன்றி நம்மை வியக்க வைக்­கும் .

சாதனை பயணம்..!

அடுத்த அறை­யில், “சரித்­திர நாய­க­னின் சாத­னைப் பய­ணம்” தலைப்­பு­டை­யது. அதில் நுழைந்­தால் திரு­வா­ரூர் முதல் சென்னை வரை ரயி­லில் பய­ணிப்­பது போன்ற உணர்வை நமக்கு ஏற்­ப­டுத்­தும். நாம் அமர்ந்த நிலை­யில், தஞ்சை, திருச்சி, மதுரை, நெல்லை, சேலம் ரயில் நிலை­யங்­க­ளைக் கடந்து சென்­னையை அடை­ய­லாம். அந்­தந்த ஊர்­க­ளில் கலை­ஞர் வாழ்­வோடு தொடர்­பு­டைய நிகழ்­வு­கள் காட்­சி­க­ளா­கத் தோன்­றும். வழி­யில் யானை­யொன்று நாம் பய­ணிக்­கும் ரயில் பாதையை மறித்து நின்று நமக்கு வணக்­கம் செலுத்தி, வாழ்த்­து­வது நம்மை மெய் சிலிர்க்க வைத்­தி­டும். அறை­க­ளுக்கு வெளியே அமைந்­துள்ள நடை­யில் இரு­பு­றங்­க­ளி­லும், பெண்­ணி­யக் காவ­லர், ஏழைப் பங்­கா­ளர், நவீன தமிழ் நாட்­டின் சிற்பி, உல­க­ளா­விய ஆளு­மை­க­ளு­டன் கலை­ஞர் முத­லான தலைப்­பு­க­ளில் அமைந்த அரிய புகைப்­ப­டங்­கள் அழ­குற அமைக்­கப்­பட்­டுள்­ளன. அப்­ப­கு­தி­யில் 5 தொலைக்­காட்­சிப் பெட்­டி­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. அவற்­றில் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள் ஆட்­சி­யில் தொடங்கி வைக்­கப்­பட்ட பல்­வேறு திட்­டங்­க­ளின் தொடக்க விழா நிகழ்ச்­சி­கள் ஒளி­ப­ரப்­பப்­ப­டு­கின்­றன.

மிதக்கும் கலைஞர்..!

நேர் எதிரே- முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள் முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­க­ளு­டன் தோன்­றும் அரு­மை­யான புகைப்­ப­டம் பெரிய அள­வில் அமைந்து, “மகன் தந்­தைக்கு ஆற்­றும் உதவி” எனும் குறள் தொட­ரைத் தலைப்­பா­கக் கொண்­டுள்­ளது. இப்­ப­கு­தி­யின் இறு­தி­யில் காந்­த­வி­சை­யைப் பயன்­ப­டுத்தி அமர்ந்த நிலை­யில் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அந்­த­ரத்­தில் மிதக்­கும் காட்சி, நம்மை அற்­புத உல­கிற்கு அழைத்­துச் செல்­லும். நடை பாதையை விட்டு, வெளியே வந்­தால், நேர் எதிரே கலை­ஞர் புத்­தக விற்­பனை நிலை­யம் அமைந்­துள்­ளது. அங்கே, கலை­ஞர் எழு­திய நூல்­கள் அனைத்­தும் விற்­ப­னைக்கு வைக்­கப்­பட்­டுள்­ளன.

இவற்­றை­யெல்­லாம் கண்டு வெளியே வர முனைந்­தால் வழி­யில் வலப்­பு­றச் சுவர்­க­ளில் – தமி­ழர்­க­ளின் கலாச்­சார மையம். வள்­ளு­வர் கோட்­டம், பாம்­பன் பாலம், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்­து­வ­மனை முகப்­புக் கட்­ட­டம், மெட்ரோ ரயில், அண்ணா நூற்­றாண்டு நூல­கம் ஆகிய முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் படைத்த நவீ­னங்­க­ளின் தோற்­றம் வண்ண விளக்­கொ­ளி­யில் நம்மை மயங்க வைக்­கின்­றன. இவற்­றை­யெல்­லாம் பார்த்து வெளியே வர நினைத்­தால், முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளு­டன் கலந்து பேசிப் பழ­கிய ஓர் புதிய அற்­புத உணர்வு நமக்கு ஏற்­ப­டும். வெளியே வரும்­போது – இரு­பு­றங்­க­ளி­லும் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளின் பொன்­மொ­ழி­கள் கற்­பா­றை­க­ளில் தமி­ழி­லும் ஆங்­கி­லத்­தில் பொறிக்­கப்­பட்டு நம் இத­யத்­தி­லும் பதி­யும் வண்­ணம் அரு­மை­யாக அமைக்­கப்­பட்­டுள்­ளன. மொத்­தத்­தில் புதுப்­பிக்­கப்­பட்ட அண்ணா நினை­வி­ட­மும், முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளின் புதிய நினை­வி­ட­மும் – பல ஆண்­டு­கள் வரை நம் நெஞ்­சை­விட்டு என்­றும் நீங்­கா­மல் நம்மை ஆட்­கொண்­டி­ருக்­கும் என்­பது மட்­டும் உறுதி” என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”திருமாவையும் விஜயையும் கைக்கோர்க்க வைக்கும் ஆதவ் அர்ஜூனா” அதிருப்தியில் திமுக..?
”திருமாவையும் விஜயையும் கைக்கோர்க்க வைக்கும் ஆதவ் அர்ஜூனா” அதிருப்தியில் திமுக..?
School Education: முதல்வர் தலைமையில் நவ.8 பள்ளிக் கல்வித்துறை ஆய்வுக் கூட்டம்; புதிய திட்டங்கள் உண்டா?
School Education: முதல்வர் தலைமையில் நவ.8 பள்ளிக் கல்வித்துறை ஆய்வுக் கூட்டம்; புதிய திட்டங்கள் உண்டா?
Breaking News LIVE 5th NOV 2024: அமெரிக்க அதிபர் தேர்தலில் இன்று வாக்குப்பதிவு - வெற்றி யார் வசம்?
Breaking News LIVE 5th NOV 2024: அமெரிக்க அதிபர் தேர்தலில் இன்று வாக்குப்பதிவு - வெற்றி யார் வசம்?
TVK On CM Stalin: விஜயை ஒருமையில் சாடிய சிஎம் ஸ்டாலின், ஓப்பனாக அடித்து பேசிய தவெக - திமுகவிற்கு சவால்
TVK On CM Stalin: விஜயை ஒருமையில் சாடிய சிஎம் ஸ்டாலின், ஓப்பனாக அடித்து பேசிய தவெக - திமுகவிற்கு சவால்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Pawan Kalyan Controversy Speech | ’’நிர்வாகம் சரியில்லை!’’பவன் கல்யாண் பகீர்! அதிரும் ஆந்திராTVK Vijay warning cadres | ”கட்சிக்குள் கருப்பு ஆடு”சாட்டையை சுழற்றும் விஜய் கலக்கத்தில் தவெகவினர்Rahul Gandhi slams Modi|’’மோடி BORE அடிக்கிறார்’’இறங்கி அடித்த ராகுல்! பாசமலர்களின் THUGLIFESivagangai News |  தம்பி மனைவியின் உதட்டைகடித்து கொதறிய அண்ணன்!சிவகங்கையில் அதிர்ச்சி சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”திருமாவையும் விஜயையும் கைக்கோர்க்க வைக்கும் ஆதவ் அர்ஜூனா” அதிருப்தியில் திமுக..?
”திருமாவையும் விஜயையும் கைக்கோர்க்க வைக்கும் ஆதவ் அர்ஜூனா” அதிருப்தியில் திமுக..?
School Education: முதல்வர் தலைமையில் நவ.8 பள்ளிக் கல்வித்துறை ஆய்வுக் கூட்டம்; புதிய திட்டங்கள் உண்டா?
School Education: முதல்வர் தலைமையில் நவ.8 பள்ளிக் கல்வித்துறை ஆய்வுக் கூட்டம்; புதிய திட்டங்கள் உண்டா?
Breaking News LIVE 5th NOV 2024: அமெரிக்க அதிபர் தேர்தலில் இன்று வாக்குப்பதிவு - வெற்றி யார் வசம்?
Breaking News LIVE 5th NOV 2024: அமெரிக்க அதிபர் தேர்தலில் இன்று வாக்குப்பதிவு - வெற்றி யார் வசம்?
TVK On CM Stalin: விஜயை ஒருமையில் சாடிய சிஎம் ஸ்டாலின், ஓப்பனாக அடித்து பேசிய தவெக - திமுகவிற்கு சவால்
TVK On CM Stalin: விஜயை ஒருமையில் சாடிய சிஎம் ஸ்டாலின், ஓப்பனாக அடித்து பேசிய தவெக - திமுகவிற்கு சவால்
Lokesh Kanagaraj : ஒரே படத்தில் ரஜினி கமல்...நிறைவேறாமல் போன லோகேஷ் கனகராஜின் மாஸ்டர் ப்ளான்
Lokesh Kanagaraj : ஒரே படத்தில் ரஜினி கமல்...நிறைவேறாமல் போன லோகேஷ் கனகராஜின் மாஸ்டர் ப்ளான்
நெல்லையில் சாதி கொடூரம்: சிறுவனை வீடுபுகுந்து வெட்டிய கும்பல்? களத்தில் இறங்கிய காவல்துறை .! 
நெல்லையில் சாதி கொடூரம்: சிறுவனை வீடுபுகுந்து வெட்டிய கும்பல்? களத்தில் இறங்கிய காவல்துறை .! 
US Election 2024: டிரம்ப் Vs கமலா ஹாரிஸ், அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் எப்போது வெளியாகும்? சிக்கல் என்ன?
US Election 2024: டிரம்ப் Vs கமலா ஹாரிஸ், அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் எப்போது வெளியாகும்? சிக்கல் என்ன?
Mudhalvar Marundhagam: ரூ.3 லட்சம் மானியம்..! தமிழக அரசின் 1000 “முதல்வர் மருந்தகங்கள்”, விண்ணப்பிப்பது எப்படி?
Mudhalvar Marundhagam: ரூ.3 லட்சம் மானியம்..! தமிழக அரசின் 1000 “முதல்வர் மருந்தகங்கள்”, விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget