மேலும் அறிய

Jayalalitha: “நடிப்பு.. அரசியல்.. ஆளுமை..”- மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம் இன்று...!

அம்மா.. தங்கத்தாரகை.. இரும்பு மனுஷி.. புரட்சித் தலைவி என அனைத்து மக்களாலும் அன்போடு அழைக்கப்படுவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா.

அம்மா.. தங்கத்தாரகை.. இரும்பு மனுஷி.. புரட்சித் தலைவி என அனைத்து மக்களாலும் அன்போடு அழைக்கப்படுவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. அதிமுக எனும் கோட்டையை நிறுவியர் எம்.ஜி.ஆர் என்றால் அதை இரும்புக்கரம் கொண்டு கட்டி காத்தவர் ஜெயலலிதா என்பதை யாராலும் மறுக்க முடியாது. 

ஜெயலலிதா எனும் ஆளுமை 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் பாண்டவபுரா தாலுகாவில், மேல்கோட்டை ஊரில் வாழ்ந்த ஜெயராம் -வேதவல்லி தம்பதியருக்கு மகளாக பிறந்தார். இவரது இயற்பெயர் கோமளவல்லி. இவர்களின் மூதாதையர்கள் தமிழ்நாட்டைப் பூர்விகமாகக் கொண்டவர்கள். ஜெயலலிதாவுக்கு இரண்டு வயதான பொழுதே அவர் தந்தை ஜெயராம் காலமானார். அதன் பின்னர் திரைப்படத்தில் நடிக்க வந்த தாயார் வேதவல்லி தனது பெயரை சந்தியா என மாற்றிக்கொண்டார். 

Jayalalitha: “நடிப்பு.. அரசியல்.. ஆளுமை..”- மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம் இன்று...!

அவர்கள் சென்னைக்கு வந்த பின்னர், ஜெயலலிதாவிற்கு ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் படிக்க அனுமதி கிடைத்த நேரத்தில் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. இதனால் படிப்பைக் கைவிட்டு நடிகையானார். ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை என்கிற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.

Jayalalitha: “நடிப்பு.. அரசியல்.. ஆளுமை..”- மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம் இன்று...!

ஜெயலலிதா 127 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அவற்றுள் எம்.ஜி.ஆருடன் 28 படங்களில் இணைந்து நடித்தார். மேலும் சிவாஜி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன், ஜெய்சங்கர், முத்துராமன், ரவிசந்திரன், சிவகுமார், ஏ. வி. எம். ராஜன், என். டி. ராமராவ், அக்கினேனி நாகேஸ்வர ராவ், தர்மேந்திரா போன்ற பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். தனது அசாத்திய நடிப்பால் கலைச்செல்வி என்ற பட்டத்தை தட்டிச்சென்றதோடு ஏராளமான ரசிகர்களையும் கவர்ந்தார். 

“மக்களை நீ பார்த்துக்கொண்டால் அவர்கள் உன்னை பார்த்துக்கொள்வார்கள்” என்ற எம்.ஜி.ஆரின் கொள்கையை ஏற்று அரசியலில் கால் பதித்தார் ஜெயலலிதா. அதன்படி 1982 ஜூன் 4ஆம் தேதி கடலூரில் நடைபெற்ற விழாவில் அதிமுகவில் இணைந்தார் ஜெயலலிதா. அப்போதே ஜெயலலிதா அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக அறிவித்தார் எம்.ஜி.ஆர். இதனால் கட்சியின் மூத்த தலைவர்கள் மத்தியில் ஒருவித வெறுப்பை உணர்ந்தார் ஜெயலலிதா. 

Jayalalitha: “நடிப்பு.. அரசியல்.. ஆளுமை..”- மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம் இன்று...!

ஒருவரால் கிடைக்கும் திடீர் அங்கீகாரம் காரணமே இல்லாமல் பலரின் வெறுப்பை சம்பாதிக்கும். அத்தகைய சூழல்தான் அப்போது ஜெயலலிதாவுக்கும் நிகழ்ந்தது. மூத்த தலைவர்களின் அங்கீகாரம் ஜெயலலிதாவிற்கு அப்போது கிடைக்கவில்லை என்றாலும் எம்.ஜி.ஆரின் அதிகாரம் அவருக்கு பக்க பலமாய் நின்றது. 

கட்சிக்காக தொடர்ந்து உழைக்க ஆரம்பித்தார். ஆங்காங்கே நடக்கும் சிறு சிறு தவறுகளையும் தலைமைக்கு கொண்டு சென்றார். திட்டத்தை வகுத்தால் போதாது; கவனிக்கவும் தவறக்கூடாது என எம்.ஜி.ஆருக்கே போதகர் ஆனார் ஜெயலலிதா. 1984 மார்ச் 24ஆம் தேதி நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ஆனார். நாடாளுமன்றத்தில் தன் ஆங்கில புலமையால் பல தலைவர்களை கவர்ந்தார். தனது கன்னிப்பேச்சிலேயே அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தியைக் கவர்ந்தார். 1962 முதல் 1967 வரை தி.மு.க. நிறுவுநரும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வருமான அண்ணாதுரை அமர்ந்திருந்த 185வது இருக்கை, ஜெயலலிதாவுக்கு நாடாளுமன்றத்தில் ஒதுக்கப்பட்டது. 

Jayalalitha: “நடிப்பு.. அரசியல்.. ஆளுமை..”- மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம் இன்று...!

ஆனால் எம்.ஜி.ஆரின் இறுதிகாலத்தில் ஜெயலலிதா கட்சியில் இருந்து ஒதுக்கியே வைக்கப்பட்டார். ஆனால் தனது விடா முயற்சியால் கட்சி இரண்டாக பிரிந்தாலும் அதை ஒன்று சேர்த்து 1989 ஆம் ஆண்டு எதிர்க்கட்சி தலைவராக சட்டப்பேரவையில் அமர்ந்தார் ஜெயலலிதா. அங்கு நடைபெற்ற மோதலின்போது ‘‘தி.மு.க உறுப்பினர்கள் எனது புடவையை இழுத்தார்கள். இந்தச் சட்டமன்றத்தில் பெண்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை. சட்டமன்றாம எப்பொழுது பெண்களுக்குப் பாதுகாப்பானதாக மாறுகிறதோ அப்பொழுதுதான் சட்டமன்றத்துக்குள் வருவேன்” என்று கூறிச்சென்ற ஜெயலலிதா, மீண்டும் முதல்வராகவே சட்டசபைக்கு வந்தார். 

ஜெ. ஜெயலலிதா 1991 ஜூலை 24ஆம் நாள் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். அப்பொழுது அவரின் காலில் கே. செங்கோட்டையன் விழுந்தார். அவரைத் தொடர்ந்து பிறரும் விழுந்தனர். அதிமுகவில் காலில் விழும் கலாச்சாரம் தொடங்கியது. சட்டசபை இவரைப் புகழ்ந்துரைக்கும் இடமாக மாறியது.

இவர் முதல்வராக இருந்த 1991–96 பதவிக் காலத்தில் பல திட்டங்களை தமிழகத்தில் கொண்ட வந்தார். பெண்கள் முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறைகொண்டு பல நல்ல திட்டங்களைக் கொண்டுவந்தார். அதேசமயத்தில் எதிர்க்கட்சிகள் இவர் மீது ஊழல் புகார்களை அடுக்கவும் தவறவில்லை. ஜெயலலிதா, தன் தோழி சசிகலாவுக்கு அக்கா மகனான சுதாகரன் என்னும் 28 வயது இளைஞரை தன் மகனாகத் தத்தெடுத்தார். அவருக்கு 1995 செப்டம்பரில் ஆடம்பரமாகத் திருமணம் செய்துவைத்தார்.

Jayalalitha: “நடிப்பு.. அரசியல்.. ஆளுமை..”- மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம் இன்று...!

1996ஆம் ஆண்டு தோல்வியடைந்த ஜெயலலிதா ஊழல் புகாரில் விசாரணைக்காக மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 300 கிலோ தங்கம், 500 கிலோ வெள்ளி, 150 விலைமதிப்புமிக்க கைக்கடிகாரங்கள், 10,000 புடவைகள், 250 ஜோடி செருப்புகள் கைப்பற்றப்பட்டன. 28 நாள்களுக்குப் பின்னர் சிறையிலிருந்து வெளியே வந்த ஜெயலலிதா, நகை அணிவதைத் தவிர்த்தார். சசிகலாவையும் அவர்தம் உறவினர்களையும் தனது வீட்டிலிருந்து வெளியேற்றினார். ஆனால், ஈராண்டு சிறைவாசத்திற்குப் பின்னர் 1999ஆம் ஆண்டு ஜாமீனில் வெளியே வந்த சசிகலா மீண்டும் ஜெயலலிதாவின் வீட்டில் குடியேறினார்.

1998 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் 18 இடங்களில் வெற்றிபெற்று அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் அமைந்த மத்திய அரசில் அதிமுகவை அங்கம் வகிக்க செய்தவர் ஜெயலலிதா. 2001 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 132 இடங்களில் வெற்றிபெற்று  முதலமைச்சர் அரியணையில் அமர்ந்தார். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் ஜெயலலிதாவின் தலைமையில் தனித்துப் போட்டியிட்ட அதிமுக, 37இல் வென்று வரலாற்றுச் சாதனை புரிந்தது. மேலும் நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்ற பெருமையையும் பெற்றது.

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் அதிமுக தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 227இல்  நேரடியாகவும், 7இல் அதிமுக கூட்டணியில் இருந்த மற்ற கட்சிகள் அதிமுகவின் இரட்டை இல்லை சின்னத்திலும் போட்டியிட்டு 134 தொகுதிகளில் வென்று ஆட்சியைத் தக்கவைத்தது. 1984 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆளுங்கட்சி மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்தது 2016இல் தான். இவையனைத்திற்கும் ஜெயலலிதா எனும் ஆளுமையே காரணகர்த்தாவாக இருந்தது. 

Jayalalitha: “நடிப்பு.. அரசியல்.. ஆளுமை..”- மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம் இன்று...!

வண்ணத் தொலைக்காட்சி வழக்கு,டான்சி நில வழக்கு,பிளசண்ட் ஸ்டே விடுதி வழக்கு, நிலக்கரி இறக்குமதி வழக்கு, டிட்கோ-ஸ்பிக் பங்குகள் வழக்கு, சொத்துக் குவிப்பு வழக்கு என அடுத்தடுத்து இவர் மீது வழக்குகள் குவியாமலும் இல்லை. இதில் சொத்துக்குவிப்பு வழக்கில் அவரது மறைவிற்கு பிறகு குற்றவாளி என தீர்ப்பு வந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 1992 பிப்ரவரி 18ஆம் நாள் இவர் கும்பகோணம் மகாமகக்குளத்தில் சென்று நீராடியபொழுது ஏற்பட்ட கூட்டநெரிசலில் தர்மசாலா என்ற கட்டிடத்தின் சுவர் இடிந்துவிழுந்து 48பேர் இறந்தனர். அதுவும் ஜெயலலிதா ஆட்சியில் கரும்புள்ளியாக அமைந்தது

ஜெயலலிதா இவர் தமிழக முதலமைச்சராக ஐந்து முறை பதவி வகித்துள்ளார். இவர் 1991 முதல் 1996 வரையும், 2001 ஆம் ஆண்டில் சில மாதங்களும், பின்னர் 2002 முதல் 2006 வரையும், 2011 முதல் 2014 வரையும் இருந்தார். 2015 மே 23 முதல் இறக்கும் வரையில் முதலமைச்சராக பணிபுரிந்தார். 

2016ஆம் ஆண்டின் செப்டம்பர் 22 அன்று உடல்நலக் குறைவின் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 75 நாட்களுக்குப் பிறகு உடல்நலம் மிகவும் மோசமாகி சிகிச்சைப்பலனின்றி டிசம்பர் 5ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஜெயலலிதா உயிரிழந்த செய்தியறிந்து தமிழகத்தில் சுமார் 470 பேர் மாரடைப்பாலும், தற்கொலை செய்து கொண்டும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. 

மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா என்ற பாடல் வரிகளுக்கேற்ப ஒரு பெண்ணாக இத்தனை ஆண்களுக்கு மத்தியில் தனக்கு வந்த தடைக்கற்களயெல்லாம் படிக்கற்களாக மாற்றியவர். பெண்களுக்காக தாலிக்குத் தங்கம் பிரசவத்திற்கான மருத்துவத் திட்டம் மற்றும் பெண்களுக்காக ஸ்கூட்டி வழங்குதல் போன்ற திட்டங்களைக் கொண்டு வந்தார்.

அவர் நினைத்தால் எதை வேண்டுமானாலும் அடையலாம் என்ற எண்ணம் தான் நம்மிடையே இருக்கிறது. ஆனால், தனது வாழ்வில் அவர் விரும்பிய ஆசைகள் கூட அவரால் அடைய முடியவில்லை என்பது தான் கசப்பான உண்மை. சிறு வயதில் படிக்க வேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால் நடிக்க வாய்ப்பு வந்ததால் அதை தவறவிட்டார். அவர் அப்பா வழக்கறிஞராக பணியாற்றினார். அவரை போலவே இவரும் வழக்கறிஞராக வேண்டும் என ஆசைப்பட்டார். அதுவும் நடக்கவில்லை. ஜெயலலிதாவின் மற்றொரு ஆசை மிக எளிமையான ஹவுஸ் வைஃப்பாக இருக்க வேண்டும் என்பது. ஆனால், அதுவும் கைக் கூடவில்லை என்கிறார்கள் உடன் இருந்தவர்கள். ஜெயலலிதா மற்றுமொரு நிறைவேறாத ஆசையாக இருந்தது அம்மா ஸ்தானம். திருமணம் நடக்காமல் போன காரணத்தால் இந்த கனவும் நிறைவேறாமல் போனது. 

Jayalalitha: “நடிப்பு.. அரசியல்.. ஆளுமை..”- மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம் இன்று...! 

பல விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் இருந்தாலும்,, எப்படி ஒரு தனி மனுஷி... இந்த கட்சியை தனியாளாக வழிநடத்தி சென்றார்? ஆணாதிக்கம் கொண்டுள்ள தமிழக அரசியலில் தனி ஒருத்தியாக எப்படி இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தார்? என ஜெயலலிதா இன்றும் பலரையும் வியப்பிலேயே வைத்துள்ளார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK DMK VCK: கிள்ளி விட்ட விஜயின் தவெக.. பொங்கி எழுவாரா திருமா? திமுக மீது அட்டாக் வருமா? - கனிமொழி அஸ்திரம்
TVK DMK VCK: கிள்ளி விட்ட விஜயின் தவெக.. பொங்கி எழுவாரா திருமா? திமுக மீது அட்டாக் வருமா? - கனிமொழி அஸ்திரம்
TN Fishermen Arrest: இதுக்கு இல்லையா ஒரு எண்டு..! மீண்டும் மீனவர்கள் 18 பேர் கைது, இலங்கை கடற்படை அடாவடி
TN Fishermen Arrest: இதுக்கு இல்லையா ஒரு எண்டு..! மீண்டும் மீனவர்கள் 18 பேர் கைது, இலங்கை கடற்படை அடாவடி
Tiruvannamalai Landslide: திருவண்ணாமலை மண் சரிவு - நிறுத்தப்பட்ட மீட்பு பணி? ஏன் இந்த தாமதம்?
Tiruvannamalai Landslide: திருவண்ணாமலை மண் சரிவு - நிறுத்தப்பட்ட மீட்பு பணி? ஏன் இந்த தாமதம்?
கஞ்சா போதையில் கங்கை அமரன் ரகளை! நைட்டியுடன் அட்ராசிட்டி!
கஞ்சா போதையில் கங்கை அமரன் ரகளை! நைட்டியுடன் அட்ராசிட்டி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna : ”திமுக-னா பல் இளிப்பீங்க விஜய்-னா மட்டும் கசக்குதா?” திருமாவை- விளாசும் தவெக! | TVKJose Charles Profile : ”அடுத்த CM என் பையன் தான்”லாட்டரி மார்டின் ஸ்கெட்ச்!யார் இந்த ஜோஸ் சார்லஸ்? | Lottery MartinDurga Stalin Temple Visit : கொட்டும் மழையில் பால்குடம்.. துர்கா ஸ்டாலின் பரவசம்!சீர்காழியில் சிறப்பு தரிசனம்Vikrant Massey: ”இனி நடிக்க மாட்டேன்”  பிரபல நடிகர் பகீர்  மிரட்டலுக்கு பயந்தாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK DMK VCK: கிள்ளி விட்ட விஜயின் தவெக.. பொங்கி எழுவாரா திருமா? திமுக மீது அட்டாக் வருமா? - கனிமொழி அஸ்திரம்
TVK DMK VCK: கிள்ளி விட்ட விஜயின் தவெக.. பொங்கி எழுவாரா திருமா? திமுக மீது அட்டாக் வருமா? - கனிமொழி அஸ்திரம்
TN Fishermen Arrest: இதுக்கு இல்லையா ஒரு எண்டு..! மீண்டும் மீனவர்கள் 18 பேர் கைது, இலங்கை கடற்படை அடாவடி
TN Fishermen Arrest: இதுக்கு இல்லையா ஒரு எண்டு..! மீண்டும் மீனவர்கள் 18 பேர் கைது, இலங்கை கடற்படை அடாவடி
Tiruvannamalai Landslide: திருவண்ணாமலை மண் சரிவு - நிறுத்தப்பட்ட மீட்பு பணி? ஏன் இந்த தாமதம்?
Tiruvannamalai Landslide: திருவண்ணாமலை மண் சரிவு - நிறுத்தப்பட்ட மீட்பு பணி? ஏன் இந்த தாமதம்?
கஞ்சா போதையில் கங்கை அமரன் ரகளை! நைட்டியுடன் அட்ராசிட்டி!
கஞ்சா போதையில் கங்கை அமரன் ரகளை! நைட்டியுடன் அட்ராசிட்டி!
Telephone Auction: பெருக்கெடுத்த ரத்த ஆறு, இனப்படுகொலை “மரணத்தின் ஆயுதம்” - ஆனால் ரூ.2 கோடிக்கு ஏலம் ஏன்?
Telephone Auction: பெருக்கெடுத்த ரத்த ஆறு, இனப்படுகொலை “மரணத்தின் ஆயுதம்” - ஆனால் ரூ.2 கோடிக்கு ஏலம் ஏன்?
Virat Kohli: 5ம் நம்பர் ஜெர்சியில் விராட் கோலி! ரன் மெஷின் அடிச்ச சிக்சஸரைப் பாருங்க!
Virat Kohli: 5ம் நம்பர் ஜெர்சியில் விராட் கோலி! ரன் மெஷின் அடிச்ச சிக்சஸரைப் பாருங்க!
Bigg Boss Tamil Season 8: பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் முக்கிய பணியில் இருந்த நபர் தற்கொலை! ஸ்தம்பித்து போன குழு!
Bigg Boss Tamil Season 8: பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் முக்கிய பணியில் இருந்த நபர் தற்கொலை! ஸ்தம்பித்து போன குழு!
PV Sindhu Wedding: அடடே..! ஒலிம்பிக் சாதனை மங்கை பி.வி. சிந்துவிற்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?
PV Sindhu Wedding: அடடே..! ஒலிம்பிக் சாதனை மங்கை பி.வி. சிந்துவிற்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?
Embed widget