மேலும் அறிய

24 மணிநேரமாக சுற்றும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜெயா டிவி தலைமை நிர்வாகி.. என்ன நடந்தது?

கடந்த 24 மணி நேரமாக தற்கொலை முயற்சி, மருத்துவமனையில் கவலைக்கிடம் என சுற்றி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஜெயா டிவியின் தலைமை நிர்வாகியான விவேக் ஜெயராமன்

கடந்த 24 மணி நேரமாக, ஜெயா டிவியின் முக்கிய நிர்வாகியான விவேக்கின் மனைவி தொடர்பாக வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. தமது மனைவியின் பிறந்தநாளுக்கு, முருகன் கோவிலில் இருவரும் ஒன்றாக தரிசனம் செய்து, பொய்யான பரப்புரைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் விவேக்.

ஜெயா டிவி-யின் தலைமை செயலாக்க அதிகாரியான (COO) விவேக் ஜெயராமன், சசிகலா குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான உறவினர். தற்போது ஜெயா டிவி குழுமத்தின் அனைத்து சேனல்களையும் கவனித்து வரும் அவர், சசிகலாவின் பயணங்களிலும் உடன் இருந்து வருகிறார். இந் நிலையில், விவேக் ஜெயராமனின் மனைவி கீர்த்தனா, திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக சமூக வலைதளங்களில் நேற்று தகவல் பரவியது. அதுவும், தற்கொலைக்கு முயன்று, கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தகவல்கள் பரவின. 

24 மணிநேரமாக சுற்றும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜெயா டிவி தலைமை நிர்வாகி.. என்ன நடந்தது?

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்ற தகவல் மட்டுமே உண்மை. இருப்பினும், சமூக வலைதளங்களில் பரவ ஆரம்பித்ததும், கை,கால், கண் வைத்து, வதந்தி தீயாக பரவ ஆரம்பித்தது. தற்கொலைக்கு முயன்று, ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுகிறார் என்பது வரை செய்திகள் பரவின. ஆனால், இவை அனைத்துமே தவறு என்பது தற்போது தெள்ளத் தெளிவாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து வெளியாகவில்லை. ஆனால், அவர்கள் தரப்பில் இருந்து  சில புகைப்படங்களும் காணொலி காட்சிகளும் தற்போது கிடைத்துள்ளன. 

அதன்படி, ஜெயா டிவி-யின் தலைமை செயலாக்க அதிகாரி விவேக் ஜெயராமனின் மனைவி கீர்த்தனாவுக்கு, சிறிய உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் சென்றுள்ளார். சென்னை அடையாறில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற அவர், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி, இன்று காலை முதல் அவரது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவரும் அவரது கணவர் விவேக் ஜெயராமனும், இன்று காலை சென்னை பெசன்ட் நகரில் உள்ள முருகன் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்துள்ளனர்.

24 மணிநேரமாக சுற்றும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜெயா டிவி தலைமை நிர்வாகி.. என்ன நடந்தது?

இதுதொடர்பாக வெளியாகியுள்ள புகைப்படங்கள் மற்றும் காட்சிகளைப் பார்க்கும்போது, விவேக் ஜெயரானின் மனைவி கீர்த்தனா ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுகிறார் என்பதும், தற்கொலைக்கு முயன்று ஆபத்தான நிலையில் உள்ளார் என்பதும் முற்றிலும் தவறானவை என்றும் முழுக்க முழுக்க வதந்தி என்பதும் தெளிவாகியுள்ளது. இது திட்டமிட்டு, பரப்பப்படும் வதந்திகள் என்றும் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக சிலர் திட்டமிட்டு செய்கிறார்கள் என்றும் விவேக் ஜெயராமனுக்கு நெருக்கமானவர்கள் நம்மிடம் தெரிவித்தனர். 

இன்று பிறந்தநாள் கொண்டாடும் தமது மனைவியுடன் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்த காட்சிகளை வெளியிட்டு, தமது மனைவி உடல்நிலை தொடர்பாக வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஜெயா டிவியின் தலைமை செயலாக்க அதிகாரி விவேக் ஜெயராமன். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கோவையில் கிரிக்கெட் மைதானம் அமைக்க இடம் ஆய்வு; வாக்குறுதியை நிறைவேற்ற களமிறங்கிய உதயநிதி
கோவையில் கிரிக்கெட் மைதானம் அமைக்க இடம் ஆய்வு; வாக்குறுதியை நிறைவேற்ற களமிறங்கிய உதயநிதி
கஞ்சா விற்பனையில் போட்டா போட்டி! பெற்றோர் கண் முன்னே 20 வயது இளைஞர் கொடூர கொலை! நடந்தது என்ன?
கஞ்சா விற்பனையில் போட்டா போட்டி! பெற்றோர் கண் முன்னே 20 வயது இளைஞர் கொடூர கொலை! நடந்தது என்ன?
Breaking News LIVE: இரு பாலர் கல்லூரியாகும் நந்தனம் அரசு கல்லூரி: காரணம் தெரியுமா?
Breaking News LIVE: இரு பாலர் கல்லூரியாகும் நந்தனம் அரசு கல்லூரி: காரணம் தெரியுமா?
Salem Leopard: சேலம் மக்களை அச்சுறுத்தும் சிறுத்தை; குழந்தைகளை வெளியே அனுப்ப வேண்டாம் -  வனத்துறை எச்சரிக்கை
சேலம் மக்களை அச்சுறுத்தும் சிறுத்தை; குழந்தைகளை வெளியே அனுப்ப வேண்டாம் - வனத்துறை எச்சரிக்கை
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Ramadoss vs Anbumani  : வேண்டும்.. வேண்டாம்..ராமதாஸ் vs அன்புமணி! குழப்பத்தில் பாமக!Tamilisai Vs Annamalai : தமிழிசைக்கு அழுத்தம்? மேடையில் நடந்தது என்ன? பரபரப்பு விளக்கம்Yediyurappa Arrest? | சிறுமிக்கு பாலியல் தொல்லை எடியூரப்பாவுக்கு கைது வாரண்ட்!Madurai Muthu Help Handicap People | லாரான்ஸ், பாலா வரிசையில்..   நடிகர் மதுரை முத்து!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கோவையில் கிரிக்கெட் மைதானம் அமைக்க இடம் ஆய்வு; வாக்குறுதியை நிறைவேற்ற களமிறங்கிய உதயநிதி
கோவையில் கிரிக்கெட் மைதானம் அமைக்க இடம் ஆய்வு; வாக்குறுதியை நிறைவேற்ற களமிறங்கிய உதயநிதி
கஞ்சா விற்பனையில் போட்டா போட்டி! பெற்றோர் கண் முன்னே 20 வயது இளைஞர் கொடூர கொலை! நடந்தது என்ன?
கஞ்சா விற்பனையில் போட்டா போட்டி! பெற்றோர் கண் முன்னே 20 வயது இளைஞர் கொடூர கொலை! நடந்தது என்ன?
Breaking News LIVE: இரு பாலர் கல்லூரியாகும் நந்தனம் அரசு கல்லூரி: காரணம் தெரியுமா?
Breaking News LIVE: இரு பாலர் கல்லூரியாகும் நந்தனம் அரசு கல்லூரி: காரணம் தெரியுமா?
Salem Leopard: சேலம் மக்களை அச்சுறுத்தும் சிறுத்தை; குழந்தைகளை வெளியே அனுப்ப வேண்டாம் -  வனத்துறை எச்சரிக்கை
சேலம் மக்களை அச்சுறுத்தும் சிறுத்தை; குழந்தைகளை வெளியே அனுப்ப வேண்டாம் - வனத்துறை எச்சரிக்கை
NEET Re Exam: கருணை மதிப்பெண் விவகாரம்; மாறும் நீட் தேர்வு முடிவுகள்? 23 பேர் மட்டுமே முழு மதிப்பெண்?
NEET Re Exam: கருணை மதிப்பெண் விவகாரம்; மாறும் நீட் தேர்வு முடிவுகள்? 23 பேர் மட்டுமே முழு மதிப்பெண்?
BREAKING: திருப்பத்தூரில் சிறுத்தை: முதியவர் காயம்? பொதுமக்கள், மாணவர்கள் நிலை என்ன?
திருப்பத்தூரில் சிறுத்தை: முதியவர் காயம்? பொதுமக்கள், மாணவர்கள் நிலை என்ன?
எடியூரப்பாவை கைது செய்ய இடைக்கால தடை.. போக்சோ வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு!
எடியூரப்பாவை கைது செய்ய இடைக்கால தடை.. போக்சோ வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு!
சீக்கியர்களின் முதல் மன்னரின் நினைவு தினம்! 509 இந்தியர்களுக்கு விசா வழங்கிய பாகிஸ்தான்!
சீக்கியர்களின் முதல் மன்னரின் நினைவு தினம்! 509 இந்தியர்களுக்கு விசா வழங்கிய பாகிஸ்தான்!
Embed widget