மேலும் அறிய

Senthil Balaji Case: கைவிரித்த உயர்நீதிமன்றம்.. கை கொடுக்குமா உச்சநீதிமன்றம்? செந்தில் பாலாஜி வழக்கின் இன்றைய நிலை?

செந்தில் பாலாஜி எத்தனை நாட்கள் காவலில் வைக்க வேண்டும் என்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக கூறப்பட்டு அவரது அமலாக்கத்துறை சோதனையை நடத்தி அவர் கைது செய்யப்பட்டார். அப்போது ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக ஜூன் 21 ஆம் தேதி அவருக்கு இதய அறுவை சிகிச்சை நடைபெற்றது.

இதனிடையே, அமலாக்கத்துறை அவரை கைது செய்ததை தொடர்ந்து, செந்தில் பாலாஜி மனைவியின் தரப்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. முதலில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தியது அதில் இரு நீதிபதிகளின் தீர்ப்பு மாறுபட்டு இருந்ததால், 3 வது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. இந்த மனு மூன்றாவது நீதிபதி சி.வி கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, “ கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு எந்த தடையும் கோர முடியாது. விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்.  தான் குற்றம் செய்யவில்லை என்பதை விசாரணை நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும். கைது செய்யப்பட்டால் கஸ்ட்டடியில் எடுக்க வேண்டியது அவசியம்” என கூறியுள்ளார்.  நீதிபதி பரத சக்கரவர்த்தி கூறிய காரணத்திலும் உடன்படுவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் செந்தில் பாலாஜியின் சிகிச்சை முடிந்ததும் காவலில் எடுக்கலாம் எனவும், அதேபோல் சிகிச்சை நாட்களை நீதிமன்றம் நாட்களாக கருத முடியாது” என குறிப்பிட்டு தீர்ப்பை வழங்கினார்.

ஏற்கனவே நெஞ்சு வலி காரணமாக அறுவை சிகிச்சை நடந்து தொடர் சிகிச்சையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, 18 ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

இது ஒருபுறம் இருக்க,  தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்பட வேண்டும் என்றும், அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த விசாரணையின் போது அமலாக்கத்துறை தரப்பில், கைது செய்து விசாரிக்க அதிகாரம் உள்ளது என்றும் அமலாக்கத்துறை தரப்பில் இருக்கும் நியாயங்களை முன்வைத்து வாதிடப்பட்டது.

செந்தில் பாலாஜி தரப்பில், கைது நடவடிக்கை என்பது தவறானது என்றும் ஏற்கனவே 15 நாட்கள் முடிந்த நிலையில் மீண்டும் காவலில் எப்படி எடுக்க முடியும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. மேலும் அமலாக்கத்துறை வாதம் எடுத்துக்கொள்ளக்கூடாது என செந்தில் பாலாஜி தரப்பில் கூறப்பட்டது.  இதனை கேட்ட நீதிபதி அமலாக்கத்துறை தரப்பில் பதில் அளிக்க வேண்டும் என கூறி இந்த வழக்கை இன்றைய தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி செந்தில் பாலாஜியை எத்தனை நாட்கள் காவலில் எடுக்க வேண்டும் என்பது தொடர்பான விசாரணை நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது அப்போது வழக்கறிஞர்கள் நிஷா பானு மற்றும் என்.ஆர் இளங்கோ தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், செந்தில் பாலாஜியின் கவல் தொடர்பாக உச்சநீதிமன்றமே முடிவெடுக்கட்டும் என வாதிடப்பட்டது. இதனை கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் இருக்கும் அனைத்து அம்சங்கள் பற்றி உச்சநீதிமன்றம் விசாரிக்கும் போது இந்த வழக்கை முடித்து வைக்கலாம் என கூறி வழக்கை முடித்து வைத்தனர். இன்றைய உச்ச நீதிமன்ற  விசாரணையில் செந்தில் பாலாஜிக்கு எத்தனை நாட்கள் காவல் என்பது தொடர்பாக உத்தரவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
சிந்தாமணி ஸ்டேஷனில் லாக்கப் மரணம்? “தவெக ஆட்சியில் தொடரும் கொடூரம்” - டிடிவி தினகரன் கொந்தளிப்பு
சிந்தாமணி ஸ்டேஷனில் லாக்கப் மரணம்? “தவெக ஆட்சியில் தொடரும் கொடூரம்” - டிடிவி தினகரன் கொந்தளிப்பு
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
"எஸ்.ஐ மேலேயே கைய வச்சியா?" - பளார் விட்ட தஞ்சை இளைஞரின் கதி என்ன? என்னென்ன பிரிவுகளில் கேஸ்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
"எஸ்.ஐ மேலேயே கைய வச்சியா?" - பளார் விட்ட தஞ்சை இளைஞரின் கதி என்ன? என்னென்ன பிரிவுகளில் கேஸ்?
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
SUV Rivals: எஸ்யுவி தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி
SUV தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி
Embed widget