மேலும் அறிய

கரூரில் மாற்றுத் திறளாளிகள் தினவிழாவில் 62 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

கரூர் தாந்தோணியில் நடைபெற்ற அனைத்து நாடுகள் மாற்றுத் திறளாளிகள் தினவிழாவில் 62 பயனாளிகளுக்கு ரூ.15.69 லட்சம் மதிப்பில்  அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர் வழங்கினார்.

கரூர் தாந்தோணி தனியார் மண்டபத்தில் நடைபெற்ற சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர் 62 பயனாளிகளுக்கு ரூ.15.69 லட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தாதவது:
 
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்வதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு கவனம் மேற்கொண்டு வருகிறோம். மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை ஆற்ற அனைத்து மருத்துவர்களும் நமக்கு உறுதுணையாக இருக்கிறார்கள் அதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மாற்றுத்திறனாளிகளுக்கு சம உரிமை என்ற தத்துவத்தின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. 

கரூர் மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற காலத்தில் இருந்து மாற்றுத்திறனாளிக்காக அவர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு பணிபுரிந்து வருகிறோம். தமிழகத்திலே கொரோனா காலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டம் கரூர் மாவட்டத்தில் மட்டும்தான் செயல்படுத்தப்பட்டது. மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று அவர்களின் தேவைகளை கணக்கெடுக்கும் பணி தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

கரூரில் மாற்றுத் திறளாளிகள் தினவிழாவில் 62 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

அதிக அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்ட மாவட்டமாக நாம் திகழ்கிறோம். அதேபோல் உபகரணங்கள் வழங்கும் முகாம்களையும் நடத்தி வருகிறோம். 20க்கும் மேற்பட்ட முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிப்பதற்காக உங்களுக்காக புதிதாக சாய்தளம் அமைத்து பிரதியோகமாக இருக்கைகள் அமைத்து உங்களிடம் மனுக்களை பெற்று உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறோம். உங்களுக்கு தேவையான உபகரணங்களை இருப்பு வைத்து உடனடியாக வழங்கப்பட்டு வருகிறது. மனு கொடுத்த ஒரு மணி நேரத்தில் 10 க்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்கப்பட்டு உள்ளது. அதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக மிகுந்த மன நிறைவை நாங்கள் அடைகிறோம். இந்த ஆண்டுக்கு மாற்றுத்திறனாளிகள் நலம் சார்ந்த திட்டங்களை வழங்குவதற்காக தமிழக அரசிடம் மாவட்ட ஆட்சித் தலைவரின் விறுப்புரிமை நிதிக்காக ரூ.5 கோடி கேட்டு அரசுக்கு கடிதம் எழுதி உள்ளோம். இந்தியாவிலேயே முதல்முறையாக விடியல் வீடுகள் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்டு அவர்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வீடுகளில் அவர்கள் யாருடைய துணையும் இல்லாமல் செயல்படும் அளவிற்கு கட்டுமான அமைப்புடன் மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்த வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 

மகிழ்ச்சிக்குரிய செய்தி என்னவென்றால் அரசுத்துறை செயலர் அவர்கள் இந்த வீடுகளின் வடிவங்களை பார்த்து கரூர் மாவட்டத்தில் உள்ளது போல் தமிழக முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகள் வழங்கும்போது இந்த வடிவமைப்பில் தான் வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்புவதாக கூறி இருக்கிறார்கள். இவை அனைத்தும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவு படியும், மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத் தேர்வு துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படியே சாத்தியம் ஆனது. 

மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகை ரூ.1000த்திலிருந்து  ரூ. 1500 ஆக அரசு உயர்த்தி கொடுத்து உள்ளது. நீங்கள் யாருடைய துணையும் இல்லாமல் சுயமாக உங்களுடைய பங்களிப்பை இந்த சமூகத்திற்கு வழங்குபடுவது  உங்களை சமப்படுத்துவதற்காக கொண்டு உள்ளது. இந்த விழா. தமிழக அரசும் கரூர் மாவட்ட நிர்வாகமும் உங்களுக்கு துணையாக எப்போதும் இருக்கும். இந்த நன்னாளில் உலக மாற்றுத்திறனாளிகள் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.த. பிரபு சங்கர் தெரிவித்தார்.

கரூரில் மாற்றுத் திறளாளிகள் தினவிழாவில் 62 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

இந்நிகழ்ச்சியில் 02 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தலா ரூ.1,05,000 மதிப்பில் ரூ.2,10,000 பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலியும், கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 07 நபர்கள் பராமரிப்பு உதவித் தொகை நவம்பர் 2022 முதல் ரூ.2000  தலா வீதம் 10 மாதங்களுக்கு மொத்தம் ரூ1,40,000 மதிப்பிலும், 11 மாற்றுத்திறனாளி பயனாளிக்கு ரூ.233335 மதிப்பீட்டில் வங்கி கடன் மாணியமும், 23 மாற்றுத்திறனாளி பயனாளிக்கு ரூ.3,53,500 மதிப்பில் ஈமச்சடங்கு உதவித்தொகையும்(இயற்கை மரணம்,), 3 பயனாளிக்கு ரூ.236550 மதிப்பீட்டில் பெட்ரோல் ஸ்கூட்டார்களும், 2 தொண்டு நிறுவனங்களுக்கு ரூ. 3,18,000 மதிப்பீட்டில் உணவூட்ட மானியமும்,  02 பயனாளிக்கு ரூ.2688 மதிப்பீட்டில் பிரெய்லி வாட்ச்களும்,02 பயனாளிக்கு ரூ.53328 மதிப்பீட்டில் ஆவாஸ்களும், 8 பயனாளிகளுக்குஇலவச பயணச்சலுகை அட்டைகளும்,  , 2 பயனாளிகளுக்கு ரூ.15,800 மதிப்பீட்டில் மூன்று சக்கர வண்டிகளும் என 62 பயனாளிகளுக்கு ரூ.15,68,701 மதிப்பிலான உதவி உபகரணங்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் த.பிரபுசங்கர் வழங்கினார்கள்.  பின்னர் மாற்றுத்திறனாளி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் த.பிரபுசங்கர் பரிசுகளை வழங்கினார். 

தொடர்ந்து மாவட்ட இசைப்பள்ளி குழுவினர்களின் பரத நாட்டியமும், காது கேளாத குழந்தைகளின் நடனமும்,  லாலாப்பேட்டை எஸ்எஸ்ஏ ஊராட்சி  ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகளின் நடனமும், தாந்தோணிமலை மதர் சிறப்புப்பள்ளியின் நடனங்களும் அன்பலாயம் பள்ளி மாணவரின் தாளம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.தெய்வநாதன், சமுக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் திரு.சைபுதீன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.காமாட்சி  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
Tanush Kotian: அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் களமிறங்கும் ஆல்-ரவுண்டர்! - யார் இந்த தனுஷ் கோடியன்? 
Tanush Kotian: அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் களமிறங்கும் ஆல்-ரவுண்டர்! - யார் இந்த தனுஷ் கோடியன்? 
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka GandhiTVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy AnandTN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
Tanush Kotian: அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் களமிறங்கும் ஆல்-ரவுண்டர்! - யார் இந்த தனுஷ் கோடியன்? 
Tanush Kotian: அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் களமிறங்கும் ஆல்-ரவுண்டர்! - யார் இந்த தனுஷ் கோடியன்? 
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"மூளையில் ரத்தக்கசிவு" ஐசியூவில் வினோத் காம்ப்ளி.. உயிருக்கு போராடும் சச்சினின் நண்பர்!
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
Minister MRK Pannerselvam:  கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
All Pass Cancelled: 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஷாக்! ஃபெயில் ஆனால் அதே வகுப்புதான்! மத்திய அரசின் புது உத்தரவு!
All Pass Cancelled: 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஷாக்! ஃபெயில் ஆனால் அதே வகுப்புதான்! மத்திய அரசின் புது உத்தரவு!
Embed widget