மேலும் அறிய

India 75: இந்திய சுதந்திர போராட்டத்தில் முதன்முதலில் ஆங்கிலேயர்களை எதிர்த்த பாளையக்காரர்கள் கதை

ஆங்கிலேயர்களை, இந்திய நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டுமென முதன் முதலில் பாளையக்காரர்கள் எதிர்க்க ஆரம்பித்தனர்.

18ம் நூற்றாண்டில் ஆற்காடு நவாப் வீழ்ச்சியினால் ஆங்கிலேயர்கள், தென்னிந்திய பாளையக்காரர்கள் மீது வரி வசூலிக்கும் உரிமையை பெற்றனர். ஆனால் பாளையக்காரர்கள் வரி செலுத்த மறுத்து, ஆங்கிலேயர்களுடன் போருக்கு தயாராகினர். யார் இந்த பாளையக்காரர்கள், ஏன் அவர்களிடம் ஆங்கிலேயர்கள் கேட்கின்றனர் என்பதை பார்ப்போம்.

பாளையக்காரர்கள்:

14 ஆம் நூற்றாண்டிலிருந்து இந்தியாவின் தென் பகுதியில் ஆட்சி செய்து வந்து கொண்டிருந்த விஜயநகர பேரரசானது, தனக்கு கீழ் உள்ள பகுதிகளை எளிமையாக ஆட்சி செய்யும் வகையில் பல பகுதிகளாக பிரித்து, அப்பகுதிகளை நிர்வாகம் செய்ய நாயக்கர்களை நியமிக்கின்றனர். இது தான் நாயக்கர் ஆட்சி முறை என அழைக்கப்படுகிறது. மதுரை பகுதிகளில் ஆட்சி செய்ய விசுவநாத நாயக்கர் என்பவர் நியமனம் செய்யப்படுகிறார். இந்நிலையில் நாயக்கரின் கீழ் உள்ள பகுதிகளை நிர்வாக வசிக்காக பாளையங்களாக பிரித்தனர். மதுரை பகுதியில் 72 பாளையமாக பிரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதை நிர்வகிக்கும் பொறுப்பு பெற்றவர்கள் பாளையக்காரர்கள் என அழைக்கப்பட்டனர்.

விஜய நகர பேரரசு- நாயக்கர்கள்- பாளையக்காரர்கள்

India 75: இந்திய சுதந்திர போராட்டத்தில் முதன்முதலில் ஆங்கிலேயர்களை எதிர்த்த பாளையக்காரர்கள் கதை

பாளையக்காரர்கள் வரி வசூல் செய்து குறிப்பிட்ட பகுதியை நாயக்கர்களுக்கு அளித்து வந்தனர், மீதமிருந்த பகுதிகளை பாளைய பகுதி நிர்வாகங்களுக்கு பயன்படுத்தி வந்தனர். இவர்களே சட்ட ஒழுங்கையும் பேணி காத்து வந்தனர். சில பாளையக்காரர்கள் முறையாக நீதி நெறியுடன் நிர்வாகம் செய்து வந்தனர். சில பாளையக்காரர்கள் மக்கள் மீது அதிக வரி விதித்து, மக்களின் வருமாணத்தை சுரண்டவும் செய்தனர்.

ஆற்காடு நவாப்:

முகலாயர்களின் கீழ் ஆட்சி செய்த வந்த ஆற்காடு நவாப்புகள், 18 நூற்றாண்டுகளின் முற்பகுதியில் முகலாயர்களின் வீழ்ச்சி காரணமாக, தங்களை சுதந்திரமாக அறிவித்துக் கொண்டன. அதையடுத்து முகலாயர்களுக்கு கப்பம் கட்டுவதை நிறுத்தினர். பின்னர் அவர்களை காத்துக் கொள்ள ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் உதவியை நாடினர். ஆங்கிலேயர்களிடம் கடனாக பணம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

இந்த காலத்தில் தான் நாவப்பினர், நாயக்கர் ஆட்சி பகுதிகளை கைப்பற்ற ஆரம்பித்தனர். நாயக்கர்கள் ஆட்சி வீழ்ச்சியடைந்ததும், இவர்களுக்கு வரி செலுத்துவதை பாளையக்காரர்கள் நிறுத்தினர். இந்நிலையில், நவாப்பினர், நாயக்கர்கள் பகுதி தங்களது கட்டுப்பாட்டில் வந்ததாக கூறி, பாளையக்காரர்களிடம் வரி கொடுக்குமாறு கேட்கின்றனர். வரி வசூல் தொடர்பாக இருவருக்கும் முரண்பாடு ஏற்படுகிறது. இதனால் நாயக்கர்கள் வருமான பற்றாக்குறை ஏற்படுகிறது. இதை சமாளிக்க ஆங்கிலேயர்களிடம் அதிக கடன் பெற்றதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியிடம், நீங்கேள வரி வசூலித்து கொள்ளுங்கள் என்று தெரிவிக்கின்றனர்.

India 75: இந்திய சுதந்திர போராட்டத்தில் முதன்முதலில் ஆங்கிலேயர்களை எதிர்த்த பாளையக்காரர்கள் கதை

அதன் காரணத்தால் தான், ஆங்கிலேயர்கள் பாளையக்காரர்கள் நிர்வாகத்தின் மீது தலையீடு செய்கின்றனர். வரி கட்டுமாறு உத்திரவிடுகின்றனர். ஆனால் பாளையக்காரர்கள், அந்நிய நாட்டு மன்னனுக்கு நாங்கள் ஏன் வரி கட்ட வேண்டும் என மறுக்கின்றனர். பீரங்கி, துப்பாக்கி வைத்திருந்த ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியை கண்டு அஞ்சாது. பாளையக்காரர்கள் ஒன்றிணைந்து எதிர்க்க ஆரம்பிக்கின்றனர். பாளையக்காரர்களில் வரி செலுத்த மறுத்து,  எதிர்ப்பு தெரிவித்தவர்களில் முக்கியமானவர்களாக பூலித்தேவர், வீரபாண்டிய கட்டபொம்மன், வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் குயிலி, தீரன் சின்னமலை உள்ளிட்டோராகும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA T20 Final LIVE Score:  டாஸ் வென்ற இந்திய அணி.. பேட்டிங்கை கையில் எடுத்த ரோஹித் சர்மா..  சாம்பியன் பட்டம் யாருக்கு?
டாஸ் வென்ற இந்திய அணி.. பேட்டிங்கை கையில் எடுத்த ரோஹித் சர்மா.. சாம்பியன் பட்டம் யாருக்கு?
IND vs SA T20 WC Final: டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்தியா! டாஸ் வரலாறு சொல்வது என்ன?
IND vs SA T20 WC Final: டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்தியா! டாஸ் வரலாறு சொல்வது என்ன?
Maldives President: மாலத்தீவு அதிபர் முய்ஸு-க்கு சூனியம்: அமைச்சர் உட்பட 4 பேர் அதிரடி கைது! நடந்தது என்ன?
Maldives President: மாலத்தீவு அதிபர் முய்ஸு-க்கு சூனியம்: அமைச்சர் உட்பட 4 பேர் அதிரடி கைது! நடந்தது என்ன?
IND vs SA T20 Final: பார்படாஸில் படிப்படியாக குறையும் மழை.. ரசிகர்கள் குஷி!
IND vs SA T20 Final: பார்படாஸில் படிப்படியாக குறையும் மழை.. ரசிகர்கள் குஷி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோT20 World Cup Final :  இறுதிப்போட்டியில் இந்தியா..வீழ்த்துமா தென்னாப்பிரிக்கா?மகுடம் சூடப்போவது யார்?Dharmapuri Gender Reveal Issue : வசமாக சிக்கிய கும்பல்..LEFT&RIGHT வாங்கிய அதிகாரிBussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA T20 Final LIVE Score:  டாஸ் வென்ற இந்திய அணி.. பேட்டிங்கை கையில் எடுத்த ரோஹித் சர்மா..  சாம்பியன் பட்டம் யாருக்கு?
டாஸ் வென்ற இந்திய அணி.. பேட்டிங்கை கையில் எடுத்த ரோஹித் சர்மா.. சாம்பியன் பட்டம் யாருக்கு?
IND vs SA T20 WC Final: டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்தியா! டாஸ் வரலாறு சொல்வது என்ன?
IND vs SA T20 WC Final: டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்தியா! டாஸ் வரலாறு சொல்வது என்ன?
Maldives President: மாலத்தீவு அதிபர் முய்ஸு-க்கு சூனியம்: அமைச்சர் உட்பட 4 பேர் அதிரடி கைது! நடந்தது என்ன?
Maldives President: மாலத்தீவு அதிபர் முய்ஸு-க்கு சூனியம்: அமைச்சர் உட்பட 4 பேர் அதிரடி கைது! நடந்தது என்ன?
IND vs SA T20 Final: பார்படாஸில் படிப்படியாக குறையும் மழை.. ரசிகர்கள் குஷி!
IND vs SA T20 Final: பார்படாஸில் படிப்படியாக குறையும் மழை.. ரசிகர்கள் குஷி!
Nayanthara: எந்த விழாவுக்கும் போகாத நான்.. “நேசிப்பாயா” பட விழாவில் நயன்தாரா விளக்கம்!
Nayanthara: எந்த விழாவுக்கும் போகாத நான்.. “நேசிப்பாயா” பட விழாவில் நயன்தாரா விளக்கம்!
Indian 2: அனிருத் பற்றி ஷங்கரிடம் கேளுங்கள்.. நான் இளையராஜா, ரஹ்மான் ரசிகன்.. இந்தியன் 2 நிகழ்வில் கமல்ஹாசன்!
Indian 2: அனிருத் பற்றி ஷங்கரிடம் கேளுங்கள்.. நான் இளையராஜா, ரஹ்மான் ரசிகன்.. இந்தியன் 2 நிகழ்வில் கமல்ஹாசன்!
Breaking News LIVE: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மேலும் 14 நாள்களுக்கு நீதிமன்ற காவல்!
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மேலும் 14 நாள்களுக்கு நீதிமன்ற காவல்!
Suchitra on Kasthuri: வாலண்ட்டியராக சென்று வாங்கி கட்டிக்கொண்ட கஸ்தூரி! சுசித்ரா வீடியோவால் பரபரப்பு - என்ன நடந்தது?
Suchitra on Kasthuri: வாலண்ட்டியராக சென்று வாங்கி கட்டிக்கொண்ட கஸ்தூரி! சுசித்ரா வீடியோவால் பரபரப்பு - என்ன நடந்தது?
Embed widget