TN Rain Alert: அடுத்த 3 மணி நேரம்.. 20 மாவட்டங்களில் வெளுக்கப்போது மழை..! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் தென்காசி, ராமநாதபுரம், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழைக்கு வாய்ப்பு:
தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
இதன் காரணமாக, 25.04.2023 மற்றும் 26.04.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
27.04.2023 மற்றும் 28.04.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு (சென்டிமீட்டரில்):
கலயநல்லூர் (கள்ளக்குறிச்சி), மக்கினாம்பட்டி (கோயம்புத்தூர்) தலா 9, கிண்ணக்கொரை (நீலகிரி), பொன்னனியாறு அணை (திருச்சி), கெட்டி (நீலகிரி) தலா 8, காட்டுமயிலூர் (கடலூர்), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), மணப்பாறை (திருச்சி), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை) தலா 7, செங்கம் (திருவண்ணாமலை), ஆரணி (திருவண்ணாமலை) , நத்தம் (திண்டுக்கல்), மஞ்சளாறு (தேனி), தலைஞாயிறு (நாகப்பட்டினம்), காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை), பொன்னமராவதி (புதுக்கோட்டை), உடுமலைப்பேட்டை (திருப்பூர்) தலா 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
அடுத்த 3 மணி நேரம்:
மேலும் அடுத்த 3 மணி நேரத்தில் தென்காசி, தூத்துக்குடியில் ஒரு சில இடங்களிலும் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரத்தில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான் முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
5 நாட்களுக்கு தொடரும்:
நேற்று பல்வேறு மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் இந்த மழை அடுத்த 5 நாட்களுக்கு தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை இருந்தாலும் ஒரு சில மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக தான் உள்ளது. அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 38.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடந்த சில வாரங்களாக சூரியன் சுட்டெரித்த நிலையில் கோடை மழை வெப்பத்தை சற்று தணித்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Indonesia Earthquake: இந்தோனேஷியாவில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை