மேலும் அறிய

எமதர்மனை நீதிபதியாக கருதி வணங்கும் பக்தர்கள்.. தஞ்சாவூரில் எமதர்மராஜா கோயில் பற்றி விவரங்கள் தெரியுமா...?

தஞ்சாவூர் மாவட்டத்தில் எமதர்மனுக்கு என தனிக் கோயில் உள்ளது. அப்பகுதி மக்கள் அவரை இஷ்ட தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் எமதர்மனுக்கு என தனி கோயில் உள்ளது. அப்பகுதி மக்கள்  அவரை இஷ்ட தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். அதன்படி, ஆறு அடி உயர எருமை வாகனத்தின் மீது, முறுக்கிய மீசையுடன் பாசக்கயிறு மற்றும் ஓலைச்சுவடி, கதையை தாங்கியபடி கம்பீரமாக எமதர்மராஜா இருக்காரா? இவரை நீதிபதியாக நினைக்கிறீங்களா?

ஆமாப்பா ஆமாம். எங்களுக்கெல்லாம் நீதிபதி எமதர்மராஜாதான். தனிக்கோயிலா இருக்கு. அதுவும் 2 ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடியே கட்டிட்டாங்க தெரியுமா. அண்ணே... சொல்லுங்கண்ணே எங்கண்ணே இருக்கு இந்த கோயில். சரி தெரிஞ்சுக்குவோம் வாங்க.

எமதர்மராஜா கோயில்

ஒரு சில கோவிலில் மட்டும் இருக்கு. மிகவும் சிறியதாக எமதர்மராஜாவுக்கு சன்னதிகள் இருக்கும். ஆனால் தமிழகத்தின் நெற்களஞ்சியம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே திருச்சிற்றம்பலத்தில் எமதர்மராஜாவுக்கு என்றே தனி கோவில் இருக்கு. இந்த கோவில் 2000 ஆண்டு பழமையானது என்று கூறப்படுகிறது. இப்பகுதி மக்கள் தங்களின் இஷ்ட தெய்வமாக, நீதிபதியாக எமதர்மரை வணங்கி வருகின்றனர்.

கோயில் தல வரலாறு என்ன சொல்லுது தெரியுமா! ஒருமுறை பிரகதாம்பாள் என்ற திருநாமத்துடன் அவதரித்த பார்வதிதேவியை சிறு குழந்தையாக எமதர்மனிடம் வழங்கினார், சிவபெருமான். அந்த குழந்தையை பூமிக்கு அழைத்துச் சென்று, பெரியவளாக வளர்ந்ததும் சிவபெருமானுக்கே திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதுதான் சிவனின் கட்டளை. தனக்கு தலைமையான சிவனின் உத்தரவின் படி பூமிக்கு வந்து சேர்ந்தார் எமதர்மன். வருடங்கள் கடகடவென கடக்க பிரகதாம்பாள், பருவ வயதை எட்டியதும், அவளை சிவபெருமானுக்கு திருமணம் செய்து வைக்க முப்பத்து முக்கோடி தேவர்களும் முடிவு செய்தனர்.

ஆனால் சிவபெருமானே ஆழ்ந்த தியானத்தில் இருக்க, மன்மதனை அழைத்து வந்து தியானத்தை கலைக்கும்படி செய்ய கடும் கோபத்துடன் கண் விழித்த சிவபெருமான், நெற்றிக்கண்ணை திறந்து மன்மதனை அழிக்க, ரதிதேவி கலங்கி நின்று வேண்ட,  “இறந்தவர்கள் உயிர் பெறுவதில்லை. இருப்பினும் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் மன்மதனுக்காக நடத்தப்படும் திருவிழாவின் போது, உன்னுடைய கண்களுக்கு மட்டும் மன்மதன் தெரிவான்” என்று சிவபெருமான் கூறியருளினார்.

அதன்படி மன்மதனின் உயிரைப் பறிப்பதற்காக எமதர்மராஜன் வந்து இறங்கிய இடம்தான் திருச்சிற்றம்பலம் என்று தல புராணக் கதை சொல்கிறது. இங்குதான் எமதர்ம ராஜாவுக்கு என்று கட்டப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த கோயில் உள்ளது.

6 அடி உயர எருமை வாகனத்தின் மீது, முறுக்கிய மீசையுடன் பாசக்கயிறு மற்றும் ஓலைச்சுவடி, கதையை தாங்கியபடி கம்பீரமாக எமதர்மராஜன் அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்தில் தினமும் எமகண்ட நேரத்தில், எமதர்மனுக்கு பூஜைகள் நடத்தப்படுகின்றன. எமதர்மனை இங்கு வழிபடும் பக்தர்கள், நேருக்கு நேராக நின்று வணங்குவதில்லை. பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப எழுதப்பட்ட கணக்குப்படி, தன்னுடைய நீதியை வழங்கும் இத்தல எமதர்மனை பக்தர்கள் நீதிபதியாகவே கருதி வழிபடுகின்றனர் என்பது மிகவும் குறிப்பிட வேண்டிய ஒன்று.

இவரை வணங்கினால், நமக்கான நீதி உடனடியாக கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. திருமணம், வளைகாப்பு போன்ற எந்த மங்கல நிகழ்வாக இருந்தாலும், அதற்கான பத்திரிகையை, எமதர்மனின் காலடியில் சமர்ப்பித்து வழிபட்டு வாங்கிச் செல்கின்றனர்.

 நீதிபதியாக கருதி வணங்கும் பக்தர்கள்

இந்த ஆலயத்தில் ‘படி கட்டுதல்’ என்ற வழிபாடு பிரசித்தம். நியாயமாக சம்பாதித்து காணாமல் போன பொருள் திரும்பக் கிடைக்க, அதுபற்றி ஒரு பேப்பரில் எழுதி, எமதர்மனை பூஜித்து இங்குள்ள சூலத்தில் கட்டி விடுகிறார்கள். விரைவிலேயே அதற்கான பலன் கிடைக்கிறது என்கின்றனர். நீதிபதியாக இருந்து எமதர்ம ராஜா தங்களின் பொருட்களை கிடைக்க செய்கிறார் என்பதும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

நீண்ட ஆயுள் கிடைக்க, மரண பயம் நீங்க, திருமணத் தடை அகல என்று இங்கே வந்து வழிபடுபவர்களின் எண்ணிக்கையும் ஏராளம். இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் திருவிழா நடத்தப்படுகிறது. அதே போல் மாசி மாதத்திலும் மன்மதனுக்கு திருவிழா எடுக்கிறார்கள். எமதர்மராஜாவை சனிக்கிழமைகளில் எமகண்ட நேரத்தில் வழிபாடு செய்வது சிறப்பான பலனைத் தரும் என்கிறார்கள்.

சரிங்க இந்த நீதிபதியை பார்க்க, இந்த கோவிலுக்கு எப்படி போகணும். பட்டுக்கோட்டை - அறந்தாங்கி செல்லும் சாலையிலிருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ளது திருச்சிற்றம்பலம். இங்குதான் எமதர்மராஜா கோயில் உள்ளது. பட்டுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கி, மதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை (ஆவணம் வழியாக) செல்லும் பேருந்துகளில் சென்றால் திருச்சிற்றம்பலம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி கோவிலுக்கு நடந்து போகலாம்ப்பா... எங்கப்பா புறப்பட்டுட்ட… நீதிபதி எமதர்மராஜாவை பார்க்கவா!!!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: ” சீக்கிரமா வீட்டிற்கு போயிடுங்க” இன்று இரவு இந்த 12 மாவட்டங்களில் மழை இருக்கு.!
TN Rain: ” சீக்கிரமா வீட்டிற்கு போயிடுங்க” இன்று இரவு இந்த 12 மாவட்டங்களில் மழை இருக்கு.!
ரூ.15 கோடிக்கு ஆளுநர் பதவி.? சதுரங்க வேட்டை பட பாணியில்  ஏமாந்த சென்னை விஞ்ஞானி.!
ரூ.15 கோடிக்கு ஆளுநர் பதவி.? சதுரங்க வேட்டை பட பாணியில் ஏமாந்த சென்னை விஞ்ஞானி.!
Annamalai: முதல்வர் ஸ்டாலினால் இதை சொல்ல முடியுமா? ஆதாரத்தை வெளியிடுவேன்: புது செக் வைத்த அண்ணாமலை 
Annamalai: முதல்வர் ஸ்டாலினால் இதை சொல்ல முடியுமா? ஆதாரத்தை வெளியிடுவேன்: புது செக் வைத்த அண்ணாமலை 
"ஆக்சன் - அக்ரஷன்" இடதுசாரி தீவிரவாதத்திற்கு ஆப்பு.. ஒரே போடு போட்ட மத்திய அரசு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Palani Drunken Women: சுக்குநூறான POLICE பூத்.. அடித்து நொறுக்கிய பெண்.. பழனியில் பரபரப்பு!Aloor shanavas: ”விஜய் கூத்தாடியா உங்களுக்கு?” கண்டித்த திருமாவளவன்! ஷா நவாஸ் புது விளக்கம்Aadhav Join TVK  IT Wing : ஆதவ் கையில் IT WING.. விஜய் மாஸ்டர் ப்ளான்! திமுகவுக்கு ஸ்கெட்ச்ADMK Support Mining Bill : டங்ஸ்டன் சுரங்கம் தம்பிதுரை பேசியது என்ன? ஆதரித்த அதிமுக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: ” சீக்கிரமா வீட்டிற்கு போயிடுங்க” இன்று இரவு இந்த 12 மாவட்டங்களில் மழை இருக்கு.!
TN Rain: ” சீக்கிரமா வீட்டிற்கு போயிடுங்க” இன்று இரவு இந்த 12 மாவட்டங்களில் மழை இருக்கு.!
ரூ.15 கோடிக்கு ஆளுநர் பதவி.? சதுரங்க வேட்டை பட பாணியில்  ஏமாந்த சென்னை விஞ்ஞானி.!
ரூ.15 கோடிக்கு ஆளுநர் பதவி.? சதுரங்க வேட்டை பட பாணியில் ஏமாந்த சென்னை விஞ்ஞானி.!
Annamalai: முதல்வர் ஸ்டாலினால் இதை சொல்ல முடியுமா? ஆதாரத்தை வெளியிடுவேன்: புது செக் வைத்த அண்ணாமலை 
Annamalai: முதல்வர் ஸ்டாலினால் இதை சொல்ல முடியுமா? ஆதாரத்தை வெளியிடுவேன்: புது செக் வைத்த அண்ணாமலை 
"ஆக்சன் - அக்ரஷன்" இடதுசாரி தீவிரவாதத்திற்கு ஆப்பு.. ஒரே போடு போட்ட மத்திய அரசு!
Look Back 2024 : 2024-ன் சைலண்ட் சம்பவக்காரர்கள்.. நிதிஷ் முதல் பெத்தேல் வரை... கவனம் ஈர்த்த வீரர்களின் முழுவிவரம் இதோ!
Look Back 2024 : 2024-ன் சைலண்ட் சம்பவக்காரர்கள்.. நிதிஷ் முதல் பெத்தேல் வரை... கவனம் ஈர்த்த வீரர்களின் முழுவிவரம் இதோ!
பெண்களே! ஏதாச்சும் பிரச்னையா? உடனே போனை எடுங்க.. 181க்கு கால் பண்ணுங்க!
பெண்களே! ஏதாச்சும் பிரச்னையா? உடனே போனை எடுங்க.. 181க்கு கால் பண்ணுங்க!
RP Udhayakumar: எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சில் சட்டப்பேரவை ஆடிப் போய்விட்டது - ஆர்.பி. உதயகுமார்
எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சில் சட்டப்பேரவை ஆடிப் போய்விட்டது - ஆர்.பி. உதயகுமார்
Watch Video: செம்ம கட்! அசத்தலான பந்து வீச்சில் அசால்ட் செய்த அருந்ததி ரெட்டி! - வீடியோ
Watch Video: செம்ம கட்! அசத்தலான பந்து வீச்சில் அசால்ட் செய்த அருந்ததி ரெட்டி! - வீடியோ
Embed widget