மேலும் அறிய

TN Rain Alert: வரும் 20-ஆம் தேதி முதல் வெளுக்கப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா மக்களே?

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் வடகடலோர தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவான நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் வடகடலோர தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இன்று காலை தென்கிழக்கு வங்கக்கடல்  மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு  காற்றழுத்த தாழ்வு பகுதி  உருவாகியுள்ளது. இது மேற்கு - வடமேற்கு  திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தெற்கு வங்கக்கடல்  பகுதிகளில்  19-ஆம் தேதி வாக்கில் வலுபெறக்கூடும். இது மேலும் அதற்கடுத்த மூன்று தினங்களில் மேற்கு - வடமேற்கு  திசையில் தமிழக - புதுவை  மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதனால் தமிழகத்தில் வரும் 20ஆம் தேதி செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், காரைக்கால், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

அதேபோல் 21-ஆம் தேதி வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும் தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 

சென்னை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  

18.11.2022: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகள், மத்தியகிழக்கு மற்றும் தென்மேற்கு  வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

19.11.2022: இலங்கை கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல்  மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

20.11.2022 முதல் 21.11.2022 வரை: தமிழக கடலோரப்பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல்  பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Erode East Bypoll: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - வேட்பாளரை அறிவித்த திமுக, யார் இந்த வி.சி. சந்திரகுமார்?
Erode East Bypoll: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - வேட்பாளரை அறிவித்த திமுக, யார் இந்த வி.சி. சந்திரகுமார்?
Erode East Bypoll: என்ன ஆச்சு? காங்கிரசை கழற்றிவிட்ட திமுக - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டி என அறிவிப்பு
Erode East Bypoll: என்ன ஆச்சு? காங்கிரசை கழற்றிவிட்ட திமுக - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டி என அறிவிப்பு
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மாநில அங்கீகாரம்! - இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மாநில அங்கீகாரம்! - இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 
Annamalai: ”இந்தி தேசிய மொழி இல்லையா?” அஷ்வின் என்ன சொல்றது? ”நானே..” சீறிய அண்ணாமலை
Annamalai: ”இந்தி தேசிய மொழி இல்லையா?” அஷ்வின் என்ன சொல்றது? ”நானே..” சீறிய அண்ணாமலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Taiwan Couple Marriage in India : அம்மி மிதித்து..அருந்ததி பார்த்து திருமணம் செய்த தைவான் தம்பதிTirupati Stampede |  Pawan  VS Jagan Mohan டவுன் டவுன் ஜெய் ஜெய் கோஷம் போர்களமான திருப்பதி HOSPITALSeeman Periyar Issue : Vadakalai Vs Thenkalai fight : வடகலை Vs தென்கலை”யார் பெரியவா..?”களேபரமான காஞ்சிபுரம் கோயில்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Erode East Bypoll: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - வேட்பாளரை அறிவித்த திமுக, யார் இந்த வி.சி. சந்திரகுமார்?
Erode East Bypoll: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - வேட்பாளரை அறிவித்த திமுக, யார் இந்த வி.சி. சந்திரகுமார்?
Erode East Bypoll: என்ன ஆச்சு? காங்கிரசை கழற்றிவிட்ட திமுக - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டி என அறிவிப்பு
Erode East Bypoll: என்ன ஆச்சு? காங்கிரசை கழற்றிவிட்ட திமுக - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டி என அறிவிப்பு
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மாநில அங்கீகாரம்! - இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மாநில அங்கீகாரம்! - இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 
Annamalai: ”இந்தி தேசிய மொழி இல்லையா?” அஷ்வின் என்ன சொல்றது? ”நானே..” சீறிய அண்ணாமலை
Annamalai: ”இந்தி தேசிய மொழி இல்லையா?” அஷ்வின் என்ன சொல்றது? ”நானே..” சீறிய அண்ணாமலை
PM Modi: ”நான் மனிதன்தான்; கடவுள் இல்லை.” பிரதமர் மோடி பாட்காஸ்ட் உரையில் சொன்னது என்ன?
PM Modi: ”நான் மனிதன்தான்; கடவுள் இல்லை.” பிரதமர் மோடி பாட்காஸ்ட் உரையில் சொன்னது என்ன?
Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; தி.மு.க.வா? காங்கிரசா? நாளை வேட்பாளர் அறிவிப்பு?
Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; தி.மு.க.வா? காங்கிரசா? நாளை வேட்பாளர் அறிவிப்பு?
Donald Trump: தப்பித்த டொனால்டு டிரம்ப்: ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த குற்றச்சாட்டில் விடுவிப்பு.! நடந்தது என்ன?
தப்பித்த டொனால்டு டிரம்ப்: ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த குற்றச்சாட்டில் விடுவிப்பு.! நடந்தது என்ன?
Actor Ajith:
Actor Ajith: "இனி நடிக்கமாட்டேன்" அஜித் தந்த ஷாக்! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்
Embed widget