துணை முதல்வர் என்றால் அவ்வளவு திமிரா? உதயநிதிக்கு வரும் பிடிவாரண்ட்? – ஹெச்.ராஜா சொல்வது என்ன?
யாரும் யாரையும் களவாடவில்லை. திருவள்ளுவருக்கு இதுதான் ஆடை என்று உங்களுக்கு தெரியுமா? எனக்கும் தெரியாது.

துணை முதலமைச்சர் உதயநிதிக்கு பிடிவாரண்ட் வந்து கொண்டே இருக்கிறது என பாஜகவின் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த ஹெச்.ராஜா “சனாதன அடிப்படையில்தான் வள்ளுவர் தனது திருக்குறலை கட்டமைத்துள்ளார். யார் யாரை களவாடுவது? ஜோதி ரூபமா ஆண்டவனை வணங்குங்கள் என்று சொன்னால் அது சனாதன தர்மம் தானே?
திருக்குறளை மலம் என்று சொன்னவரை நீங்கள் உங்கள் அப்பா என்று சொல்லிக்கொள்கிறீர்கள். தந்தை என்றால் அப்பா தானே? நான் ஒன்னும் தப்பா சொல்லலையே? சிலப்பதிகாரத்தை விபச்சாரியின் கதை என்று ஈவெரா சொல்லவில்லையா? இந்து மதத்தின் தமிழ் இனத்தின் மிகப்பெரிய விரோதிகள் இந்த திராவிட இயக்கங்கள்.
என் தாய் மொழி தமிழை காட்டுமிராண்டித்தனம் என சொன்ன ஈவெராவை தந்தை என சொல்லும் அத்தனை பேரும் தமிழ் இனத்தின் விரோதிகள். நீங்கள் எல்லாரும் இந்து மதத்தை களவாடியிருக்கும் திருடர்கள். நீங்கள் அப்படியெல்லம் பேசக்கூடாது.
யாரும் யாரையும் களவாடவில்லை. திருவள்ளுவருக்கு இதுதான் ஆடை என்று உங்களுக்கு தெரியுமா? எனக்கும் தெரியாது. நீங்கள் வெள்ளை ஆடை அணிகிறீர்கள். நான் காவி உடை அணியக்கூடாதா? தப்பான வார்த்தைகளை பாஜகவுக்கு எதிராக, சனாதனத்திற்கு எதிராக பேசக்கூடாது.
உதயநிதிக்கு எதிராக எல்லா மாநிலத்திலிருந்தும் பிடிவாரண்ட் வந்துகொண்டு இருக்கிறது. சீக்கிரம் ஜெயிலுக்கு போய்டுவார். சனாதன இந்து தர்மத்தை மலேரியா கொசு மாதிரி கொன்று விடுவாயா?எவ்வளவு கொழுப்பு? அவ்வளவு திமிர் வந்திருக்கா? துணை முதலமைச்சர் என்றால் பெரும்பான்மையான 80 சதவீத மக்களை கொன்னுடலாமா? அவர்களை டெங்கு, மலேரியா கொசு மாதிரி அழிப்பேன் என்று பேசுவாரா?
அண்ணா பல்கலையில் செனட் மெம்பராக உள்ளார். அதற்கு இன்னும் வாய் பேசவில்லை. அந்த சார் யார் என்று சொல்ல உதயநிதிக்கு துப்பு இல்லை. அவர் இந்து மதத்தை கொசு மாதிரி கொல்வேனு பேசலாமா? இந்த தேச விரோத சக்திகள் 2026ல் தோற்கடிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.