மேலும் அறிய

Doctors Strike: அச்சச்சோ! தமிழ்நாடு முழுவதும் டாக்டர்கள் ஸ்ட்ரைக் - பகீர் கிளப்பும் பின்னணி!

அரசு மருத்துவரை கத்தியால் குத்தியதால் தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.

கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் பாலாஜி என்பவர் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். அவர் பணியில் இருந்த போது திடீரென உள்ளே வந்த நபர்கள் கத்தியால் சரமாரியாக குத்தியதாக தெரிகிறது. இதில் படுகாயமடைந்த மருத்துவர் அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவருக்கு கத்திக்குத்து:

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் கத்தியால் குத்தியது யார்? என விசாரணையை தீவிரப்படுத்தினர். இதுதொடர்பாக நிருபர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன், வட இந்தியர்கள் 4 பேர் மருத்துவரை அறைக்குள் பூட்டி கத்தியால் குத்தியுள்ளனர் என்றும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 2 பேரை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மற்ற நபர்களையும் கண்டுபிடித்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். ஆனால்,  தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதும், தனி ஆளாகவே சென்று கத்தியால் குத்தினார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

வேலைநிறுத்தம்:

பட்டப்பகலில் தமிழ்நாட்டின் தலைநகரில் அதிநவீன வசதிகள் கொண்ட அரசு மருத்துவமனையின் உள்ளே புகுந்து அரசு மருத்துவர்கள் மீது கத்திக்குத்து நடத்தப்பட்ட சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக கூறியிருப்பதுடன், குற்றவாளி மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். இந்த நிலையில், படுகாயம் அடைந்த மருத்துவர் பாலாஜி தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து குற்றவாளி மீது தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மருத்துவர்கள் உள்ளிட்ட அரசு மருத்துவ பணியாளர்களுக்கு தக்க பாதுகாப்பு வழங்கக்கோரியும் அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர். இதனால், தமிழ்நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். இதனால், நோயாளிகள் பெரும் சிரமத்தை சந்திக்கத் தொடங்கியுள்ளனர். 

காரணம் என்ன?

கத்துக்குத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. முதல்கட்ட விசாரணையில், புற்றுநோய் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தனது தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி மருத்துவர் மீது கத்திக்குத்து நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவமனையில் வைத்தே மருத்துவர் மீது தாக்குதல் நடந்த சம்பவம் மக்களுக்கு அச்சத்தை கொடுத்துள்ளது. மருத்துவமனை வளாகத்தில் போலீசார் குவிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Australian Open 2025: ஜோகோவிச், ஸ்வெரேவ் அசத்தல்.. ஆஸ்திரேலியன் ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்தனர்...
ஜோகோவிச், ஸ்வெரேவ் அசத்தல்.. ஆஸ்திரேலியன் ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்தனர்...
சந்திராயன் 4 எப்போது? ..இந்திய விண்வெளிப் பொருளாதாரம் 800 கோடி டாலராக அதிகரிப்பு.!
சந்திராயன் 4 எப்போது? ..இந்திய விண்வெளிப் பொருளாதாரம் 800 கோடி டாலராக அதிகரிப்பு.!
"பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது" ஆளுநர் ரவி பேச்சு
கிரிக்கெட் ரசிகர்களே! சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்.. எப்போ தெரியுமா?
கிரிக்கெட் ரசிகர்களே! சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்.. எப்போ தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vivek Ramaswamy DOGE Resign : பதவியேற்ற TRUMP..BYE சொன்ன விவேக்! திடீர் TWISTJagabar Ali Murder : ’’அநியாயம் பண்றாங்க’’அதிமுக நிர்வாகி படுகொலைஇறக்கும் முன் கடைசி வீடியோKomiyam Drinking Fact Check | கோமியம் குடிச்சா நல்லதா?IIT காமகோடி Vs மனோ தங்கராஜ் உண்மை நிலை என்ன?Appavu walk out : ஆளுநர் ரவி சர்ச்சை அப்பாவு வெளிநடப்பு !பீகார் சபாநாயகர்கள் மாநாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Australian Open 2025: ஜோகோவிச், ஸ்வெரேவ் அசத்தல்.. ஆஸ்திரேலியன் ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்தனர்...
ஜோகோவிச், ஸ்வெரேவ் அசத்தல்.. ஆஸ்திரேலியன் ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்தனர்...
சந்திராயன் 4 எப்போது? ..இந்திய விண்வெளிப் பொருளாதாரம் 800 கோடி டாலராக அதிகரிப்பு.!
சந்திராயன் 4 எப்போது? ..இந்திய விண்வெளிப் பொருளாதாரம் 800 கோடி டாலராக அதிகரிப்பு.!
"பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது" ஆளுநர் ரவி பேச்சு
கிரிக்கெட் ரசிகர்களே! சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்.. எப்போ தெரியுமா?
கிரிக்கெட் ரசிகர்களே! சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்.. எப்போ தெரியுமா?
SSC MTS Result 2024 OUT: எஸ்.எஸ்.சி - எம்.டி எஸ் தேர்வு முடிவு வெளியானது.! கட் ஆஃப் எவ்வளவு ?
SSC MTS Result 2024 OUT: எஸ்.எஸ்.சி - எம்.டி எஸ் தேர்வு முடிவு வெளியானது.! கட் ஆஃப் எவ்வளவு ?
துருக்கி ரிசார்ட்டில் தீ விபத்து - 66 பேர் பலி; 51 பேர் படுகாயம் - நடந்தது என்ன?
துருக்கி ரிசார்ட்டில் தீ விபத்து - 66 பேர் பலி; 51 பேர் படுகாயம் - நடந்தது என்ன?
துப்பாக்கி சுடும் பயிற்சி; எல்லை தாண்டி மீன் பிடிக்காதீங்க - தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை
துப்பாக்கி சுடும் பயிற்சி; எல்லை தாண்டி மீன் பிடிக்காதீங்க - தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை
பரந்தூரில் ஏர்போர்ட் - பயப்படாதீங்க: விடாப்பிடியாக விளக்கம் கொடுக்கும் தமிழக அரசு 
பரந்தூரில் ஏர்போர்ட் - பயப்படாதீங்க: விடாப்பிடியாக விளக்கம் கொடுக்கும் தமிழக அரசு 
Embed widget