‛உயிரை கொடுத்து வேலை பண்றாங்க.... ஒரு கையுறை கூட இல்லை’ ட்விட்டரில் கேள்வி!
முன்களப் பணியாளருக்கு ஒரு செருப்பு, கையுறை என குறைந்தபட்ச உபகரணங்களையாவது கொடுக்கக் கூடாதா என்ற கேள்வியை ட்விட்டரில் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்களப் பணியாளருக்கு ஒரு செருப்பு, கையுறை என குறைந்தபட்ச உபகரணங்களையாவது கொடுக்கக் கூடாதா என்ற கேள்வியை ட்விட்டரில் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக, "பெருநகர சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மண்டலத்திற்குட்பட்ட பாரதிதாசன் நகரில் தேங்கியுள்ள மழைநீரானது 25hp திறன் கொண்ட சூப்பர் சக்கர் வாகனம் மூலம் கொண்டு இன்று அகற்றப்பட்டது" என்று ட்விட்டரில் பதிவிடப்பட்டது.
இதனை சுட்டிக்காட்டிய ட்விட்டராட்டி ஒருவர், "நல்ல வேலை. அதேவேளையில் முன்களப் பணியாளர்களுக்கு அடிப்படை பாதுகாப்பு உபகரணங்களான செருப்பு, கையுறையாவது கொடுக்கலாம் அல்லவா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை மாநகராட்சி, மாநகராட்சி ஆணையர், தமிழ்நாடு முதல்வர் ஆகியோரை டேக் செய்து இந்தக் கேள்வியை முன்வைத்துள்ளார்.
Hey @chennaicorp @GSBediIAS @CMOTamilnadu @KN_NEHRU
— Nadika நாடியா (@NadjaNadika) November 10, 2021
Good work and all that, but also - maybe look at providing protective wear/equipment to these front line workers? at bare minimum decent water-proof footwear and gloves? https://t.co/8ECWFaviMT
12 மணி நேரத்தில் வலுப்பெறுகிறது.
“தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தமிழக கடற்கரை பகுதியை நாளை காலை 11 மணி அளவில் நெருங்கும். அதனை தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா, வட தமிழகம் - புதுச்சேரி கடற்கரையை காரைக்காலுக்கும் - ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் கடலூருக்கு அருகில் நாளை மாலை கடக்கக்கூடும். இதன் காரணமாக
வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் தரைக்காற்று மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்தில் 11ஆம் தேதி காலை முதல் வீசக்கூடும் .
இன்று, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், கோயம்புத்தூர் தர்மபுரி ஈரோடு கிருஷ்ணகிரி நாமக்கல் அரியலூர் பெரம்பலூர் புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் .
திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம் தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், செங்கல்பட்டு, புதுச்சேரி, கோயம்புத்தூர், நீலகிரி, நாமக்கல், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் .
நாளை மறுநாள் 12 ஆம் தேதி, கோயம்புத்தூர், நீலகிரி, சேலம், வேலூர் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நவம்பர் 13 ஆம் தேதி, நீலகிரி,கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நவம்பர் 14 ஆம் தேதியன்று, நீலகிரி கோயம்புத்தூர் சேலம் திருப்பத்தூர் திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், சில பகுதிகளில் அதி கன மழையும் பெய்யக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.