மேலும் அறிய

Gokulraj Honour Killing: சிறப்பு நீதிமன்ற தீர்ப்பில் எந்த தவறும் இல்லை.. யுவராஜ் உட்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனையை உறுதிசெய்தது உயர்நீதிமன்றம்..!

Gokulraj Murder Case: கோகுல்ராஜ் ஆணவக் கொலை- மேல்முறையீட்டு வழக்கில் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

கோகுல்ராஜ் ஆணவக் கொலை(Gokulraj Honour Killing) மேல்முறையீட்டு வழக்கில் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் தீர்ப்பை வழங்கியுள்ளனர். இந்த மேல்முறையீட்டு வழக்கில் யுவராஜ் உட்பட 10 பேருக்கான ஆயுள் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. யுவராஜ் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர். அதேபோல் இந்த வழக்கில் மதுரை சிறப்பு நீதிமன்றம் 5 பேரை விடுவித்ததில் நாங்கள் செல்ல விரும்பவில்லை என கூறினர். 

மேல்முறையீட்டு வழக்கு

கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில்  ஆயுள் தண்டனை உத்தரவை ரத்து செய்யக்கோரி யுவராஜ், அருண், கிரிதர், ரஞ்சித் உள்ளிட்ட 10 பேரும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதேநேரத்தில், கோகுல்ராஜ் கொலை வழக்கில் மதுரை சிறப்பு நீதிமன்றம் 5 பேரை விடுதலை செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி கோகுல்ராஜின் தாயார் சித்ரா மற்றும் சிபிசிஐடி தரப்பில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 

இவ்வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம், இன்று அதாவது ஜூன் மாதம் 2ஆம் தேதி தீர்ப்பளித்தது. 

அந்த தீர்ப்பில், யுவராஜ், அருண், கிரிதர், ரஞ்சித் உள்ளிட்ட 10 பேருக்கு மதுரை சிறப்பு நீதி மன்றம் அளித்த தீர்ப்பில் எந்த தவறும் இல்லை எனக்கூறி, அனைவருக்கும் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. மேலும், முதல் குற்றவாளியான தீரன் சின்னமலை பேரவைத் தலைவர் யுவராஜ் தனது வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கடந்த 2015ஆம் ஆண்டு ஆணவக்கொலை செய்யப்பட்ட கோகுல்ராஜ் மரணத்துக்கு நீதி கேட்டு அவரது தாயார் நீதி மன்றத்தில் சட்டப்போராட்டத்தினை மேற்கொண்டார். முதலில் இந்த வழக்கினை விசாரித்த காவல்துறை கோகுல்ராஜ் தற்கொலை செய்துகொண்டதாக குறிப்பிட்டனர். ஆனால் அதன் பின்னர், கோகுல்ராஜின் உடலை கூறு ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் ஏற்ற பின்னர் தான், இந்த வழக்க்இல் உண்மைத் தன்மை தெரியவந்தது. கோகுல்ராஜின் உடலை கூறு ஆய்வு செய்த, ராமச்சந்திரா மருத்துவமனை மருத்துவர் சம்பத் அளித்த அறிக்கையில் தான் கோகுல் ராஜ் மிகவும் மோசமாக கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது. 

அதன் பின்னர் அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி பா.மோகன் மற்றும் கோகுல்ராஜ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பார்த்திபன் என இருவரும் இணைந்து வாதாடி, இந்த வழக்கில் மதுரை கீழமை நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை பெற்றுத் தந்ததுடன், குற்றவாளிகள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட மேல் முறையீட்டு வழக்கிலும் வாதாடி தண்டனையை உறுதி செய்துள்ளனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Indian Premier League: இந்த சீசனில் மட்டும் 8 முறை.. ஐபிஎல் வரலாற்றில் அடுத்தடுத்து எகிறும் 250+ ரன்கள்..!
இந்த சீசனில் மட்டும் 8 முறை.. ஐபிஎல் வரலாற்றில் அடுத்தடுத்து எகிறும் 250+ ரன்கள்..!
Breaking Tamil LIVE: வடக்கு கர்நாடகாவில் இன்று நான்கு இடங்களில் பரப்புரை மேற்கொள்கிறார் பிரதமர் மோடி
வடக்கு கர்நாடகாவில் இன்று நான்கு இடங்களில் பரப்புரை மேற்கொள்கிறார் பிரதமர் மோடி
Watch Video: உலகக் கோப்பை வில்வித்தையில் தங்க பதக்கத்தை அள்ளிய இந்தியா.. ஜோதி சுரேகா ஹாட்ரிக் தங்கம் வென்று அசத்தல்!
உலகக் கோப்பை வில்வித்தையில் தங்க பதக்கத்தை அள்ளிய இந்தியா.. ஜோதி சுரேகா ஹாட்ரிக் தங்கம் வென்று அசத்தல்!
GOLD Vs Gold Bonds: தங்கம் Vs தங்கப்பத்திரம், எந்த முதலீட்டில் உங்களுக்கு அதிகப்படியான வருவாய் கிட்டும்?
தங்கம் Vs தங்கப்பத்திரம், எந்த முதலீட்டில் உங்களுக்கு அதிகப்படியான வருவாய் கிட்டும்?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Bala on Samuthirakani :   ”1000 மாற்றுத்திறனாளி குழந்தைகள்! உடனே ஓடிவந்த சமுத்திரக்கனி” பாலா உருக்கம்Villupuram flying squad : ரூ.68,000-ஐ வாங்க 2 கிலோ நகை அணிந்து வந்த நபர்!அதிர்ந்த தேர்தல் அதிகாரிகள்Kadambur Raju  : ”சசிகலாவுக்கு எதுவும் தெரியாது! அரசியல்ல ஈடுபட்டது இல்ல” கடம்பூர் ராஜூ பதிலடிRahul Priyanka Amethi  : அமேதியில் மீண்டும் ராகுல்? அதிர்ச்சியில் பாஜக! காங்கிரஸ் பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Indian Premier League: இந்த சீசனில் மட்டும் 8 முறை.. ஐபிஎல் வரலாற்றில் அடுத்தடுத்து எகிறும் 250+ ரன்கள்..!
இந்த சீசனில் மட்டும் 8 முறை.. ஐபிஎல் வரலாற்றில் அடுத்தடுத்து எகிறும் 250+ ரன்கள்..!
Breaking Tamil LIVE: வடக்கு கர்நாடகாவில் இன்று நான்கு இடங்களில் பரப்புரை மேற்கொள்கிறார் பிரதமர் மோடி
வடக்கு கர்நாடகாவில் இன்று நான்கு இடங்களில் பரப்புரை மேற்கொள்கிறார் பிரதமர் மோடி
Watch Video: உலகக் கோப்பை வில்வித்தையில் தங்க பதக்கத்தை அள்ளிய இந்தியா.. ஜோதி சுரேகா ஹாட்ரிக் தங்கம் வென்று அசத்தல்!
உலகக் கோப்பை வில்வித்தையில் தங்க பதக்கத்தை அள்ளிய இந்தியா.. ஜோதி சுரேகா ஹாட்ரிக் தங்கம் வென்று அசத்தல்!
GOLD Vs Gold Bonds: தங்கம் Vs தங்கப்பத்திரம், எந்த முதலீட்டில் உங்களுக்கு அதிகப்படியான வருவாய் கிட்டும்?
தங்கம் Vs தங்கப்பத்திரம், எந்த முதலீட்டில் உங்களுக்கு அதிகப்படியான வருவாய் கிட்டும்?
S Ve Shekhar: ஒருத்தருக்கு ஒரு ஓட்டுதான்..நேர்மையே தெரியாத திருட்டுத்தனம் : அண்ணாமலையை விமர்சித்த எஸ்.வி.சேகர்!
ஒருத்தருக்கு ஒரு ஓட்டுதான்..நேர்மையே தெரியாத திருட்டுத்தனம் : அண்ணாமலையை விமர்சித்த எஸ்.வி.சேகர்!
HBD Samantha : நோயும், தோல்விகளும் புரட்டினால் என்ன? நீங்க சிங்கம்தான்.. ஹேப்பி பர்த்டே சமந்தா..
HBD Samantha : நோயும், தோல்விகளும் புரட்டினால் என்ன? நீங்க சிங்கம்தான்.. ஹேப்பி பர்த்டே சமந்தா..
CSK Vs SRH, IPL 2024: ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்குமா சென்னை? சேப்பக்கத்தில் ஐதராபாத் உடன் இன்று மோதல்
ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்குமா சென்னை? சேப்பக்கத்தில் ஐதராபாத் உடன் இன்று மோதல்
Lok Sabha Election 2024: அமேதியில் ராகுல், ரேபரேலியில் பிரியங்கா காந்தி போட்டி? - காங்கிரஸ் எடுத்த முடிவு என்ன?
அமேதியில் ராகுல், ரேபரேலியில் பிரியங்கா காந்தி போட்டி? - காங்கிரஸ் எடுத்த முடிவு என்ன?
Embed widget