ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 44 கிலோ கஞ்சா பறிமுதல் - கரூரில் 6 பேர் கைது
ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் இருந்து மொத்தமாக 44 கிலோ கஞ்சாவை வாங்கி கரூருக்கு விற்பனைக்காக கடத்திக் கொண்டு வர கொண்டு வந்தது தெரிய வந்துள்ளது.
ஆந்திராவில் இருந்து கரூருக்கு லாரியில் கடத்தி வரப்பட்ட 44 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 6 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர்.
கரூர் பெரிய ஆண்டாங் கோவில், பெரியார் வளைவு மேம்பாலம் அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் லாரி ஒன்று நிற்பதாக கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் மதுவிலக்கு அமலாக்கப் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பு கீதாஞ்சலி தலைமையில் போலீசார் அங்கு சென்று அந்த லாரியை சோதனை நடத்தினர். பின்னர் அதில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் இருந்த 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் கரூர் மொச்ச கொட்டாம்பாளையத்தைச் சேர்ந்த கந்தசாமி (வயது 41), தேனி மாவட்டம், தேவாரம் மல்லியங்கர் கோவில் தெருவை சேர்ந்த ரூபன் ராஜ் (வயது 27), போடி நாயக்கனூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த சென்ராயன் (வயது 42), மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ஐயப்பன் கோவில் தெருவில் சேர்ந்த கஸ்தூரி (வயது 43) கவாஸ்கர் மற்றும் ஜீவானந்தம் என ஆறு பேர் சேர்ந்து ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் இருந்து மொத்தமாக 44 கிலோ கஞ்சாவை வாங்கி கரூருக்கு விற்பனைக்காக கடத்திக் கொண்டு வர கொண்டு வந்தது தெரிய வந்துள்ளது.
இதை எடுத்து ஆறு பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களும் இருந்த 44 கிலோ கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூரில் ஆந்திராவில் இருந்து 44 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக லாரியில் கொண்டு வந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்