Sanjib Banerjee Farewell Letter | சொல்லாமல் விடைபெற்றதற்கு மன்னியுங்கள் : நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி..
அழகான, மதிப்புமிக்க மாநில மக்களுக்கு நானும், ரானேவும் என்றுமே நன்றி உரைத்தவர்களாக இருப்போம். நீங்கள் எங்களுக்கு அளித்த அன்பு மற்றும் விருந்தோம்பலை மறக்க முடியாது
மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜியின் தன்னுடன் பணி செய்த சக நீதிபதிகளுக்கும், பார் கவுன்சில் உறுப்பினர்களுக்கும், உயர்நீதிமன்ற பணியாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
இதுகுறித்து, அவர் எழுதிய கடிதத்தில்,
எனது சென்னை உயர்நீதிமன்ற குடும்ப உறுப்பினர்களுக்கு
இறுதி நிமிடம் வரை உங்களுடன் இல்லாத சூழலுக்கும், உங்கள் ஒவ்வொருவரையும் தனியாக சந்தித்து சொல்லாமல் விடைபெற்றதற்கும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். பணியின் போது சிலரை புண்படும் நோக்கில் நடந்திருந்தாலும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். எனது செயல்பாடுகள் தனிப்பட்ட முறையில் இல்லாமல் நிர்வாகத்துக்குத் தேவையான நடவடிக்கையாகவே அமைந்தது.
சென்னை வழக்கறிஞர் பார் உறுப்பினர்களுக்கு: நாட்டிலேயே மிகச் சிறந்த ஒன்றாக உங்களைப் பார்க்கிறேன். சில சமயங்களில் எரிச்சல்படுத்தும் விதமாக நடந்துக் கொண்டாலும், அதிக சகிப்புத்தன்மை, பொறுமை, மரியாதை மற்றும் புரிதலுடன் ஏற்றுக் கொண்டீர்கள். உங்கள் அனைத்து அன்பான வார்த்தைகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
எனது பதிவாளார்: உங்களது சிறப்பான செயல்திறன் சென்னை உயர்நீதிமன்றத்தின் நிர்வாகத்தை எளிதாக்கியது. சிறப்பான நிர்வாகத்துக்கும் நீங்கள் மேற்கொண்டு வரும் அனைத்து நடவடிக்கைகளையும் நான் அறிவேன். வெளிப்படையான நீதித்துறை நலனைப் பாதுகாக்க நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் தொடர வேண்டும் என்று விரும்புகிறேன்.
எனது ஊழியர்கள்: பணியின் பொது என்னக்காக வெகு நேரம் காக்க வைத்ததற்காக வருந்துகிறேன். உங்களின் முழுமயான ஒத்துழைப்பை மனதார பாராட்டுகிறேன். நீங்கள் சிக்கித் தவிக்கும் நிலவுடைமை கலாச்சார முறையை என்னால் முழுவதுமாக ஒழித்துக் கட்ட முடியவில்லை என்று எண்ணும் போது வருந்துகிறேன்.
மாநில மக்களுக்கு: இந்த அழகான, மதிப்புமிக்க மாநில மக்களுக்கு நானும், ரானேவும் என்றுமே நன்றி உரைத்தவர்களாக இருப்போம். நீங்கள் எங்களுக்கு அளித்த அன்பு மற்றும் விருந்தோம்பலை மறக்க முடியாது. கடந்த 11 மாதங்களாக இதை எங்கள் மாநிலம் என்று சொல்லும் பெருமையைப் பெற்றிருக்கிறோம்" என்று தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்