மேலும் அறிய

பல்கலை வித்தகர் கருணாநிதி, பாடலாசிரியராக ஜொலித்த டாப் 5 பாடல்கள் !

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 98ஆவது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. திரைத்துறையில் பல பிரிவுகளில் அவர் பணியாற்றியிருந்தாலும், பாடல்களுக்கு அவரது வரிகள் இன்னும் வளம் சேர்த்திருக்கும்.

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 98ஆவது பிறந்தநாள் தமிழ்நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இவர் நீண்ட நெடிய அரசியல் பயண வரலாற்றை கொண்டவர். அண்ணாவின் மறைவிற்கு பிறகு திமுக கட்சியின் சட்டமன்ற தலைவராக 1969ஆம் ஆண்டு கருணாநிதி தேர்வு செய்யப்பட்டார்.  1969ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தனது 45ஆவது வயதில் முதலமைச்சராக பதவி ஏற்றார். இவர் மொத்தமாக 18 ஆண்டுகாலம் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியில் இருந்தார். தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் இப்பதவியில் இருந்தார். அரசியல் தவிர இவர் எழுத்து,சினிமா திரைக்கதை வசனம் மற்றும் பாடல்கள் எழுதுவது என பல கலைகள் வித்தகராக இருந்தார். கருணாநிதியின் எழுத்து இன்றும் என்றும் பேசப்படும்.

அந்தவகையில் கலைஞர் கருணாநிதி எழுதிய சிறப்பான 5 திரைப்பட பாடல்கள் என்னென்ன?

வெல்க நாடு:

1963ஆம் ஆண்டு வெளிவந்த காஞ்சி தலைவன் என்ற திரைப்படத்தில் வெல்க நாடு என்ற பாடல் இடம்பெற்று இருக்கும். இந்தப் பாடலை கலைஞர் கருணாநிதி எழுதியிருப்பார். இப்பாடலுக்கு கே.வி.மகாதேவன் இசையமைத்திருப்பார். இந்தப் பாடல் வரிகள் மிகவும் சிறப்பான ஒன்றாக இருக்கும். 

வாழ்க்கை எனும் ஓடம்:

1964ஆம் ஆண்டு வெளிவந்த பூம்புகார் திரைப்படத்திற்கு கதை, வசனம் மற்றும் பாடல்களை கருணாநிதி எழுதியிருந்தார். இப்படத்தில் வாழ்க்கை எனும் ஓடம் பாடல் ஒரு சிறப்பாக தத்துவ பாடலாக அமைந்திருக்கும். இதை திரையில் கே.பி.சுந்தரம்பாள் சிறப்பாக பாடி நடித்திருப்பார். 

ஒரே இரத்தம்:

1987ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஒரே இரத்தம். இந்தத் திரைப்படத்தில் தற்போதைய தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடித்திருப்பார். இப்படத்தில் கருணாநிதி இரண்டு பாடல்களை எழுதியிருப்பார். ஒன்று ஒரே இரத்தம் மற்றும் ஒரு போராளியின் பயணம். இதில் ஒரே இரத்தம் பாடல் சிறப்பாக இருக்கும். 

சுருலு மீசை:

1987 ஆம் ஆண்டு விஜய்காந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் வீரன் வேலு தம்பி. இந்தப் படத்தில் கருணாநிதி சுருலு மீசை காரண்டி வேலு தம்பி என்ற பாடலை எழுதியிருப்பார். இந்தப் பாடலுக்கு எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்திருப்பார். 

ஆஹா வீணையில்:

2010ஆம் ஆண்டு வெளிவந்த 'பெண் சிங்கம்' திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருப்பார். இந்தத் திரைப்படத்திற்கு கலைஞர் கருணாநிதி வசனம் எழுதியிருப்பார். அத்துடன் இப்படத்தில் ஆஹா வீணையில் என்ற பாடலை எழுதியிருப்பார். இந்தப் பாடல் வரிகள் மிகவும் அழகாக இருக்கும். 

இவை தவிர கலைஞர் கருணாநிதி பல திரைப்படங்களுக்கு திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார். இத்தகைய சிறப்பு மிக்க கலைஞர் நம்மை விட்டு மறைந்திருந்தாலும் அவருடைய பாடல் வரிகள் திரைப்படங்கள் பல ஆண்டு காலம் நம்முடன் வாழும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை. 

மேலும் படிக்க: கலையும், காதலும் சேர்ந்த வலி சலங்கை ஒலி! 39வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அழகிய படைப்பு!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget