மேலும் அறிய

‛கேரளாவிற்கு நீர் திறக்கப்பட்ட போது துரை முருகன் ஏன் வாய் திறக்கவில்லை?’ ஓபிஎஸ் கேள்வி!

விளம்பரத்திற்காக சொல்பவர்கள் தான் இதையெல்லாம் குறித்து வைத்திருப்பார்கள், மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் செயல்படுபவர்கள் சென்ற தேதியை குறிக்கமாட்டார்கள்- ஓபிஎஸ்

தொடர் மழை காரணமாக தேனிமாவட்ட போடி சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் போடி தொகுதி பகுதியில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் பெரியகுளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிக்கையில் முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக நான் விடுத்த அறிக்கைக்கு பதில் அளித்துள்ள நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்.  நான் முல்லைப்பெரியாறு அணைக்கு சென்று வந்த தேதிகளை குறிப்பிட முடியுமா ? என்றும் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும் போது அணையின் பின்புறம் இருந்துதான் தண்ணீர் திறக்க வேண்டும் என்றும், அணைக்கு போக வேண்டிய அவசியம் இல்லை என்றும் , 2006 ஆம் ஆண்டு கேரள அரசின் முல்லை பெரியாறு அணைக்கு எதிரான சட்ட திருத்தத்தை எதிர்த்து மாண்புமிகு முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் வழக்குதான் போட்டார்கள் என்றும் நம்பர் வாங்கவில்லை என்றும் அவருடைய தலைவர் தான் வளர்க்கை முடித்து வென்றார் என்றும் எனது அறிக்கையில் நான் குறிப்பிட்ட சிலவற்றில் உப்பில்லை சப்பில்லை என்று விட்டு விட்டதாகவும் கூறியிருக்கிறார்.  இதன்மூலம் திமுக மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த போது எதுவும் செய்யவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

‛கேரளாவிற்கு நீர் திறக்கப்பட்ட போது துரை முருகன் ஏன் வாய் திறக்கவில்லை?’ ஓபிஎஸ் கேள்வி!

நான் எனது அறிக்கையில் 2002 முதல் 2006 வரை பொதுப்பணித்துறை அமைச்சர் என்ற முறை படகில் பெரியாறு அணை பகுதிக்குச் சென்று இருக்கின்றேன். பேபி அணை உட்பட அனைத்தையும் ஆய்வு செய்த அனுபவம் எனக்கும் உண்டு என்றும் தெரிவித்துவிட்டு தேனி, திண்டுக்கல் ,மதுரை ,சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடும் பாக்கியத்தை பெற்றிருக்கிறேன் என்றும் , இந்த அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக் வசித்த இடத்திற்கு சென்று இல்லத்தின் வடிவத்தை மாற்றாமல் பராமரிப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது அதன்பேரில் பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டன என்றும் தெரிவித்திருந்தேன். இதேபோன்று பொதுப்பணித்துறை அமைச்சர் என்ற முறையில் 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளிலும் 2011, 2012 மற்றும் 2015 முதல் 2025 வரை மாவட்ட அமைச்சர் என்ற முறையில் அணைப் பகுதிக்கு சென்று இருக்கிறேன் என்று மொத்தத்தில் 14 முறை சென்ற அனுபவம் எனக்கு உண்டு என்று தெரிவித்தேன்.

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீரை மட்டும் திறந்து விட வேண்டும் என்றால் முல்லைப்பெரியாறு அணை பகுதிக்கு செல்ல தேவையில்லை ஆனால் நான் என்னுடைய அறிக்கையில் படகில் சென்று முல்லைப் பெரியாறு அணை பேபி அணை ஆகியவற்றை ஆய்வு செய்ததோடு அங்கிருந்த கர்னல் ஜான் பென்னிகுவிக் வசித்த இடத்தை பராமரிக்க உத்தரவு பிறப்பித்தது என்று தெரிவித்தபோது அதை மறைத்து அணை நீரை நான் தொட்டுவிட்டு வந்திருப்பதாக தற்போது உள்ள நீர்வளத் துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். முதலில் நான் எதையுமே பார்வையிட வில்லை என்ற சொன்ன அமைச்சர் துரைமுருகன் இப்போது நான் நீரை மட்டும் தொட்டு விட்டு வந்ததாக பேசியிருக்கிறார் . நான் அணையின் நீரை மட்டும் தொடவில்லை முல்லைப் பெரியாறு அணை ,பேபி அணை சிற்றனை அணையை கட்டிய பென்னிகுவிக் வசித்த இடம் அனைத்தையும் பல முறை பார்வையிட்டு வந்ததாகவும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அறிக்கையில் கூறியுள்ளார்.

‛கேரளாவிற்கு நீர் திறக்கப்பட்ட போது துரை முருகன் ஏன் வாய் திறக்கவில்லை?’ ஓபிஎஸ் கேள்வி!

மேலும் அவர் அறிக்கை வாயிலாக கூறுகையில் தான் முல்லைப்பெரியாறு பகுதிக்கு சென்று வந்த தேதிகளை குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா என்று பொதுப்பணி துறையினரால் பராமரிக்கப்பட்டு வரும் காலண்டரில் பதிவாகி இருக்கிறதா என்றெல்லாம் கேட்டிருக்கிறார். பொதுவாக விளம்பரத்திற்காக சொல்பவர்கள் தான் இதையெல்லாம் குறித்து வைத்திருப்பார்கள் என்றும் தமிழ்நாடு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் செயல்படுபவர்கள் சென்ற தேதியை எல்லாம் குறித்துக் கொள்ள மாட்டார்கள் தற்போது ஆட்சியில் இருப்பது திமுக எனவே காலண்டரில் இருக்கிறதா என்பதை அவர் தான் பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும் அப்பொழுது உண்மை சொல்வார்களா என்பது சந்தேகம்தான். எனவும் பொதுப்பணித்துறையில் பணியாற்றிய அதிகாரிகள் என்னுடன் வந்தனர் அவர்கள் பணியில் இருந்தால் அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் எனவும் அறிக்கையில் கூறியுள்ளார்.

‛கேரளாவிற்கு நீர் திறக்கப்பட்ட போது துரை முருகன் ஏன் வாய் திறக்கவில்லை?’ ஓபிஎஸ் கேள்வி!

மேலும் தன்னுடைய அறிக்கையில் உச்ச நீதிமன்றத்தின் ஆணையை செயல்படுத்தாமல் இருக்கும் வகையில் கேரளா அரசு ஒரு சட்டத்தை கொண்டுவந்தபோது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அதனை எதிர்த்து வழக்குதான் போட்டார்கள் என்றும் அந்த வழக்குக்கு நம்பர் தரவில்லை என்றும் அவருடைய தலைவர் நம்பர் வாங்கி வழக்கு முடித்து வென்றார்கள் என்று உண்மைக்கு மாறான தகவலை கூறியிருக்கிறார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பு 2006 ஆம் ஆண்டு  வெளிவந்த பின்பு அந்த தீர்ப்பிற்கு எதிராக கேரளா அரசு சட்ட திருத்தத்தை கொண்டு வந்தபோது அப்போது தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு இருந்ததால் கேரளா அரசின் சட்ட திட்டத்தை எதிர்த்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஆட்சி காலத்திலேயே வழக்கு தொடுத்தார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது .

தேர்தல் முடிந்து 2006 ஆம் ஆண்டு மே மாதம் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றது இருந்தாலும் மத்தியிலும் திமுக அங்கம் வகித்த ஆட்சிதான் நடைபெற்றது . ஆனால் 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் இருந்த வரை முல்லைப் பெரியாறு வழக்கில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

‛கேரளாவிற்கு நீர் திறக்கப்பட்ட போது துரை முருகன் ஏன் வாய் திறக்கவில்லை?’ ஓபிஎஸ் கேள்வி!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் குறிப்பிட்டது போல வழக்கிற்கான நம்பர் மட்டுமே தரப்பட்டது இதைத்தான் உப்பில்லை சப்பில்லை என்று விட்டுவிட்டதாக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

முல்லை பெரியாறு அணை பழுதுபார்க்கும் பணிகளுக்காக ஏதுவாக 6.50 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டு ஜல்லி ,மணல் ,கம்பி போன்ற கட்டுமானப் பொருட்கள் வல்லக்கடவு வழியாக அணையின்  பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு முல்லைப் பெரியாறு அணையில் உள்ள பேபி அணைக்கு கீழ் உள்ள மரங்களை வெட்ட கேரள வனத்துறை அனுமதி வழங்காத நிலையில் கால தாமதம் ஏற்பட்டதன் காரணமாக ஒப்பந்ததாரர் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஒப்பந்தப்புள்ளி ரத்து செய்யப்பட்டு அங்கிருந்த பொருட்கள் அகற்றப்பட்டன. தற்போது 15 மரங்களை வெட்ட கேரளா வனத்துறை அனுமதி அளித்துள்ளது என்ற தகவல் மிகவும் மகிழ்ச்சிக்குரியது பழுதுபார்க்கும் பணிகள் முடிந்தவுடன் அணையின் நீர்மட்டத்தை 152 அடி வரை தேக்கிக் கொள்ளலாம் என்ற மாண்புமிகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் பெற்றுத்தந்த உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் திமுக விற்கு கம்யூனிஸ்ட் கட்சியிடம் உள்ள செல்வாக்கை நெருக்கத்தைப் பயன்படுத்தி கேரள அரசின் அனுமதியைப் பெற்று அலுவலகப் பணிகளை விரைந்து மேற்கொண்டு அணையின் நீர்மட்டத்தை 152 அடி வரை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்வதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

‛கேரளாவிற்கு நீர் திறக்கப்பட்ட போது துரை முருகன் ஏன் வாய் திறக்கவில்லை?’ ஓபிஎஸ் கேள்வி!

நீண்ட நெடிய அறிக்கை வெளியிட்டுள்ள துரைமுருகன் அவர்கள் கேரளாவிற்கு தண்ணீர் திறக்கப்பட்டது குறித்து ஒரு வார்த்தை கூட வாய் திறக்காதது வேதனை அளிப்பதாகவும் இனியாவது முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரளாவிற்கு தண்ணீர் திறக்கப்பட்டது குறித்து தெளிவாக விளக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
அதிர்ச்சி! PMK-வில் அதிகாரப் பூசல் உச்சம்: அன்புமணி ராமதாஸ் தலைவராக அங்கீகாரம், ராமதாஸ் என்ன செய்வார்?
அதிர்ச்சி! PMK-வில் அதிகாரப் பூசல் உச்சம்: அன்புமணி ராமதாஸ் தலைவராக அங்கீகாரம், ராமதாஸ் என்ன செய்வார்?
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Embed widget