மேலும் அறிய

நாடு முழுவதும் எமர்ஜென்சி அலர்ட்; செல்போனுக்கு அபாய எச்சரிக்கை ஒலி கொடுத்த அரசு- என்ன காரணம்?

நாடு முழுவதும் உள்ள செல்போன் பயனர்களுக்கு, அரசு அபாய எச்சரிக்கை ஒலியுடன் குறுஞ்செய்தியை அனுப்பி உள்ளது.

நாடு முழுவதும் உள்ள செல்போன் பயனர்களுக்கு, அரசு அபாய எச்சரிக்கை ஒலியுடன் குறுஞ்செய்தியை அனுப்பி உள்ளது. பேரிடர்களின்போது அவசரகால தகவல் தொடர்புகளை மேம்படுத்துவதற்காக “செல் ஒலிபரப்பு எச்சரிக்கை“ சோதனையாக இது செயல்படுத்தப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து நீண்ட பீப் ஒலியுடன் ஒரு குறுஞ்செய்தி இன்று காலை 11.27 மணிக்கு அனுப்பப்பட்டது. இந்திய அரசின் தொலைதொடர்புத் துறையுடன் இணைந்து பேரிடர் மேலாண்மைத் துறை இதை அனுப்பி உள்ளது. 

பின்னணி என்ன?

தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையமும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும் மத்திய அரசின் தொலைத்தொடர்பு துறையுடன் இணைந்து, பேரிடர்களின்போது அவசரகாலத் தகவல் தொடர்புகளை மேம்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்தவும் “செல் ஒலிபரப்பு எச்சரிக்கை” சோதனை ஓட்டத்தை இன்று நடத்தியது.

செல் ஒலிபரப்பு எச்சரிக்கை

“செல் ஒலிபரப்பு எச்சரிக்கை” முறை என்பது ஒரு அதிநவீன தொழில்நுட்பமாகும். இதில் ஒரு செல்போன் கோபுரத்தின் குறிப்பிட்ட எல்லைக்குள் உள்ள அனைத்து செல்பேசிகளுக்கும், இயற்கை இடர்பாடு குறித்த எச்சரிக்கைகள் ஒரே நேரத்தில் சென்றடையக்கூடிய வசதி உள்ளது. கடுமையான வானிலை எச்சரிக்கைகள் (எ.கா., சுனாமி, மழை, வெள்ளம், பூகம்பம் போன்றவை) பொதுப் பாதுகாப்புச் செய்திகள், வெளியேற்ற அறிவிப்புகள் மற்றும் பிற அவசரகால எச்சரிக்கைகளை வழங்க “செல் ஒலிபரப்பு எச்சரிக்கை” பயன்படுத்தப்பட உள்ளது. 

எதற்கு இந்த சோதனை?

இந்த தொழில்நுட்பம் பேரிடர் எச்சரிக்கை தகவல்கள், சாத்தியமான அச்சுறுத்தல்கள் மற்றும் நெருக்கடியான சூழ்நிலைகளை பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் பரவலாக தெரிவிக்க பயன்படுத்தப்பட உள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பில் தொடர்ச்சியான உறுதிப்பாட்டில் உள்ள தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், ஒவ்வொரு தொலைத்தொடர்பு சேவை வழங்குநரிடமும் “செல் ஒலிபரப்பு எச்சரிக்கை” அமைப்பின் சோதனை இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற்றது.

அச்சமடையத் தேவையில்லை

சோதனைக் காலத்தில், பொதுமக்களின் செல்போன்களில் அவசர எச்சரிக்கைகள் பெறப்படும். இந்த விழிப்பூட்டல்கள் திட்டமிட்ட சோதனைச் செயல்பாட்டின் ஒரு பகுதியாகும் என்றும், உண்மையான அவசரநிலையைக் குறிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்த சோதனை ஓட்டத்தால்
பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை. இதற்கு எதிர்வினை ஆற்ற வேண்டாம் என்று  தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து நீண்ட பீப் ஒலியுடன் ஒரு குறுஞ்செய்தி இன்று காலை 11.27 மணிக்கு அனுப்பப்பட்டது. அதில், ‘’இது இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை மூலம் செல் ப்ராட்காஸ்டிங் சிஸ்டம் மூலம் அனுப்பப்பட்ட மாதிரி சோதனைச் செய்தி. உங்கள் முடிவில் இருந்து எந்த நடவடிக்கையும் தேவையில்லை என்பதால், இந்த செய்தியை புறக்கணிக்கவும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் செயல்படுத்தப்படும் பான்-இந்தியா அவசர எச்சரிக்கை அமைப்பை சோதிக்க இந்த செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

இது பொது பாதுகாப்பை மேம்படுத்துவதையும் அவசர காலங்களில் சரியான நேரத்தில் எச்சரிக்கைகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது’’ என்று அனுப்பப்பட்டுள்ளது.

முன்னதாக செல்போன் பயனர்களுக்கு, ''முக்கிய அறிவிப்பு: உங்கள் மொபைலில் எமெர்ஜென்ஸி சூழல் குறித்த டெஸ்ட் மெசேஜை வேறு ஒலி மற்றும் அதிர்வுடன் பெறலாம். தயவுசெய்து பீதி அடைய வேண்டாம், இந்த செய்தி உண்மையான அவசரநிலையைக் குறிக்கவில்லை. இந்தச் செய்தியை இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் இணைந்து திட்டமிட்ட சோதனைச் செயல்பாட்டின் ஒரு பகுதியாக அனுப்புகிறது'' என்று குறுஞ்செய்தியை பேரிடர் மேலாண்மை ஆணையம் அனுப்பியது குறிப்பிடத்தக்கது. 

 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

SBI Revises Cash Withdrawal Rules: எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஜிஎஸ்டியுடன் கட்டணம்!
SBI Revises Cash Withdrawal Rules: எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஜிஎஸ்டியுடன் கட்டணம்!
தமிழகத்தில் இன்று பரபரப்பு முதல் டெல்லி அரசியல் வரை.. ஆகஸ்ட் 21-ம் தேதி TOP 10 முக்கிய செய்திகள்!
தமிழகத்தில் இன்று பரபரப்பு முதல் டெல்லி அரசியல் வரை! ஆகஸ்ட் 21-ம் தேதி TOP 10 முக்கிய செய்திகள்!
இன்று மழை இருக்கா, இல்லையா? ஆகஸ்ட் 21 வானிலை நிலவரம்! காஞ்சி, செங்கல்பட்டு, அப்டேட்!
இன்று மழை இருக்கா, இல்லையா? ஆகஸ்ட் 21 வானிலை நிலவரம்! காஞ்சி, செங்கல்பட்டு, அப்டேட்!
DMK TVK: களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK TVK: களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
Trump Vs Iran: உங்க சொந்த நாட்டு பிரச்னைய மறைக்க எங்க மேல தடையா.? ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்; என்ன விஷயம்.?
உங்க சொந்த நாட்டு பிரச்னைய மறைக்க எங்க மேல தடையா.? ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்; என்ன விஷயம்.?
TN Weather News: சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
7 Seater: அடடே 20+KM மைலேஜில் 7 சீட்டர் - ஜப்பான் மாடலின் விலை, அம்சங்கள், வசதிகள் - முழு விவரம் இதோ
அடடே 20+KM மைலேஜில் 7 சீட்டர் - ஜப்பான் மாடலின் விலை, அம்சங்கள், வசதிகள் - முழு விவரம் இதோ
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Embed widget