AIADMK Protest: முதல் போராட்டத்தை அறிவித்த இபிஎஸ்... மின்கட்டண உயர்வை கண்டித்து களமிறங்கும் அதிமுக!
சென்னையில் 9 கழகங்களுடன் இணைந்து வருகிற ஜுலை 27 ம் தேதி ஒரே கண்டன ஆர்ப்பாட்டமாக நடைபெறும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் ஈபிஎஸ் அறிவித்துள்ளார்.
சென்னையில் 9 கழகங்களுடன் இணைந்து வருகிற ஜுலை 27 ம் தேதி ஒரே கண்டன ஆர்ப்பாட்டமாக நடைபெறும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் ஈபிஎஸ் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ”அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு. விலைவாசி உயர்வு, சட்டம், ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட தி.மு.க. அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்து, வருகின்ற 25.7.2022 - திங்கட் கிழமை அன்று, கழக அமைப்பு ரீதியான அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
அதன்படி, கீழ்க்கண்ட மாவட்டங்களில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கு மட்டும், கீழ்க்கண்ட நிர்வாகிகள் பொறுப்பேற்று நடத்துவார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
திருச்சி மாநகர் மாவட்டம் :
1. திரு. பி. தங்கமணி, M.L.A., அவர்கள் கழக அமைப்புச் செயலாளர், நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
திரு. மலைக்கோட்டை V. அய்யப்பன் அவர்கள் திருச்சி மாநகர் மாவட்டக் கழக அவைத் தலைவர்
கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் :
2. திரு. என். தளவாய்சுந்தரம், M.L.A., அவர்கள் கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர்
தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் :
3 . திரு. R. காமராஜ், M.LA., அவர்கள் கழக அமைப்புச் செயலாளர், திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
திரு. M. ராம்குமார் அவர்கள் தஞ்சாவூர் வடக்கு மாவட்டக் கழக அவைத் தலைவர்
தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் :
4. திரு. O.S. மணியன், M.LA., அவர்கள் கழக அமைப்புச் செயலாளர், நாகப்பட்டினம் மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர்
திரு. S.V. திருஞானசம்பந்தம், Ex. M.LA., அவர்கள் தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழக அவைத் தலைவர்
தேனி மாவட்டம் :
5. திரு. R.B. உதயகுமார், M.L.A., அவர்கள் கழக புரட்சித் தலைவி அம்மா பேரவைச் செயலாளர், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர்
திரு. S.T.K. ஜக்கையன், Ex. M.P., அவர்கள் கழக அமைப்புச் செயலாளர்
பெரம்பலூர் மாவட்டம் :
6. திரு. N.R. சிவபதி அவர்கள் கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர், முன்னாள் அமைச்சர்
திரு. வரகூர் அ. அருணாசலம் அவர்கள் கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர்
மேற்கண்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்களும், முன்னாள் அமைச்சர்களும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.
சென்னையைப் பொறுத்தமட்டில், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் 9 மாவட்டக் கழகங்களும் ஒன்றிணைந்து, ஒரே கண்டன ஆர்ப்பாட்டமாக 27.07.2022 புதன் கிழமை காலை 10 மணியளவில் நடைபெறும். ஏனைய மாவட்டங்களில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளவாறு. கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்