மேலும் அறிய

“அன்புள்ள அண்ணா.. நீங்கள் அதிமுக ஒருங்கிணைப்பாளரே கிடையாது” - ஓபிஎஸ்க்கு இபிஎஸ் பதில் கடிதம்... 

உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் தொடர்பாக ஓபிஎஸ் எழுதிய கடிதத்திற்கு எடப்பாடி பழனிசாமி பதில் கடிதம் எழுதியுள்ளார்.  

உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் தொடர்பாக ஓபிஎஸ் எழுதிய கடிதத்திற்கு எடப்பாடி பழனிசாமி பதில் கடிதம் எழுதியுள்ளார்.  

இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தில், “அன்புள்ள அண்ணன் அவர்களுக்கு வணக்கம். தங்களின் 29.06.2022-ஆம் தேதியிட்ட கடிதம் பத்திரிகைகளின் வாயிலாகத் தெரிந்துகொண்டேன். பின்னர், மகாலிங்கம் வழியாகப் பெறப்பட்டது. கடந்த 23.06.2022 அன்று நடைபெற்ற கழகப் பொதுக்குழுவில், 1.12.2021 அன்று நடைபெற்ற கழக செயற்குழுவால் கொண்டுவரப்பட்ட கழக சட்ட திட்ட திருத்தங்கள் அங்கீகரிக்கப்படவில்லை. ஆதலால், அந்த சட்ட திட்ட திருத்தங்கள் காலாவதி ஆகிவிட்டது. 

எனவே, கழக ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் தாங்கள் எழுதியுள்ள கடிதம் செல்லத்தக்கதல்ல. மேலும், உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது காலியாக இருக்கும் பதவிகளுக்கு நடைபெற உள்ள தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் 27.06.2022 அன்று முடிவுற்ற நிலையில், இத்தனை நாட்கள் பொறுத்திருந்து, கழகத்தின் வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையிலும், 27.06.2022 அன்று கூட்டப்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு தாங்கள் உட்பட அனைவருக்கும் முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டு, மொத்தம் உள்ள 74 தலைமைக் கழக நிர்வாகிகளில் 65 பேர் கலந்துகொண்டனர். 

4 பேர் உடல்நிலை சரியில்லை என்று தகவல் தெரிவித்திருந்தனர். தாங்கள் அந்தக் கூட்டத்தை புறக்கணித்த நிலையில், தற்போதைய தங்களின் இந்தக் கடிதம் ஏற்படையதாக இல்லை. 

அதே போல், நாம் இருவரும் கூட்டாக அழைப்பு விடுத்த, கழகத்தின் பொதுக்குழுவை நடத்தவிடாமல் தடுத்து நிறுத்துவதற்காகத் தாங்கள், ஆவடி காவல் ஆணையருக்கு கடிதம் மூலம் புகார் அளித்தும், நீதிமன்றங்களின் மூலம் வழக்குகளைத் தாக்கல் செய்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை செயல்படாத நிலைக்குக் கொண்டு செல்வதற்கான அனைத்துப் பணிகளையும் செய்துவிட்டு, தற்போது இப்படி ஒரு கடிதத்தை எனக்கு அனுப்புவது ஏற்படையதாக இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்த்துள்ளார். 

முன்னதாக, உள்ளாட்சி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் சமர்ப்பிக்க வேண்டிய ‘ஏ’ மற்றும் ‘பி’ படிவங்களில் ஓபிஎஸ் – ஈபிஎஸ் இணைந்து கையெழுத்து போடாததால், அதிமுக வேட்பாளர்கள் சுயேட்சையாக போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் – இரட்டை இலை சின்னமும் கிடைக்காது. 

ஏ மற்றும் பி படிவத்தில் கையெழுத்து போட நான் தயார் என்றும், அந்த படிவங்களை தனக்கு அனுப்பி வைக்க வலியுறுத்தியும் அதிமுக தலைமை நிலைய செயலாளர் மகாலிங்கம் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு ஒபிஎஸ் கடிதம் அனுப்பிய நிலையில், அந்த கடிதத்தை வாங்க எடப்பாடி பழனிசாமி மறுத்திருந்தார்.

இந்நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி பன்னீசெல்வத்திற்கு இப்படி ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். அதில், பன்னீர்செல்வத்தை அதிமுகவின் பொருளாளர் என்றே குறிப்பிட்டுள்ளார். மேலும் எடப்பாடி பழனிசாமி தன்னை கழக நிலையை செயலாளர் எனக் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Supreme Court: கணவர்களிடம் பணம் பறிக்காதிங்க..! திருமணம் பிசினஸா? பெண்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
Supreme Court: கணவர்களிடம் பணம் பறிக்காதிங்க..! திருமணம் பிசினஸா? பெண்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
TN Rain Update: சென்னையில் பரவலாக மழை, வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம்
TN Rain Update: சென்னையில் பரவலாக மழை, வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம்
Ashwin:
Ashwin: "டேய் தகப்பா என்ன இதெல்லாம்?" அப்பா குற்றச்சாட்டுக்கு அஸ்வின் தந்த விளக்கத்தை பாருங்க!
Bipin Rawat: இந்தியாவே ஷாக்..! முப்படை தளபதி பிபின் ராவத் மரணம் - மனித தவறே காரணம் என அறிவிப்பு
Bipin Rawat: இந்தியாவே ஷாக்..! முப்படை தளபதி பிபின் ராவத் மரணம் - மனித தவறே காரணம் என அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Supreme Court: கணவர்களிடம் பணம் பறிக்காதிங்க..! திருமணம் பிசினஸா? பெண்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
Supreme Court: கணவர்களிடம் பணம் பறிக்காதிங்க..! திருமணம் பிசினஸா? பெண்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
TN Rain Update: சென்னையில் பரவலாக மழை, வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம்
TN Rain Update: சென்னையில் பரவலாக மழை, வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம்
Ashwin:
Ashwin: "டேய் தகப்பா என்ன இதெல்லாம்?" அப்பா குற்றச்சாட்டுக்கு அஸ்வின் தந்த விளக்கத்தை பாருங்க!
Bipin Rawat: இந்தியாவே ஷாக்..! முப்படை தளபதி பிபின் ராவத் மரணம் - மனித தவறே காரணம் என அறிவிப்பு
Bipin Rawat: இந்தியாவே ஷாக்..! முப்படை தளபதி பிபின் ராவத் மரணம் - மனித தவறே காரணம் என அறிவிப்பு
"பறிபோகும் தலைவர் பதவி" அண்ணாமலையை கைவிட்ட டெல்லி - தமிழிசை பக்கா ஸ்கெட்ச்!
Indira Gandhi Emergency: எமர்ஜென்சி - பதவிக்காக நீதித்துறையை பந்தாடிய இந்திரா காந்தி, இப்படியெல்லாமா சட்டம் போடுவாங்க..!
Indira Gandhi Emergency: எமர்ஜென்சி - பதவிக்காக நீதித்துறையை பந்தாடிய இந்திரா காந்தி, இப்படியெல்லாமா சட்டம் போடுவாங்க..!
Breaking News LIVE : சென்னையில் காலையிலே மழை! இன்றுடன் நிறைவு பெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடர்!
Breaking News LIVE : சென்னையில் காலையிலே மழை! இன்றுடன் நிறைவு பெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடர்!
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
Embed widget