மேலும் அறிய

Durai Murugan: “அரசியல்வாதியாக மாறி வாருங்கள்; அப்போது நாங்கள் தயார்” - ஆளுநருக்கு துரைமுருகன் கொடுத்த பதிலடி

அமைதியைச் சீர்குலைக்கும் விதத்தில் ஆளுநர் பொறுப்பில் உள்ள  ஆர்.என்.ரவி பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ் செய்தித் தொடர்பாளராகப் பரப்புரை செய்வதா?  என்று துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் ரவி:

ஆளுநராக கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி தமிழ்நாட்டில் பொறுப்பேற்றுக் கொண்டவர் ஆர்.என்.ரவி. அன்று முதல் இன்று வரை தமிழக அரசை விமர்சிப்பது, கொள்கை ரீதியாக திமுகவை தொடர்ந்து விமர்சித்து வருவது, பாஜகவிற்கு ஆதரவாக பேசுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில் அவர் பேசிய சர்ச்சைக்குரிய கருத்துகள் பல்வேறு நிலைகளில் ஆளுநர் என்ற பொறுப்பைத் தாண்டியதாக இருப்பதாக அரசியல் கட்சியினர் மற்றும் அரசியல் விமர்சர்கள் தொடர்ந்து ஆளுநர் ரவிக்கு கண்டணம் தெரிவித்து வருகின்றனர்.


பட்டியலின பெண்ணுக்கு நீதி மறுக்கப்படுகிறது:

இச்சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர், “பட்டியலின பெண்ணுக்கு நீதி மறுக்கப்படுகிறது. இத்தகைய சூழலில் சமூக நீதியை காப்பதாக பரப்புரை செய்கிறார்கள். தமிழகத்தில் பட்டியலின பெண் ஊராட்சி தலைவராக இந்துமதி பதவி ஏற்பது தடுக்கப்படுவதாக வெளியான செய்தியை நாளிதழில் படித்தேன். பட்டியலின பெண்ணுக்கு உரிமை மறுக்கப்படுவது தான் சமூக நீதியா?" என ஆளும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை கடுமையாக சாடினார்.

திமுக கண்டனம்:

ஆளுநரின் இந்த பேச்சுக்கு திமுக தனது கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளரும், நீரவளத்துறை அமைச்சருமான துரைமுருகன் இன்று (அக்டோபர் 6) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செய்தித்தொடர்பாளர்:

அதில்,  ”திருப்பத்தூர் மாவட்டம், நாயக்கனேரி ஊராட்சி மன்றத் தலைவர் பதவியேற்பு குறித்து மாண்பமை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவைக்கூட அறிந்துகொள்ள முயற்சிக்காமல் தமிழ்நாடு அரசின் மீது மாண்புமிகு ஆளுநர் அவர்கள் திட்டமிட்டு அவதூறுப் பரப்புரையை செய்து வருவது மிகுந்த வேதனைக்குரியது. அரசியல்சட்டப் பதவியில் இருப்பவர் அரசியல் கட்சித் தலைவர் போல், குறிப்பாக பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செய்தித்தொடர்பாளர் போல் பேசி, தமிழ்நாட்டின் சமூகநீதியால் பிறந்துள்ள அமைதிக்கும் குந்தகம் விளைவித்து வருவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.


தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 12,525 ஊராட்சிகளில் 4,357 இடங்கள் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதில் திருப்பத்தூர் மாவட்டம் நாயக்கனேரி ஊராட்சி மன்றத் தலைவர் பதவி மட்டுமே நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் காரணமாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பொறுப்பேற்க இயலாத நிலை இருந்தது . அங்கு இந்த நாயக்கனேரி ஊராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வழக்கில், மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் தனது 7-10-2021 நாளிட்ட உத்தரவில் "... The learned Government Counsel submitted that the election is unopposed. Since this Court feels that the place is not meant to the person of this category, we make it clear that she shall not take charge..." (போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். ஒதுக்கப்பட்ட இடத்துக்குரிய பிரிவைச் சேர்ந்தவராக இந்நபர் இல்லை என்று இந்த நீதிமன்றம் கருதுகிற காரணத்தால் சம்பந்தப்பட்ட நபர் பொறுப்பேற்கக் கூடாது என்று தெளிவாக்குகிறோம்.) எனத் தெரிவிக்கப்பட்டிருந்ததால் ஊராட்சி மன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பொறுப்பை ஏற்க இயலாத நிலை ஏற்பட்டது.

திராவிட மாடல்:

திராவிட மாடல் அரசின் சமூகநீதிக் கொள்கை, பா.ஜ.க.வையும், அதன் அமைப்புகளையும் தமிழ் மண்ணுக்குள் செல்வாக்குப் பெற முடியாமல் தடுத்து வைத்திருக்கிறதே என்ற ஆதங்கம்தான் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் இப்படி பேச காரணமே தவிர, பட்டியலின பழங்குடியின மக்கள் மீது அவருக்கு - இருக்கும் அக்கறை இல்லை.

அப்படி அவருக்கு உண்மையிலேயே அக்கறை இருந்திருந்தால் “அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராலம்” என்று சட்டம் பிறப்பித்துள்ளதை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளவர்களை கடிந்து கொண்டிருக்கலாம். அடிக்கடி டெல்லி செல்லும் அவர், உத்தரபிரதேசத்தில் பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் 31.8 விழுக்காடும், மத்திய பிரதேசத்தில் 63.6 விழுக்காடும் உயர்ந்திருப்பதற்குக் கவலைப்பட்டு குரல் கொடுத்திருக்கலாம்.

உத்தரபிரதேசத்தில் 13,146, மத்திய பிரதேசத்தில் 7214, குஜராத்தில் 1201 எனப் பட்டியலினத்தவர் கொலை செய்யப்பட்டது குறித்து வெகுண்டெழுந்திருக்கலாம். ஏன் பழங்குடியினருக்கு எதிராக மத்திய பிரதேசத்தில் 17 விழுக்காடு அளவிற்குக் குற்றங்கள் அதிகரித்திருப்பதைக் கண்டு பதற்றப்பட்டு பேசியிருக்கலாம்.

யாரை ஏமாற்ற இந்த நாடகம்?

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் அதிகரித்து வரும் இத்தகைய கொடுமைகளை எதிர்த்து உள்துறை அமைச்சரிடம் குரல் கொடுக்காத ஆளுநர், 2 உயர்நீதிமன்ற உத்தரவில் உள்ள ஒரு ஊராட்சியை மட்டும் பற்றிப் பேசுவதன் உள்நோக்கம் என்ன? யாரை ஏமாற்ற இந்த நாடகமாடுகிறீர்கள்?

அனைவரும் ஓரிடத்தில் சமத்துவமாய் வாழ சமத்துவபுரங்களை உருவாக்கிய தமிழ்நாடு, சமூகநீதி மண். இங்கு தமிழ்நாடு பட்டியலின - பழங்குடியின ஆணையத்தை அமைத்து, மாநில அளவிலான கண்காணிப்புக் கூட்டங்களை நடத்தி பட்டியலின மற்றும் பழங்குடியினத்தவருக்கான சமூகநீதியை நிலைநாட்டி வருகிறார் எங்கள் முதலமைச்சர் அவர்கள்.

எங்கள் முதலமைச்சர் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோதுதான் தேர்தலை நடத்த முடியாத ஊராட்சிகளில் தேர்தலை நடத்தி, சமூகநீதியை நிலைநாட்டினார். பட்டியலின பழங்குடியினத்தவர் மீதான வன்முறைகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் தண்டனை பெறுவது 2013-2020 வரை 7.15 விழுக்காடாக இருந்த நிலை 2021-2023-இல் 9.12 விழுக்காடாக உயர்த்தியுள்ளது இந்த சமூகநீதி அரசுதான்!

நாங்கள் தயார்:

இந்த விவரங்களும் வரலாறும் தெரியாமல், ஆளுநர் சிறப்பாகச் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி வரும் திராவிட மாடல் அரசை தொடர்ந்து விமர்சிப்பதை தவிர்ப்பது நல்லது. அரசியல் பேச வேண்டும் என்றால் “அரசியல் தலைவராக” தன்னை மாற்றிக் கொண்டு தாராளமாக ஆளுநர் தன் கருத்தை தெரிவிக்கட்டும். அதற்கு பதிலடி கொடுக்க நாங்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களுமே தயாராக இருக்கிறார்கள்.

எனவே, ஆளுநர் உண்மைக்கு மாறான இத்தகைய பேச்சுகளைத் தவிர்த்து, மாநில சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கும், அரசு நிர்வாகத்தின் கோப்புகளிலும், அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களை காப்பாற்ற அவர்கள் தொடர்பான லஞ்ச வழக்குகளில் கையொப்பமிடாமல் வைத்துள்ள (sanction of prosecution) கோப்புகளிலும் கையெழுத்துப் போடுவதில் தனது நேரத்தை உருப்படியாகச் செலவிட்டு, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் ஆக்கபூர்வமாக செயல்படும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

 

மேலும் படிக்க: Kanchipuram: காஞ்சி ஆட்சியருக்கு எதிராக களமிறங்கிய சிஐடியு - காரணம் என்ன ?

மேலும் படிக்க: Students Protest: குடிநீர்த் தொட்டியில் புழு, அசுத்தமான கழிப்பறை- சேலத்தில் அரசுப்பள்ளி மாணவிகள் போராட்டம்

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
TATA Sierra Speed Milage: 222 கி.மீ வேகம், 30 கி.மீ மைலேஜா.! என்னங்க சொல்றீங்க.?! சோதனையில் அசத்திய டாடா சியாரா
222 கி.மீ வேகம், 30 கி.மீ மைலேஜா.! என்னங்க சொல்றீங்க.?! சோதனையில் அசத்திய டாடா சியாரா
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
TATA Sierra Speed Milage: 222 கி.மீ வேகம், 30 கி.மீ மைலேஜா.! என்னங்க சொல்றீங்க.?! சோதனையில் அசத்திய டாடா சியாரா
222 கி.மீ வேகம், 30 கி.மீ மைலேஜா.! என்னங்க சொல்றீங்க.?! சோதனையில் அசத்திய டாடா சியாரா
திட்டம் போட்டு குழி பறித்தார்.. தஞ்சையில் ரூ.44 லட்சம் வழிப்பறி சம்பவத்தில் 4 பேர் கைது
திட்டம் போட்டு குழி பறித்தார்.. தஞ்சையில் ரூ.44 லட்சம் வழிப்பறி சம்பவத்தில் 4 பேர் கைது
அ.தி.மு.க.,வில் ஓபிஎஸ் இணைப்பு; HINT கொடுத்த உசிலம்பட்டி எம்.எல்.ஏ., - 2026 தேர்தலில் வெற்றி கிடைக்குமா?
அ.தி.மு.க.,வில் ஓபிஎஸ் இணைப்பு; HINT கொடுத்த உசிலம்பட்டி எம்.எல்.ஏ., - 2026 தேர்தலில் வெற்றி கிடைக்குமா?
Trump on 3rd World War: மூன்றாம் உலகப் போரை நோக்கி செல்கிறோம்; ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை; எதற்காக தெரியுமா.?
மூன்றாம் உலகப் போரை நோக்கி செல்கிறோம்; ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை; எதற்காக தெரியுமா.?
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Embed widget