Vijayakanth Death: விஜயகாந்த் மறைவு: அஞ்சலி செலுத்த குவியும் மக்கள்.. கோயம்பேட்டில் போக்குவரத்து மாற்றம்..
தேமுதிக தலைவர் கேப்டன் விஜய்காந்த் மறைவை ஒட்டி சென்னை கோயம்பேடு பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் இருக்கும் தேமுதிக தலைமை அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்த் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள், ரசிகர்கள், மக்கள் திரண்டுள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு மக்கள் ஒத்துழைக்குமாறு சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறை தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் காரணமாக உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே கடந்த நவம்பர் 18 ஆம் தேதி லேசான காய்ச்சல், சளி மற்றும் இருமல் காரணமாக விஜயகாந்த் சென்னை போரூரில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கிட்டதட்ட 23 நாட்கள் சிகிச்சைக்குப் பின் அவர் கடந்த டிசம்பர் 11 ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று முன் தினம் மீண்டும் உடல்நலக்குறைவு காரணமாக விஜயகாந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே அவர் நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், மீண்டும் அவருக்கு நுரையீரல் பிரச்சனை இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இன்று காலை தேமுதிக தரப்பில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. காலை 9 மணி அளவில் மருத்துவமனை தரப்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் விஜயகாந்திற்கு நுரையீரல் அழற்சி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை பெற்று வந்தார் என்றும் மருத்துவர்களின் தொடர் முயற்சி இருந்த போதிலும் இன்று காலை சிகிச்சை பல்னின்றி உயிரிழந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Traffic diversions have been implemented to cope with the large number of vehicles near Koyambedu Flyover.
— Greater Chennai Traffic Police (@ChennaiTraffic) December 28, 2023
Padi bridge top
Thiruveedhi Amman service road
Shanthi Colony 13th main road.
Motorists are requested to co-operate.#Chennai Traffic
இந்நிலையில் அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையான மியாட்டில் இருந்து கேப்டன் விஜயகாந்தின் உடல் சாலிகிராமத்தில் இருக்கும் அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. பின் அங்கிருந்து கோயம்பேட்டில் இருக்கும் தலைமை அலுவலத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலை கொண்டு செல்லும் வழி முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதன் காரணமாகன் கோயம்பேடு பகுதி முழுவதும் ஸ்தமித்து போனது.
Traffic Update near Koyambedu:
— Greater Chennai Traffic Police (@ChennaiTraffic) December 28, 2023
There is a large inflow of vehicles in and around Koyambedu Flyover. #ChennaiTraffic@SandeepRRathore @R_Sudhakar_Ips @chennaipolice_
Please plan your routes accordingly. pic.twitter.com/cWsSvryMyF
இதன் காரணமாக கோயம்பேடு பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.