Special Bus: பக்தர்களே! பிரமோற்சவத்திற்கு திருப்பதி செல்ல ரெடியா? உங்களுக்கான அப்டேட் இதோ
திருப்பதி செல்லும் பக்தர்களின் வசதிக்காக பயணச் சீட்டை முன்பதிவு மையம் வழியாகவோ, இணையதளம் மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிப்பு.
திருமலை திருப்பதி வேதஸ்தான பிரமோற்சவம் விழா அடுத்த மாதம் 3 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை திருப்பதியில் நடைபெறுகிறது. பிரம்மோற்வசத்தை முன்னிட்டு, சேலம் கோட்ட போக்குவரத்து கழகம் சார்பில் திருப்பதிக்கு 13 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து காலை 8, 9 மற்றும் 10 மணிக்கும் திருப்பதிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பின்னர் இரவு 9, 9.30 மற்றும் 10.30 மணிக்கும் திருப்பதிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதேபோல், திருப்பதியில் இருந்து காலை 6.30, 7 மற்றும் 7.30 மணிக்கும் சேலத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பின்னர், இரவு 8, 9 மற்றும் 10 மணிக்கும் சேலத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
தர்மபுரி பேருந்து நிலையத்தில் இருந்து காலை 8 மணிக்கும், இரவு 8 மணிக்கும் திருப்பதிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. திருப்பதியில் இருந்து காலை 6.30 மணிக்கும், இரவு 9 மணிக்கும் சிறப்பு பேருந்துகள் தர்மபுரிக்கு இயக்கப்படுகிறது. கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தில் இருந்து காலை 7 மணிக்கும், மாலை 6 மணிக்கும், இரவு 8.30 மணிக்கும் திருப்பதிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
பின்னர் திருப்பதியில் இருந்து அதிகாலை 2.30 மணிக்கும், மதியம் 1 மணிக்கும், இரவு 12 மணிக்கும் கிருஷ்ணகிரிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஓசூர் பேருந்து நிலையத்தில் இருந்து மாலை 6.30 மணிக்கும், இரவு 8 மணிக்கும் சிறப்பு பேருந்துகள் திருப்பதிக்கு இயக்கப்படுகிறது. திருப்பதியில் இருந்து காலை 5 மணிக்கும், காலை 8 மணிக்கும் ஓசூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும், குழுவாக செல்லும் பக்தர்களுக்கும் பேருந்து வசதிகள் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருப்பதி செல்லும் பக்தர்களின் வசதிக்காக பயணச் சீட்டை முன்பதிவு மையம் வழியாகவோ, இணையதளம் மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம். எனவே, திருப்பதிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப் பட உள்ளதால், பயணிகள் அனைவரும் பயண நெரிசலை தவிர்த்து பாதுகாப்பான பயணம் செய்திட வேண்டும் என்று சேலம் கோட்ட போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று வார இறுதி நாட்களையொட்டி சேலம் கோட்டம் சார்பில் இன்று (27 ஆம் தேதி) முதல் 30 ஆம் தேதி வரை 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு பேருந்துகள் சேலம் புதிய பேருந்து நிலையம், தர்மபுரி பேருந்து நிலையம், கிருஷ்ணகிரி பேருந்து நிலையம், பெங்களூர் பேருந்து நிலையம், சென்னை கோயம்பேடு, ஓசூர் பேருந்து நிலையம், கோவை பேருந்து நிலையம், திருப்பூர் பேருந்து நிலையம், திருவண்ணாமலை பேருந்து நிலையம், சிதம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.
சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி, மேட்டூருக்கும். சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, பெங்களூருவுக்கும், ஓசூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரைக்கும். நாமக்கல்லில் இருந்து சென்னைக்கும். திருச்சியில் இருந்து ஓசூருக்கும். திருவண்ணாமலையில் இருந்து பெங்களூருக்கும். ஓசூரில் இருந்து சேலம், புதுச்சேரி, கடலூருக்கும். சேலத்தில் இருந்து சிதம்பரம், காஞ்சிபுரத்துக்கும். ஈரோட்டில் இருந்து பெங்களூருவுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அரசு விரைவு போக்குவரத்து கழக முன்பதிவு மையம், இணையதளம் மற்றும் ஆப் மூலம் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இதேபோன்று ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை விடுமுறையை முன்னிட்டு சேலம் கேட்ட அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.