மேலும் அறிய

தமிழ்நாட்டில் நாளை சிறப்பு பூஜைக்கு தடையா..? அறநிலையத்துறை மறுப்பு..!

தமிழ்நாட்டில் நாளை சிறப்பு பூஜைக்கு தடை விதிக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு இந்து சமய அறநிலையத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் நாளை சிறப்பு பூஜைக்கு தடை விதிக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு இந்து சமய அறநிலையத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு கோயில்களில் ராமர் பெயரில் சிறப்பு பூஜைக்கு தடை விதிக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்து,  இந்து சமய அறநிலையத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

முன்னதாக, தமிழ்நாட்டில் நாளை சிறப்பு பூஜைக்கு தடை விதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது. இதையடுத்து பாஜகவை சேர்ந்த பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதுகுறித்து, பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “அரசியல் சட்ட பிரிவு 26 ன் படிஅரசு ஆன்மிக/பூஜை விஷயங்களில் தலையிட முடியாது. எனவே இந்துக்கள் தமிழக அரசின் இந்துவிரோத ஆணையினை புறம் தள்ளி பூஜைகள், அன்னதானம் ஆகியவற்றை மேற்கொள்வோம். தடுத்தால் தடையை உடைத்து நம் மத உரிமையை, கடமையை நிலை நிறுத்துவோம். ” என தெரிவித்திருந்தார்.

அதேபோல், பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “அயோத்தியில் ஸ்ரீராமர் கோயில் பிராண பிரதிஷ்டை நாளை நடைபெறவுள்ளது. இதனால் ஒட்டுமொத்த நாடும்  விழாக்கோலம் பூண்டுள்ளது. நம் தமிழகத்தில் கோயில்களில் சிறப்பு பூஜைகள், பக்திப் பாடல்களை கூட்டாகப் பாடும் பஜனை, அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஆன்மிக அமைப்புகள் மட்டுமல்லாது, பொதுமக்களும், பல்வேறு சமூக அமைப்புகளும் ஏற்பாடு செய்துள்ளன.

ஆனால், அயோத்தி ராமர் கோயில் திறக்கப்படும் நாளை கோயில்களில் சிறப்பு வழிபாடு, அன்னதானம் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சியையும் நடத்த அனுமதிக்கக் கூடாது திமுக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால், 'கோயில்களுக்கு வராதீர்கள்' என இந்துக்கள் அங்குள்ள மதச்சார்பற்ற அதிகாரிகளால் விரட்டப்படுகின்றனர். கோயில்கள் மட்டுமல்லாது திருமண மண்டபங்கள் உள்ளிட்ட தனியார் இடங்கள், கோயில்களுக்கு வெளியே பொது இடங்களில் ராமர் படம் வைத்து வழிபடவும், அன்னதானம் வழங்கவும் ராம பக்தர்களும், பொது மக்களும் ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால், திமுக அரசின் காவல் துறை அவர்களை அழைத்து, எந்த நிகழ்ச்சியும் நடத்தக் கூடாது என மிரட்டியுள்ளனர். எந்தவொரு ஜனநாயக ஆட்சியிலும் நடக்க முடியாத அட்டூழியம் இது.

அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மதச் சுதந்திரம், வழிபாட்டு உரிமை போன்ற அடிப்படை உரிமைகளுக்கு எதிராக திமுக அரசு செயல்படுகிறது. இது கடும் கண்டனத்திற்குரியது. இந்துக்களுக்கு திமுக அரசின் இந்த அராஜகங்கள் கொடுங்கோல் ஆக்கிரமிப்பாளன் அவுரங்கசீப் ஆட்சியை நினைவூட்டுகிறது. ராமர் கோயிலுக்காக 500 ஆண்டு காலம் போராடிய இந்துக்கள், ராமர் கோயில் திறப்பு நாளை கொண்டாடவும் போராட வேண்டியிருக்கிறது. பிரதமர் மோடி அவர்கள் மூன்று நாட்களாக தமிழகத்தில் ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் என பயணம் மேற்கொண்டதால் தமிழக மக்களிடம் ஏற்பட்டுள்ள எழுச்சியை அடக்க நினைக்கிறது திமுக அரசு. அடக்குமுறைகளால் மக்களின் பக்தி உணர்வை, ஆன்மிக எழுச்சியை தடுத்துவிட முடியாது என்பதை திமுக அரசு உணர வேண்டும்.

எனவே, நாளை கோயில்கள், திருமண மண்டபங்கள், பொது இடங்களில் சிறப்பு வழிபாடு, பஜனை, அன்னதானம் நடத்த திமுக அரசு தடை விதிக்கக் கூடாது. இதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள வாய்மொழி உத்தரவை இந்து சமய அறநிலையத்துறை திரும்பப்பெற வேண்டும். கோயில்கள், பொது இடங்களில் நாளை சிறப்பு வழிபாடு, விழாக்கள் நடத்த அன்னதானம் வழங்க தடை இல்லை என தமிழ்நாடு அரசு வெளிப்படையாக உடனே அறிவிக்க வேண்டும்” என குறிப்பிட்டு இருந்தார். 

இதன் காரணமாகவே, தமிழ்நாடு கோயில்களில் ராமர் பெயரில் சிறப்பு பூஜைக்கு தடை விதிக்கப்பட்டதாக வெளியான தகவல் தவறானது. அப்படியான எந்த அறிவிப்பும் கொடுக்கப்படவில்லை என அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

G V Prakash - Saindhavi: ஆம் நாங்கள் பிரிந்து விட்டோம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி!
G V Prakash - Saindhavi: ஆம் நாங்கள் பிரிந்து விட்டோம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி!
IPL 2024 GT vs KKR: வருண பகவான் போட்ட ஸ்கெட்ச்; பறிபோன GT-இன் ப்ளே ஆஃப் வாய்ப்பு; முதல் இடத்தை உறுதி செய்த KKR!
IPL 2024 GT vs KKR: வருண பகவான் போட்ட ஸ்கெட்ச்; பறிபோன GT-இன் ப்ளே ஆஃப் வாய்ப்பு; முதல் இடத்தை உறுதி செய்த KKR!
Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Savukku Shankar | Arvind Kejriwal Master Plan | ”டெல்லிக்கு கிளம்புங்க உதய்”பறந்து வந்த அழைப்பு..Rahul Gandhi Marriage | ராகுலுக்கு டும்..டும்..டும்..அக்கா பிரியங்கா ஹேப்பி!  MARRIAGE UPDATEVaaname Ellai | மாறும் LIFESTYLE : PHYSIOTHERAPHY படிப்புக்கு பெருகும் வேலைவாய்ப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
G V Prakash - Saindhavi: ஆம் நாங்கள் பிரிந்து விட்டோம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி!
G V Prakash - Saindhavi: ஆம் நாங்கள் பிரிந்து விட்டோம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி!
IPL 2024 GT vs KKR: வருண பகவான் போட்ட ஸ்கெட்ச்; பறிபோன GT-இன் ப்ளே ஆஃப் வாய்ப்பு; முதல் இடத்தை உறுதி செய்த KKR!
IPL 2024 GT vs KKR: வருண பகவான் போட்ட ஸ்கெட்ச்; பறிபோன GT-இன் ப்ளே ஆஃப் வாய்ப்பு; முதல் இடத்தை உறுதி செய்த KKR!
Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
Watch Video: இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
Watch video : கண்ணாடியில் உன் மூஞ்சியை பார்!  ஹீரோவாக ஆசைப்பட்ட நகுலுக்கு கிடைத்த முதல் கமெண்ட்..
கண்ணாடியில் உன் மூஞ்சியை பார்!  ஹீரோவாக ஆசைப்பட்ட நகுலுக்கு கிடைத்த முதல் கமெண்ட்..
En Kalloori Kanavu : என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? முழு விவரம் இதோ!
என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? விவரம்
Embed widget