Cyclone Mandous: தீவிர புயலாக சென்னையை நெருங்கும் மாண்டஸ் புயல்.. எப்போது வலுவிழக்கும் ? எந்த திசையில் நகரும் - முழு விவரம் இதோ..
தென்மேற்கு வங்க கடலில் சென்னைக்கு 270 கிலோமீட்டர் தொலைவில் மாண்டஸ் தீவிர புயல் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக இன்றும் நாளையும் மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்க கடலில் சென்னைக்கு 270 கிலோமீட்டர் தொலைவில் மாண்டஸ் தீவிர புயல் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக இன்றும் நாளையும் மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது அடுத்த 06 மணி நேரத்தில் தீவிரமான புயலின் தீவிரத்தை தக்கவைத்து அதன் பின்னர் படிப்படியாக வலுவிழந்து சூறாவளி புயலாக மாற வாய்ப்புள்ளது
தென்மேற்கு வங்கக்கடலில் தீவிர புயல் "Mandous" கடந்த 06 மணி நேரத்தில் 12 கி.மீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, டிசம்பர் 9, 2.30 மணி நேரத்தில் தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டிருந்தது.
இது திருகோணமலைக்கு வட-வடகிழக்கே சுமார் 240 கிமீ தொலைவில் (இலங்கை), யாழ்ப்பாணத்திலிருந்து 240 கிமீ கிழக்கு-வடகிழக்கே (இலங்கை), காரைக்காலில் இருந்து 240 கிமீ கிழக்கு-தென்கிழக்கே மற்றும் சுமார் 270 கிமீ தெற்கே- சென்னைக்கு தென்கிழக்கே மையம் கொண்டுள்ளது.
இது அடுத்த 06 மணி நேரத்தில் தீவிரமான புயலின் தீவிரத்தை தக்கவைத்து அதன் பின்னர் படிப்படியாக வலுவிழந்து சூறாவளி புயலாக மாற வாய்ப்புள்ளது இது தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடற்கரையை புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே மகாபலிபுரத்தை சுற்றி புயலாக இன்று நள்ளிரவில் மணிக்கு 65-75 கிமீ வேகத்தில் மணிக்கு 85 கிமீ வேகத்தில் வீசக்கூடும் மேலும், முதல் டிசம்பர் 10 அதிகாலை வரை கடல் கரையை கடக்கும்.
மாண்டஸ் புயல் தற்போது தீவிர புயலாக இருக்கும் நிலையில் இன்று மாலை வரையும் அதன் தீவிரத்தை தக்க வைத்து அதன் பிறகு புயலாக வலுவிழந்து கரையை கடக்க தொடங்கும். அதன் பின் புயலாகவே இருந்து நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து முழுவதுமாக கரையை கடக்கும்
கறையை கடக்க தொடங்கும் பொழுது காற்றின் வேகம் என்பது 75 ல் இருந்து 80 கி.மீ வேகத்திலும் இடையே 100 கி.மீ வேகத்தில் இருக்கும்
அதன் பிறகு காற்றின் வேகம் 70 லிருந்து 80 தாக குறைந்து படிப்படியாக 65 லிருந்து 75 கி.மீட்டர் வேகத்திலும்,
அதன் பிறகு முழுமையாக கரையை கடக்கும் பொழுது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் பொழுது 40லிருந்து 50 கிலோமீட்டர் வேகத்திற்கும் இடையே 60 கி.மீட்டர் வேகத்திலும் காற்று வீச கூடும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
மாண்டஸ் புயல் காரணமாக இன்று மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை
செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும் ஒரு சில இடங்களில் அதி கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ரேட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது