மேலும் அறிய
Advertisement
மஞ்சக்கொல்லையில் நடந்தது என்ன ? கொந்தளிப்பில் பாமக - விசிக; வெளியான அதிர்ச்சி தகவல்
அடுத்த 42 ஆண்டுகளுக்கு வன்னியர்கள் எங்களிடம் அடிவாங்கித் தான் ஆக வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் பேசியுள்ளனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுகாவில் வில்லியநல்லூர் அருகே உள்ள ஒரு கிராமம் தான் மஞ்சக்கொல்லை. இந்த கிராமத்தில் வன்னியர் சமுதாயத்தினர் அதிகமாக வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தில் இருந்து இரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் மற்றொரு கிராமம் தான் பு. உடையூர். இங்கே பட்டியலின மக்கள் அதிகமாக வசித்து வருகிறார்கள்.
மதுபோதையில் சரமாரி தாக்குதல்:
இந்த நிலையில், சென்னையில் வேலை செய்து கொண்டிருக்கும் மஞ்சக்கொல்லையைச் சேர்ந்த செல்லதுரை தீபாவளிக்காக தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார். இவர் நவம்பர் 1 ஆம் தேதி மாலை 7 மணியளவில் தனது சித்தப்பாவின் மகள் திருமணத்திற்காக பத்திரிகை வைக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். தனது தம்பியோடு பத்திரிகை வைத்துவிட்டு உடையூர் வழியாக தனது ஊருக்கு வந்து கொண்டிருந்த பொழுது ஆறு இளைஞர்கள் வழித்தடத்தில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நாங்கள் போக வேண்டும் எங்களுக்கு வழிவிடுங்கள் என்று செல்லதுரை அவர்களிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையில் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அங்கிருந்து கிளம்ப வேண்டும் என மீண்டும் வழி கேட்கவே செல்லத்துரைக்கும் மது அருந்தியவர்களுக்கும் வாய் தகராறு கைகலப்பாக மாறியுள்ளது. அதில் செல்லதுரை பலத்த காயங்களோடு முகத்திலும் உடலிலும் ரத்தம் வழிய செல்லத்துரை பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்துள்ளார். மேலும் அவரை தாக்கிய வீடியோவையும் வெளியிட்டுள்ளனர்.
போராட்டத்தில் குதித்த மக்கள்:
செல்லதுரை தாக்கப்பட்ட தகவல் காவல்துறைக்கு செல்ல, உடனடியாக போலீஸ் வந்து பார்த்தபோது செல்லதுரைக்கு ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. தகவல் அறிந்து மஞ்சக்கொல்லை கிராமத்து பொதுமக்களும் அங்கே திரண்டுள்ளனர். செல்லதுரையை ஆம்புலன்ஸில் ஏற்றி சிகிச்சைக்காக போலீஸ் அனுப்பி வைக்க போலீஸ் முயன்ற போது மஞ்சகொல்லையைச் சேர்ந்தவர்களோ ஆம்புலன்ஸை மறித்து, தாக்கியவர்களை கைது செய்தால்தான் ஆம்புலன்சை விடுவோம் என போராட்த்தில் ஈடுபட்டுள்ளனர்.மருத்துவமனைக்கு சென்ற போலீசார் தாக்கப்பட்ட செல்லதுரையிடம் விசாரித்து அவரது வாக்குமூலத்தைப் வீடியோவாக பதிவுசெய்து கொண்டனர். இந்த அடிப்படையில் செல்லதுரையை தாக்கிய பு.உடையூர் கிராம இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்து (வழக்கு எண் 330/2024). மறுநாள் நவம்பர் 2 ஆம் தேதி போலீஸார் கைது செய்தனர்.
உடைக்கப்பட்ட கொடிக்கம்பம்பங்கள் :
தாக்கப்பட்ட செல்லதுரை வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர், தாக்கிய புகாரில் கைது செய்யப்பட்டவர்கள் தலித் இளைஞர்கள். இந்த நிலையில், மறுநாள் நவம்பர் 3 ஆம் தேதி காலை பாமக கடலூர் தெற்கு மாவட்டச் செயலாளர் செல்வ மகேஷ், வன்னியர் சங்க மாநிலத் தலைவர் பு.தா. அருள்மொழி உள்ளிட்டோர் செல்லதுரை குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காக மஞ்சக்கொல்லை சென்றனர். அப்போது கோபம் அடைந்த வன்னியர் சங்கத்தினர் செல்லதுரையை தாக்கிய அனைவரையும் கைது செய்ய வேண்டும் திடீரென மஞ்சக்கொல்லையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் பு.தா.அருள்மொழி சென்றதும், அந்த ஊரைச் சேர்ந்த அருள் செல்வி இந்த ஊரில் எந்த கட்சி கொடி கம்பமும் வேண்டாம் என்று கத்திக் கொண்டே மஞ்சக்கொல்லையில் வைக்கப்பட்டிருந்த விசிக கொடிக்கம்பம், பாமக கொடிக்கம்பம் இரண்டையும் கடப்பாறையால் உடைக்க முயன்றிருக்கிறார். அதில் விசிக கொடி கம்பம் இடிக்கும் வீடியோ வெளியாகி வைரல் ஆனது.
விசிகவினர் சர்ச்சை பேச்சு:
மஞ்சக்கொல்லையில் வன்முறையை தூண்டும் வகையில் பேசிய அருள்மொழியை வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, நவம்பர் 4 ஆம் தேதி விசிகவினர் கடலூரில் ஆர்பாட்டம் நடத்தினார்கள். அந்த ஆர்பாட்டத்தில் விசிகவின் மாநில துணைச் செயலாளர் செல்வி முருகன், துணை மேயர் தாமரைச் செல்வன் மாவட்டச் செயலாளர் அறிவுடைநம்பி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில் செல்வி முருகன் பேசுகையில், விசிக கொடிக் கம்பத்தை அறுத்தவர்களின் கழுத்தை அறுப்போம். கலவரத்தைத் தூண்டும்படி பேசும் வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழியின் கழுத்தையும் அறுத்துருவோம் என்று பேசியுள்ளார். இதானல் பல்வேறு மாவட்டங்களில் பாமகவினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் தைலாபுரம் தோட்டத்தில் இருந்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கையை ஒன்றை வெளிட்டார்...
அதில், கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட இளைஞரின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறியதற்காக வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழியின் தலையை வெட்டுவோம் என்று விசிக நிர்வாகிகள் கொக்கரித்துள்ளனர் எனவும், செல்லத்துரையை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கொடூரமாக தாக்கி, ரத்தம் கொட்டும் நிலையில் அவர் சுய நினைவின்றி விழுந்து கிடப்பது, அவர் மீதும், அவரது உடை மீதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கால்களை வைத்து வன்னியர் சமூகத்தை அருவருக்கத்தக்க வகையில் பேசுவது, வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழியின் தலையை வெட்டுவோம் என்றும், அடுத்த 42 ஆண்டுகளுக்கு வன்னியர்கள் எங்களிடம் அடிவாங்கித் தான் ஆக வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் பேசியுள்ளனர்.
தமிழ்நாட்டின் ஏதேனும் பகுதியில் ஆளும்கட்சிக்கு எதிராக எவரேனும் மேடை போட்டு பேசினால், அந்த கூட்டத்தின் ஒலி வாங்கியை அணைப்பது, மின்சாரத்தை துண்டிப்பது, கூட்ட ஏற்பாட்டாளர்களை கைது செய்வது உள்ளிட்ட அனைத்து சாகசங்களையும் செய்யும் காவல்துறை, விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் கொக்கரிப்புகள், வெறுப்புப் பேச்சுகள், கொலைமிரட்டல்கள் உள்ளிட்ட அனைத்தையும் காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்திருக்கின்றனர். கொலை மிரட்டல் மற்றும் வெறுப்புப் பேச்சுகளுக்காக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகளை கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவரது அலுவலகத்தில் வைத்து 2 மணி நேரத்திற்கும் மேலாக பேச்சு நடத்தியுள்ளார். கைது செய்யப்பட வேண்டிய குற்றவாளிகளை, ஆளுங்கட்சிக்கு வேண்டியவர்களாக இருந்தால், அலுவலகத்திற்கு அழைத்து உபசரிப்பது தான் திராவிட மாடல் காவல்துறையின் கொள்கையா?
இந்த நிலையில் நேற்று நவம்பர் 7 தேதி, செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர் ராமதாஸ்,
கடலூர் மாவட்டத்தில் வன்னிய மக்கள் மீது இப்படி ஒரு வன்கொடுமை கட்டவிழ்த்து விடப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அதையெல்லாம் தட்டிக் கேட்க வேண்டிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், ரோம் நகரம் பற்றி எரிந்து கொண்டிருந்த போது ஃபிடில் வாசித்துக் கொண்டிருந்த நீரோ மன்னனைப் போல கோவையில் செந்தில் பாலாஜியின் ‘கம்பேக்’கை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்.
தமிழ்நாட்டின் குடிமகன் என்ற முறையில் செல்லத்துரைக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் முதல் ஆளாக கண்டித்திருக்க வேண்டும்; நீதி வழங்கியிருக்க வேண்டும். ஆனால், அவருக்குள் எப்போதும் எரிந்து கொண்டிருக்கும் வன்னியர் விரோத நெருப்பு அதைத் தடுத்து விட்டது. ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளையும், பொய்வழக்குகளையும் எதிர்கொள்வது பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒன்றும் புதிதல்ல.
பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்படுவதற்கு முன்பாகவே காவல்துறையை கட்டவிழ்த்து விட்டு எனது திண்டிவனம் வீட்டில் காவல்படைகளை குவித்து எனது வீட்டை சோதனை செய்ததாக செய்தி பரப்பியது, பு.தா. அருள்மொழி உள்ளிட்ட பலரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தது, விழுப்புரத்தில் பாட்டாளி தொழிற்சங்கம் நடத்திய பேரணியில் ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விட்டது, கடலூர் புதுச்சத்திரத்தில் இராஜேந்திரன் என்ற தொண்டரை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தது உள்ளிட்ட ஏராளமான அடக்குமுறைகளை 1989-ஆம் ஆண்டில் அன்றைய முதலமைச்சர் கலைஞர் கட்டவிழ்த்து விட்டார். அன்று தந்தை செய்ததை இன்று தனயன் செய்கிறார். அவ்வளவு தான்.
திமுக அரசின் அடக்குமுறைகளையும், பொய்வழக்குகளையும் முறியடிக்கும் திறனும், உறுதியும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு உண்டு. அதேநேரத்தில் வன்னியர்களுக்கு எதிராக தாக்குதல்களை கட்டவிழ்த்து விடும் கும்பலை வன்னியர் வன்ம மனநிலையுடன் ஆதரித்துக் கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுகவுக்கு பாட்டாளி மக்கள் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள் என்பது உறுதி என தெரிவித்தார்.
வட தமிழ்நாட்டில் கடந்த சில வருடமாக சாதி கலவரங்கள் இல்லாமல் சுமூகமாக இருந்தது. ஆனால் தற்பொழுது வட தமிழகம் முழுவதும் சாதி கலவரம் துண்டும் வகையில் உள்ளது. கடலூர் கலவரத்திற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்போது வரை தமிழக அரசு சார்பிலும் காவல்துறையினர் சார்பிலும் எந்த ஒரு அசைவும் இல்லாமல் உள்ளது.
இதுகுறித்து ஒருவர் நம்மிடம் கூறுகையில், கடந்த சில தினங்களுக்கு முன் விஜய் கட்சியின் மாநாட்டில் அதிக அளவில் விசிகவினர் பங்கேற்றதாக உளவுத்துறை தகவல் சென்றிருப்பதாகவும், அதனால் விசிக தற்போது தனது பலத்தை இழந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனை எப்படியாவது மாற்ற வேண்டும் எனவும் கூட்டணி கட்சிக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் திமுக தற்பொழுது வட தமிழகத்தில் ஏதாவது ஒரு பிரச்சனையை உண்டாக்கி விஜய் கட்சிக்கு சென்றவர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வர வைக்க வேண்டும் என்பதால் இதனை கையில் எடுத்துள்ளதாகவும் தகவல் தெரிவித்தார். கடலூர் பகுதியில் சில ஆண்டுகளாக சாதி சண்டைகள் இல்லாமல் சுமூகமாக வாழ்ந்திருந்த பகுதி தற்போது மீண்டும் பிரச்சனையை களமாக மாறி இருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
அரசியல்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion