மேலும் அறிய

Coronavirus Curfew in Tamil Nadu: தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்; டீ கடைகள், சலூன் திறக்கப்பட்டன!

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் மேலும் கூடுதல் தளர்வுகள் இன்று முதல் அமலானது.

கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன், ஜூன் 21ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்படுவதாக கடந்த 12ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். கொரோனா நோய்த் தொற்று தினசரி பாதிப்பு அதிகமுள்ள கோயம்பத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களைத்  தவிர்த்து இதர 27 மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்தன. 

27 மாவட்டங்களில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை டீ கடைகளை திறந்து பார்சல் முறையில் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, டீ கடைகள் திறக்கப்பட்டன. மக்கள் பாத்திரங்களை கொண்டு வந்து பார்சல் முறையில் தேநீர் பெற்றுக்கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது. 

எவற்றுக்கெல்லாம் அனுமதி?

* மின் பணியாளர் (Electricians), பிளம்பர்கள் (Plumbers), கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் (Motor Technicians) மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் சேவை கோருபவர் வீடுகளுக்குச் சென்று
பழுது நீக்கம் செய்ய காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இ-பதிவுடன் அனுமதிக்கப்படுவர் எனினும் இவ்வகைக் கடைகள் திறக்க அனுமதியில்லை.   

* மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் (விற்பனை கடைகள் அல்ல) காலை 9.00 மணி முதல் மதியம் அனுமதிக்கப்படும். 2.00 மணி வரை செயல்பட வாடகை வாகனங்கள். டேக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படும். மேலும், வாடகை டேக்ஸிகளில், ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படும்.

Petrol and diesel prices Today: பெட்ரோல், டீசல் விலை மீண்டும் அதிகரிப்பு

* வேளாண் உபகரணங்கள், பம்பு செட் (Pump set) பழுது நீக்கும் கடைகள் (விற்பனை கடைகள் அல்ல) காலை 9.00 மணி முதல் மதியம் அனுமதிக்கப்படும் 2.00 மணி வரை செயல்பட அனுமதி.

* கண்கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி செயல்பட அனுமதி.

* மண்பாண்டம் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதி.

* ஏற்றுமதி இடுபொருள் நிறுவனங்கள், தயாரித்து ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வழங்கும் நிறுவனங்கள் 25 சதவிகிதம் பணியாளர்களுடன் வழிகாட்டு நிலையான நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதி.

* அழகு நிலையங்கள், சலூன்கள் (Beauty Parlour, Saloons, Spas) குளிர் சாதன வசதி இல்லாமலும், ஒரு நேரத்தில் 50 சதவிகித வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதி.

Coronavirus Curfew in Tamil Nadu: தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்; டீ கடைகள், சலூன் திறக்கப்பட்டன!

* அரசு பூங்காக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்கள், விளையாட்டு திடல்களில் காலை 6.00 மணி முதல் காலை 9.00 நடைப்பயிற்சிக்காக மட்டும் அனுமதி.

* வேளாண் உபகரணங்கள், பம்பு செட் (Pump set) பழுது நீக்கும் கடைகள் (விற்பனை கடைகள் அல்ல) காலை 9.00 மணி முதல் 5 மணி வரை அனுமதி.

* மண்பாண்டம் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதி. மிக்சி, கிரைண்டர்,தொலைக்காட்சி போன்ற
வீட்டு உபயோக மின் பொருட்களின் பழுதுநீக்கும் கடைகள் காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை செயல்பட அனுமதி.

* டாஸ்மாக் கடைகள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதி. செல்பேசி மற்றும் அதனைச் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை செயல்பட அனுமதி.

* கட்டுமானப் காலை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் 9.00 மணி முதல் மதியம் 2.00  மணி வரை செயல்பட அனுமதி.

* வழிகாட்டும் நடைமுறைகளை பின்பற்றி தொழிற்சாலைகள் 33 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி. தொழிலாளர்கள் 4 சக்கர வாகனங்களுக்கு பதிலாக, தங்களுடைய 2 சக்கர வாகனங்களில் இ-பதிவு மற்றும் தொழிற்சாலை வழங்கியுள்ள அடையாள அட்டையுடன் பணிக்கு சென்றுவர அனுமதிக்கப்படுவர்.

* தகவல்தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் 20 சதவீத பணியாளர்களுடனும், வீட்டு வசதி நிறுவனம் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மற்றும் அனைத்து காப்பீட்டு நிறுவனங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.

* பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர்க்கைகான பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

* இனிப்பு - கார வகைகள் விற்பனை செய்யும் கடைகள் காலை 8 முதல் மதியம் 2 மணி வரை இயங்க அனுமதி. பார்சலுக்கு மட்டுமே  அனுமதிக்கப்படுகிறது.

* பொதுமக்களின் நலன் கருதி, அரசு அலுவலகங்களில் இருந்து சான்றிதழ்கள் மற்றும் சேவைகளை பெற இ-சேவை மையங்கள் இன்று முதல் இயங்க அனுமதி வழங்கப்படுகிறது.

இன்றைய ராசிபலன் 14.06.2021 |

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB vs CSK:
"மகேந்திர சிங் தோனி கிரீஸில் இருந்ததால்..." வெற்றிக்கு பின் திக் திக் நிமிடங்களை பகிர்ந்த ஆர்சிபி கேப்டன் ஃபாஃப்!
Rain Alert: ரெட் அலெர்ட் - இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு, எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? சென்னை நிலவரம்..
Rain Alert: ரெட் அலெர்ட் - இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு, எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? சென்னை நிலவரம்..
SRH Vs PBKS, IPL 2024: புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தை குறிவைக்கும் ஐதராபாத்..! பஞ்சாப் உடன் இன்று பலப்பரீட்சை
SRH Vs PBKS, IPL 2024: புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தை குறிவைக்கும் ஐதராபாத்..! பஞ்சாப் உடன் இன்று பலப்பரீட்சை
RCB vs CSK Match Highlights: இறுதி வரை திக் திக்.. CSK-வை வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற RCB!
RCB vs CSK Match Highlights: இறுதி வரை திக் திக்.. CSK-வை வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற RCB!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Mallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டிChennai's Amirtha Aviation | சென்னைஸ் அமிர்தா சர்வதேச விமானக் கல்லூரி படிக்கும் போதே 15000 சம்பளம்Sathyaraj in Modi Biopic | அப்போ பெரியார்  இப்போ மோடிஅதிர்ச்சி கொடுத்த சத்யராஜ் மகள் சொன்ன GOOD NEWS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB vs CSK:
"மகேந்திர சிங் தோனி கிரீஸில் இருந்ததால்..." வெற்றிக்கு பின் திக் திக் நிமிடங்களை பகிர்ந்த ஆர்சிபி கேப்டன் ஃபாஃப்!
Rain Alert: ரெட் அலெர்ட் - இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு, எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? சென்னை நிலவரம்..
Rain Alert: ரெட் அலெர்ட் - இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு, எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? சென்னை நிலவரம்..
SRH Vs PBKS, IPL 2024: புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தை குறிவைக்கும் ஐதராபாத்..! பஞ்சாப் உடன் இன்று பலப்பரீட்சை
SRH Vs PBKS, IPL 2024: புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தை குறிவைக்கும் ஐதராபாத்..! பஞ்சாப் உடன் இன்று பலப்பரீட்சை
RCB vs CSK Match Highlights: இறுதி வரை திக் திக்.. CSK-வை வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற RCB!
RCB vs CSK Match Highlights: இறுதி வரை திக் திக்.. CSK-வை வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற RCB!
Watch Video: பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய டு பிளெசிஸ் படை.. தீபாவளியாக மாறிய பெங்களூரு வீதிகள்..!
பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய டு பிளெசிஸ் படை.. தீபாவளியாக மாறிய பெங்களூரு வீதிகள்..!
IPL 2024: விராட் கோலி கப் அடிக்கணும்! ஆனால்..கமல் வைத்த ட்விஸ்ட்!
IPL 2024: விராட் கோலி கப் அடிக்கணும்! ஆனால்..கமல் வைத்த ட்விஸ்ட்!
Rasipalan: மிதுனத்துக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் ; கடகத்துக்கு தைரியம்- முழு ராசிபலன்கள் இதோ
Rasipalan: மிதுனத்துக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் ; கடகத்துக்கு தைரியம்- முழு ராசிபலன்கள் இதோ
Today Movies in TV, May 19: ஜெயிலர், டாக்டர், சலார்.. டிவியில் சண்டே ஸ்பெஷல் படங்கள் என்னென்ன தெரியுமா?
ஜெயிலர், டாக்டர், சலார்.. டிவியில் சண்டே ஸ்பெஷல் படங்கள் என்னென்ன தெரியுமா?
Embed widget