மேலும் அறிய

கட்டுமானப் பொருட்கள் கடும் விலை உயர்வு; பதுக்கல் காரணமா? அரசு உடனே தலையிட கோரிக்கை

விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர மற்றும் ஏழை எளிய குடும்பங்களின் சொந்த வீடு கட்டும் கனவு தற்போது கேள்விக்குறி ஆகியுள்ளது- ராமதாஸ்.

சிமெண்ட், ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வு காரணமாக மக்களின் வீட்டுக் கனவும், தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

’’தமிழகத்தில் ஜல்லி, எம்-சாண்ட், பி-சாண்ட், சிமெண்ட், இரும்புக் கம்பி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்கள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களிடையே கடும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

100% வரை உயர்வு

ஏற்கனவே விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர மற்றும் ஏழை எளிய குடும்பங்களின் சொந்த வீடு கட்டும் கனவு தற்போது கேள்விக்குறி ஆகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் கட்டுமானப் பொருட்களின் விலை 40% முதல் 100% வரை உயர்ந்துள்ளதால், ஒரு சாதாரண வீடு கட்டுவதற்கான செலவு பல லட்சம் ரூபாய் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் விவசாயத் துறைக்கு அடுத்தபடியாக அதிக வேலைவாய்ப்பை வழங்கும் கட்டுமானத் துறையை நம்பி இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். கட்டுமானப் பணிகள் குறையும் சூழல் உருவானால், தொழிலாளர்களின் வேலைவாய்ப்பும் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பதுக்கல் மற்றும் சந்தை முறைகேடுகள் காரணமா?

இந்த விலை உயர்வுக்கு எரிபொருள் விலை உயர்வு, போக்குவரத்து செலவு அதிகரிப்பு, உற்பத்திச் செலவுகள் உயர்வு போன்ற காரணங்கள் கூறப்பட்டாலும், செயற்கைப் பற்றாக்குறை, பதுக்கல் மற்றும் சந்தை முறைகேடுகள் உள்ளனவா என்பதையும் தமிழக அரசு உடனடியாக விசாரிக்க வேண்டும்.

கட்டுமானப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதேபோல் எரிபொருள் மற்றும் போக்குவரத்து செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசும் மேற்கொள்ள வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிடக் கோரிக்கை

மக்களின் சொந்த வீட்டுக் கனவு சிதையக் கூடாது; லட்சக்கணக்கான கட்டுமானத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது; மாநிலத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் கட்டுமானத் துறை முடங்கக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’’.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Vijay on Vietnam Tragedy: வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
இனி 2.5 மணி நேரத்தில் புதுச்சேரி போயிடலாம்.. செம்ம ஸ்பீடில் ரெடியாகும் ECR 4 வழிச்சாலை!
இனி 2.5 மணி நேரத்தில் புதுச்சேரி போயிடலாம்.. செம்ம ஸ்பீடில் ரெடியாகும் ECR 4 வழிச்சாலை!
"உங்க கட்சியினரை ஒழுங்கா வச்சுகிட்டா ஏன் வர்றாங்க?" - புதுச்சேரி மேடையில் அதிமுக-வை வாரிச் சுருட்டிய அமைச்சர் ஆனந்த்!
Thanjavur power cut 14.07.2026:
Thanjavur power cut 14.07.2026: "திங்கட்கிழமை சார்ஜிங் திருவிழாங்கோ...... செவ்வாய்க்கிழமை தஞ்சையில் கரண்ட் லீவ்!"
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay on Vietnam Tragedy: வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
Vietnam Boat Tragedy: தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
ADMK: பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
Mojtaba Threatening Statement: 'எங்கள் தேசம் பழிவாங்கக் காத்திருக்கிறது'; ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபாவின் அறிக்கையால் பரபரப்பு
'எங்கள் தேசம் பழிவாங்கக் காத்திருக்கிறது'; ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபாவின் அறிக்கையால் பரபரப்பு
US Iran War: ‘1000 ஏவுகணைகள் ரெடியா இருக்கு“-வார்னிங் விட்ட ட்ரம்ப்; டெஹ்ரானில் திடீரென வெடித்த குண்டு; பதற்றம்
‘1000 ஏவுகணைகள் ரெடியா இருக்கு“-வார்னிங் விட்ட ட்ரம்ப்; டெஹ்ரானில் திடீரென வெடித்த குண்டு; பதற்றம்
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
Trump Vs Iran: ”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
Embed widget