Karti Chidambaram: "எத்தனை முறை ரெய்டு... இது ஒரு சாதனை" : சிபிஐ ரெய்டு தொடர்பாக கார்த்தி கிண்டல் ட்வீட் !
காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில் சிபிஐ தற்போது ரெய்டு நடத்தி வருகிறது.
காங்கிரஸ் எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம் வீட்டில் சிபிஐ இன்று காலை முதல் ரெய்டு நடத்தி வருகின்றனர். கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான 7 இடங்களில் சிபிஐ தற்போது ரெய்டு நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்த சிபிஐ ரெய்டு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் ஒரு ட்வீட் செய்துள்ளார்.
I have lost count, how many times has it been? Must be a record.
— Karti P Chidambaram (@KartiPC) May 17, 2022
அதில், “என்னுடைய வீட்டில் எத்தனை முறை சோதனை நடத்துவார்கள்? அந்த எண்ணிக்கையையே நான் மறந்துவிட்டேன். ரெய்டில் இது ஒரு சாதனையாக இருக்கும்” எனப் பதிவிட்டுள்ளார்.
கார்த்தி சிதம்பரத்தின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் தற்போது சோதனை நடைபெற்று வருகிறது. கார்த்தி சிதம்பரம் மீதான புகாரில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ப. சிதம்பரம் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.
ஆதாரங்களின் படி, கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக சட்டவிரோதமாக செயல்பட்டதாக விசாரணை கமிட்டி இவர் மீது புதிய வழக்கை பதிவு செய்துள்ளது. 2010-14 க்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் பஞ்சாபில் ஒரு மின் திட்டத்திற்காக 250 சீன பயனர்களின் விசாவை எளிதாக்குவதற்கு காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் ரூ. 50 லட்சம் லஞ்சம் பெற்றதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றனர்.
அவரது தந்தை ப சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது 305 கோடி ரூபாய் அளவுக்கு வெளிநாட்டு நிதியைப் பெற்றதற்காக ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (எஃப்ஐபிபி) அனுமதி வழங்கியது உட்பட பல வழக்குகளில் கார்த்தி சிதம்பரம் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
2019 ஆம் ஆண்டு ஊழல் மற்றும் பணமோசடி வழக்கில் சிதம்பரம் அவரது இல்லத்தில் இருந்து சிபிஐயால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்