மேலும் அறிய

தமிழ்நாட்டில் பயங்கர பிளானுடன் களமிறங்கும் காங்கிரஸ்.. தேர்தல் குழு அமைத்து அதிரடி..!

மக்களவை தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில், 35 பேர் கொண்ட தமிழ்நாடு தேர்தல் குழுவை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி இன்று வெளியிட்டுள்ளது. 

மக்களவை தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில், தமிழ்நாடு தேர்தல் குழுவை அமைத்து காங்கிரஸ் மேலிடம் அதிரடி காட்டியுள்ளது. 35 பேர் கொண்ட தமிழ்நாடு தேர்தல் குழுவை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி இன்று வெளியிட்டுள்ளது. 

தேர்தலுக்கு தயாரான காங்கிரஸ்:

அதில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், காங்கிரஸ் சட்டப்பேரவை குழு தலைவர் செல்வப்பெருந்தகை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோதிமணி, மாணிக்கம் தாகூர், திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களை தவிர தமிழ்நாடு இளைஞர்கள் காங்கிரஸ் தலைவர், தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் தலைவர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

இந்தியாவில் அரசியல் முக்கியத்தும் வாய்ந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்குவங்கம், பிகார் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தபடியாக அதிக மக்களவை உறுப்பினர்களை கொண்டுள்ள மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. புதுச்சேரியோடு சேர்த்து தமிழ்நாட்டில் 40 மக்களவை இடங்கள் உள்ளன.

எனவே, தேசிய கட்சிகளுக்கு தமிழ்நாட்டில் உள்ள மக்களவை இடங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. இதில், பாஜகவை பொறுத்தவரை, கூட்டணி இன்னும் இறுதியாகவில்லை. அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வந்த நிலையில், கடந்தாண்டு பாஜக - அதிமுக கூட்டணி முறிந்துவிட்டது.

தமிழ்நாட்டில் பயங்கர பிளானுடன் களமிறங்கும் காங்கிரஸ்:

கடந்த 2019 மக்களவை தேர்தலில் பாஜகவும் அதிமுகவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஆனால், இந்த கூட்டணி, தேனியை தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது. ஆனால், காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில், திமுக தலைமையிலான வலுவான கூட்டணியில் இடம்பெற்றுள்ளது.

திமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ள கூட்டணி, கடந்த தேர்தலை போல இந்த முறையும் பெரும்பாலான தொகுதிகளையும் கைப்பற்றும் என கூறப்படுகிறது. கடந்த முறை புதுச்சேரியை தவிர்த்து 9 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டது. தேனியை தவிர அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றிபெற்றது.

கடந்த தேர்தலை போல இந்த தேர்தலிலும் புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் வரை காங்கிரஸ் கேட்கலாம் என்றும் அதில் 8 தொகுதிகள் வரை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த மாத இறுதிக்குள் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் எண்ணிக்கை வெளியிடப்படலாம் என காங்கிரஸ் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில், தமிழ்நாடு தேர்தல் குழுவை அமைத்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 35 பேர் கொண்ட தமிழ்நாடு தேர்தல் குழுவில் கே.எஸ். அழகிரி, குமரி அனந்தன், சிதம்பரம், செல்வப்பெருந்தகை, ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget